எனக்கு ஒண்ணுமே தெரியாதுனு சொல்ற அமீருக்கு வயசு 56. பேரன் பேத்தி எடுத்துட்டாரா தெரியாது. அது சொந்த விஷயம் , ஆகவே வேண்டாம்.
ஆடு அமீர் : அறவே தெரியாது. அது எப்படிடா பழகாதவங்கள பத்தியெல்லாம் கூட இருந்து பாத்தது போல பத்து பக்கத்துக்கு பேசுற. ஆனா கூடவே பழகுன ஆள பத்தி சுத்தமா தெரியாதுனு கதவிடுற? ஊர்ல உள்ள பொண்ணுங்கள பத்தியும் அவங்க நடத்தை பத்தியும் திண்ணையில் உட்கார்ந்து கதகதயா அளக்குறவன் அவன் பொண்டாட்டி யார் கூட போறானே தெரியாம இருந்தானாம். அது போல இருக்குடா உன்கதை. ஆமா பிஸ்னஸ் பார்ட்னர பத்தி மட்டும் தான் தெரியாதா? இல்ல லைஃப் பார்ட்னர பத்தியும் தெரியாதா???
2000ல சினிமாக்கு வர்றாரு. 2020 வரைக்கும் 20 வருசத்துல, 4 படம் தான் இயக்கி இருக்காரு. மெளனம் பேசியதே 2002, ராம் 2005, பருத்திவீரன் 2007, ஆதிபகவன் 2013.
20 வருசத்துல 3 படம் தயாரிச்சிருக்கிறாரு. ராம் 2005, யோகி 2009, அச்சமில்லை அச்சமில்லை (2018).
ராம் ல தயாரிப்பாளர் வேறு ஒருவர், பெயரளவில் இவர் தயாரிப்பாளர். யோகியும் அப்படியே , பெரும் நஷ்டம். அச்சமில்லை அச்சமில்லை வெளிவரவே இல்லை.
நடிப்புனு பார்த்தா சிறு சிறு வேடங்கள தவிர்த்து 2 படம்.
அவரோட மொத்த வருமானம் 20 வருசத்துல மெளனம் பேசியதே , ராம் இரண்டு படங்களோட டைரக்டர் சம்பளம் தான். மொத்தமா 5 லட்சம் இருக்கலாம். அதை எல்லாத்சையுமே 2007 லயே பருத்திவீரன்ல தொலைச்சிட்டு ரோட்டுக்கு வந்துட்டதா அவரே சொல்லிருக்காரு.
அவருக்கு வேறு சொத்தும்க இல்லை. அரிசி கடையில் சாக்கு மூட்டை தைக்கும் தொழிலில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர்.
பருத்தி வீரன் படத்துக்கு பிறகு தொடர் தோல்வியே. வருமானம் சுத்தமாக இல்லை.
நம்ம கேள்வி 20 வருசமா பங்களா வாசம், புது புது கார்கள், தினம் ஒரு புது துணி ஆடம்பர சினிமா வாழ்க்கை, இது எப்படி சாத்தியம்?
அப்படியே 2021 க்கு வந்தா, இதுவரை வந்த தகவல் படி ஒரு இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம், இரண்டு பெரிய ஸ்டார் ரக காபி கிளப்புகள், இரண்டு புதிய படங்கள் தயாரிக்கிறார். பல பல கோடிகள் முதலீடு. இந்த பணம் எப்படி வந்தது?
பிற கேள்விகளும் அவருக்கு இருக்கின்றன.
ஒரு கூட்டத்தில் ஜாபர் சாதிக், என் உறவினர்னு நீங்களே சொல்லி இருக்கீங்க, உண்மையா?
ஜாபரும் நீங்களும் பத்து வருடங்களுக்கு மேலான நட்பு, 4 வருடங்களாக பல வியாபார நிறுவனங்களில் பார்ட்னர்கள். எப்பொழுதும் எங்கும் ஒன்றாக போக வர இருப்பவர்கள். அவரைத் தெரியவே தெரியாது என்பது போல மறுப்பது ஏன்?
நீங்களும் ஜாபரும் சேர்ந்து நடத்தும் உணவு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மூன்று வருடங்களாக என்ன இறக்குமதி ஏற்றுமதி செய்தீர்கள்?
எல்லா உணவகங்களும் காலை 10 மணிக்கு துவங்கி இரவுக்குள் மூடி விடும் நிலையில், உங்கள் காபி கிளப்புகள் நள்ளிரவில் நடக்கும் மர்மம் என்ன?
ஜாபர் கைதானது முதல் உங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணைய தளங்களை நீங்களே அவசரமாக முடக்கியது ஏன்?
காவல்துறை வந்தால் கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயார் என்பதெல்லாம் இல்லை. சொல்லித்தான் ஆகனும்.
அதற்கு முன்பாக மக்கள் காக்க போராளியாக காட்டிக் கொண்ட நீங்கள் அந்த மக்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
வரி ஏய்ப்போ நிதி மோசடியோ குற்ற அளவு வேறு, குறைவு. ஆனால் நீங்கள் தொடர்பு பட்டிருப்பது முழு இளைஞர்களையும் பல குடும்பங்களையும், மொத்த இனத்தையுமே மண்ணோடு மண்ணாக்கும் நாசகார போதை மருந்து.
https://www.hindutamil.in/news/crime/1208658-former-dmk-executive-jaffer-sadiq-s-chennai-house-sealed-by-delhi-police-1.html
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டுக்கு `சீல்' வைப்பு
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், அங்கிருந்த ஆவணங்களை அள்ளிச் சென்றனர். மேலும், வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த 15-ம் தேதி அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.
கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்டஅயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவரையும், அவரதுகூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி. பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்குநிகராக போதை தரக்கூடியது மெத்தாம்பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.
இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார்.
இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment