In a development regarding the Sathankulam murder case, Seva Bharathi, a social service organization, approached the Madras High Court seeking a ban on news aired by the Karappar Kootam YouTube channel. Rabu Manohar, the President of Seva Bharathi, filed a defamation suit against Karuppar Kootam and demanded compensation of ₹1 crore for maligning Seva Bharti’s image by falsely implicating the organisation in the Sathankulam custodial death case.
The complaint was filed in 2020 with the Deputy Commissioner of Police, Kilpauk Zone, Chennai, against false allegations made by Karuppar Kootam channel linking the organisation to the custodial deaths of Jayaraj and Benix in Sathankulam, Tamil Nadu. The complaint addresses three videos falsely claiming Seva Bharathi collaborated with the police in the incident. Seva Bharathi asserted it has no presence in Sathankulam, and the accusations lack specifics about individuals or locations. The organization, known for impartial disaster relief, perceived the smear campaign as an attempt to undermine its reputation. Seva Bharathi called for legal action, urging the police to register a case under the Indian Penal Code and the Information Technology Act, requesting the ban of the channels and removal of the videos.
Justice Satish Kumar took cognizance of the case and directed an investigation. The court also issued a notice to the Karappar Kootam channel, instructing them to respond to the allegations. To date, Karuppar Kootam has not provided any response on behalf of the channel.
Owing to the lack of cooperation, Justice Satish Kumar ordered the channel to pay ₹1 crore as compensation to Seva Bharathi. Additionally, the court directed that Karuppar Kootam refrain from discussing or reporting on Seva Bharathi in any manner.
‘கருப்பர் தேசம்’ யூடியூப் சேனலுக்கு 1 கோடியே 1,000 ரூபாய் அபராதம்... உயர்நீதிமன்றம் உத்தரவு! -காமதேனு-Updated on: 09 Mar 2024, 10:01 am
சேவா பாரதி அறக்கட்டளை குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் தேசம் யூடியூப் சேனலுக்கு 1.01 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவர் கருப்பர் தேசம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு போலீஸார் அவர்களை அடித்து துன்புறுத்திய நிலையில், படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கருப்பர் தேசம் யூடியூப் சேனலில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இதில் சுரேந்திரன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அங்கமான சேவா பாரதி அமைப்பு குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து சுரேந்திரன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவா பாரதி தமிழ்நாடு அறக்கட்டளை தலைவரான வழக்கறிஞர் ரபு மனோகர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'ஆர்.எஸ்.எஸ்.இன் அங்கமான எங்களது சேவபாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறோம். இதனால் எங்கள் அமைப்புக்கு மக்களிடம் நல்ல பெயர் உள்ளது. இந்நிலையில் கருப்பர் தேசம் என்று யூடியூப் சேனலை நடத்தி வரும் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், சேவாபாரதி அமைப்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார். சாத்தான்குளம் போலீஸாரால் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்குடன், சேவா பாரதி அமைப்பை தொடர்புப்படுத்தி பொய்த் தகவலைப் பரப்பி வீடியோ பதிவிட்டுள்ளார். எனவே அவர் எங்கள் அமைப்புக்கு ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான சேவா பாரதி
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்க எதிர் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் எதிர் தரப்பில் பதில் எதுவும் அளிக்கவில்லை. இதையடுத்து மனுதாரர் கோரியுள்ள ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக, வழக்கு தொடர்ந்த நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் கருப்பர் தேசம் யூடியூப் சேனலை நிர்வாகித்து சுரேந்திரன், சேவாபாரதி அறக்கட்டளை அமைப்பிற்கு வழங்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார். மேலும் சேவா பாரதி அமைப்பு குறித்து சுரேந்திரன் பேசுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.
Sevabharati files complaint with Police Authorities for the malicious propaganda by alleging the organisation
July 05, 2020
Shri B. Rabu Manohar, President of Seva Bharati, Uttar Tamil Nadu has lodged a complaint with Deputy Commissioner of Police, Kilpauk Zone, Chennai for the malicious propaganda unleashed with a criminal intent to defame Seva Bharati by alleging the organisation to have joined hands with the cops in the custodial death of the father (Jayaraj) and son (Benix) duo in Sathankulam, Thoottukudi, Tamil Nadu.
The summary of the complaint is as follows:
To begin with, the complaint draws attention of the Police Authorities to the following three Videos played over in YouTube:
Malicious Propaganda over You Tube and Social Media:
1) திரு மனோஜ்குமார் – கருப்பர் கூட்டம் - எச்சரிக்கை !! யார் இந்த சேவா பாரதி - Friends of Police – RSS
(Manojkumar- Karuppar Koottam- Caution: Who is this Seva Bharati- Friends of Police- RSS)- running for 4 mins 45 secs- 19618 views as on 1st July 2020
2) திரு திருமாவளவன் - சாத்தான்குளம் படுகொலையில் RSS பின்னணி –
(Mr. Thirumavalavan- RSS is in the background of Sathankulam Murder)- running for 3 mins 53 secs -3323 views as on 30th June 2020
3) Ms. சுந்தரவள்ளி - காக்கிச் சட்டையோடு கை கோர்த்த சங்கிகள்
(Ms Sundaravalli- Sanghis joined hands with Khakkis)- running for 15 mins 39 secs -25542 views as on 30th June 2020
The common refrain of all the three above mentioned videos are that the Seva Bharati members in the garb of Friends of Police have actively collaborated with the accused cops of Sathankulam Police station in the killing of the father- son duo.
In fact, there is no organization of Seva Bharati in the Sathankulam. Seva Bharati, in the name of Friends of Police, did not work with the police in any police station in Tamil Nadu. None of the three videos accuse about a specific person of Seva Bharati and in which place did the person was associated in Seva Bharati service activities or in which unit of Friends of Police.
The forces inimical to Seva Bharati deliberately spread the canard just out of their frustration and realisation arising out of the fact Seva Bharati has earned enormous good will over the last thirty plus years. Particularly Seva Bharati has a reputation of serving the common public without any bias of caste, creed ,religion or language in times of disasters or natural calamities throughout the nation. In Tamil Nadu, during the days of Tsunami in 2004, Great Floods of Chennai in, Cyclones of various years for it’s selfless service Seva Bharati was appreciated even by it’s critics. Currently, in the testing times of Covid 19, both the North and South Tamil Nadu units of Seva Bharati is in the forefront of service from day one.
The above videos clearly exhibit the intention of the persons and their group to tarnish image of the Seva Bharati and tries to divide the people on the basis of religion. Further they try to influence the course of CBCID investigation. It gives rise to a suspicion as to whether they are trying to save the real culprits.
Therefore, Seva Bharati urges the Police to register a case under the Indian Penal Code and the Information Technology Act and further take suitable action through the relevant legal authorities to ban all the three channels and remove the videos from the website.
ஜூலை 04, 2020
தமிழ்நாடு சேவாபாரதி மீது பொய் பிரச்சாரம் செய்யும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தொல். திருமாவளவன், மற்றும் சுந்தரவள்ளி, மனோஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று சென்னை கீழ்பாக்கம் சரக காவல் துணை ஆணையாளரைச் சந்தித்து மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேவாபாரதி தமிழ்நாடு மாநில தலைவர் B. ரபு மனோகர் புகார் மனு அளித்துள்ளார்.
அதன் நகல் இணைத்து ஊடகத்தில் வெளியிட இது சம்பந்தமாக தங்கள் மேலும் அறிந்துக் கொள்ள வேண்டி இருப்பின் சேவாபாரதி தமிழ்நாடு மாநில தலைவர் திரு B. ரபு மனோகர் அவர்கள் கானொலி மூலம் பேட்டி கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவருடைய அலைபேசி எண்: 93818 62375. தொடர்பு கொள்ள வேண்டி கா. சீனிவாசன் மாநில அமைப்புச் செயலாளர் தகவல் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவில்
அனுப்புனர்
B. ரபு மனோகர்
மாநில தலைவர், சேவாபாரதி தமிழ்நாடு 79,
டாக்டர் அழகப்பா சாலை, புரசைவாக்கம், சென்னை – 600 084.
பெறுநர், காவல் துணை ஆணையாளர்
கீழ்பாக்கம் காவல் மாவட்டம் சென்னை ஐயா,
பொருள்:- சாத்தான்குளம் காவல்நிலையம் - தூத்துக்குடி மாவட்டம் - இருவர் இறந்தது - போலீசார் மீது வழக்கு விசாரணை - CBCID விசாரணை - சேவா பாரதி - RSS மீது குற்ற உணர்வுடன் (Criminal intention and Ulterior motive to divert the investigation in Sathankulam case) - பொய்ச் செய்தி பரப்பும் நபர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும் - Youtube videoவலைதளத்தில் இருந்து நீக்கவும் - முதல் தகவலறிக்கை பதிவு செய்து வழக்கு விசாரணை செய்ய கோருதல் - தொடர்பாக பொய் செய்தி பரப்பு You Tube சேனல்கள் 1) திரு மனோஜ்குமார் – கருப்பர் கூட்டம் - எச்சரிக்கை !! யார் இந்த சேவா பாரதி - Friends of Police – RSS https://www.youtube.com/watch?v=Z1wsRGotUu8&feature=youtu.be 2) திரு திருமாவளவன் - சாத்தான்குளம் படுகொலையில் RSS பின்னணி – https://www.youtube.com/watch?v=WIrXAh6tUO4&fbclid=IwAR21QRRzGVQgIeZgXhP0mnNilZGNsh2kGEk4hkqKLv49nfFpzhmERzjHJOo 3) Ms. சுந்தரவள்ளி - காக்கிச் சட்டையோடு கை கோர்த்த சங்கிகள் https://www.youtube.com/watch?v=WHs9LYU_QwM&feature=youtu.be வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் நேற்று 03.07.2020 மேற்படி மூன்று வீடியோகளையும் பார்த்தேன். மேற்படி வீடியோக்கள் முழுவதும் பொய்யான தகவலும் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை திசை திருப்பும் விதமாக குற்ற மனப்பான்மையுடன் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. மேற்படி நபர்கள் வீடியோவில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு இறந்துபோன வழக்கு விசாரணை மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்றத்தால் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மேற்படி CBCID போலீசார் விசாரணையை திசைதிருப்பும் நோக்கிலும் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கிலும் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து திசைதிருப்பி விடுகிறார்கள். உண்மையில் சாத்தான்குளத்தில் சேவா பாரதி என்ற அமைப்பே இல்லை. தமிழகத்தில் எந்த காவல்நிலையத்திலும் போலீசாருடன் இணைந்து காவல்நிலையத்திற்குள் Friends of Police என்ற பெயரில் சேவா பாரதி அமைப்பினர் பணிசெய்யவே இல்லை. மேற்படி வீடியோவிலும் அதை பதிவிட்ட நபர் யார் எந்த ஊரைச்சேர்ந்த சேவா பாரதியினர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் Friends of Police ஆக பணியாற்றுகிறார் என்று கூறவில்லை. பொதுவான குற்றச்சாட்டை வேண்டுமென்றே தவறான உள்நோக்கத்தில் பரப்பி விடுகிறார்கள். கொரோனா என்ற கொடிய நோய் தீவிரமாக பரவி வரும் இக்கட்டான காலகட்டத்தில் பலரும் காவல்துறையினருடன் இணைந்து பொது இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல், பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் போன்ற பணிகளை சேவாபாரதி அமைப்பு தமிழகம் முழுவதும் செய்து வந்தது. மேலும் சுனாமி, வெள்ளம், புயல் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் சேவா பாரதி அமைப்பினர் பல லட்சம் பேருக்கு உணவு மற்றும் அடிப்படை தேவைகளை செய்துவந்தனர் என்பது வெளிப்படையான உண்மை. கொரோனா காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் பல லட்சம் பொதுமக்களுக்கு மற்றும் மருவத்துவமனையில் உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிகளையும் சேவா பாரதி அமைப்பினர் செய்து வந்தனர். மேற்படி செய்தி ஊடகங்களிலும் செய்தி தாள்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சேவா பாரதி அமைப்பின் மீது பொதுமக்களுக்கு நற்பெயரும் மரியாதையும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் சேவா பாரதி அமைப்பிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் மேற்படி அமைப்பை சாத்தான்குளம் காவல்நிலையம் கொலைவழக்கில் வழக்கு விசாரணையை திசைதிருப்பும் விதமாகவும் பொய்யான தகவல்களை மக்களுக்கு அளித்து இரண்டு பிரிவினர்களிடையே கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து அதன் மூலம் லாபம் அடைய துடிக்கும் மேற்படி வீடியோகளை பதிவு செய்த நபர்கள் மீதும் அதற்கு காரணமானவர்கள் மீதும் அதனை தூண்டியவர்கள் மீதும் சட்டப்படியான முதல்நோக்கு வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. எனவே மேற்படி மூன்று சேனல்களையும் தடைசெய்து வீடியோகளை வலைதளத்தில் இருந்து நீக்கவும் மேற்படி பொய்தகவலை பரப்பிய, தூண்டிய, உடந்தையாக இருந்த அனைவர் மீதும் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் Information Technology Act மற்றும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பணிவுடன் வேண்டுகிறேன். மேற்படி வீடியோவில் திருநெல்வேலி நகரத்தில் வெளியிடப்பட்டதாக சொல்லியுள்ள ஒரு சுவரொட்டியை காட்டி விசாரணையை திசை திருப்ப முயற்சி செய்துள்ளார். சாத்தான்குளம் காவல்நிலைய இருவர் மரணம் தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இல்லாத சூழலில் சம்பந்தம் இல்லாத செய்திகளை மேற்படி குற்றச்சம்பவத்துடன் தொடர்புபடுத்தி பொதுமக்களிடையே தவறான தகவல்களை பரப்புதல் குற்றம் என தெரிந்தே செய்துள்ளார். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இத்துடன் மேற்படி Youtube சேனல்களின் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோகளை இத்துடன் இணைத்துள்ளேன். சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த பணிவுடன் வேண்டுகிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள (B. ரபு மனோகர்) இடம்: புரசைவாக்கம் நாள்: 04.07.2020 என்ற விபரம் வரவே நாம் உண்மை அறிந்து பின் பதிவு
No comments:
Post a Comment