Sunday, October 1, 2023

தச்சநல்லூர் கிறிஸ்தவ பாதிரி ஜெகன்-சர்ச்பெண் தற்கொலை முயற்சி

40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் – பாதிரியார் மீது புகார்

https://www.maalaimalar.com/news/state/woman-who-tried-to-commit-suicide-by-taking-40-sleeping-pills-complaint-against-priest-for-sexually-harassing-her-on-phone-669415

குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்(வயது 39). இவர் பாதிரியாராக இருந்து வருகிறார். நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் சொந்தமாக கிறிஸ்தவ சபை கட்டி போதகம் செய்து வருகிறார். இவரது சபைக்கு சில ஆண்டுகளாக 40 வயது பெண் ஒருவர் வந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக அவரிடம் கைபேசி எண்ணை ஜெகன் வாங்கி உள்ளார். எப்போதாவது கைபேசியில் பேசி வந்த ஜெகன், காலப்போக்கில் அந்த பெண்ணுக்கு அடிக்கடி கைபேசி செய்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. ஒரு மகன் மட்டுமே உள்ளார் என்பதை அறிந்த மதபோதகர் அந்த பெண்ணிடம் ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அந்த பெண் நேற்று மாலையில் வீட்டில் இருந்த 40 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை விசாரணை நடத்தி, பாதிரியார் ஜெகன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்வதற்காக அவர் தங்கியிருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து தலைமறைவான ஜெகனை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.


 

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...