பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
புதுடில்லி, நவ.8-
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கத்தோலிக்ககிறிஸ் தவப் பள்ளிகளில் ஆசிரியர்களா கப் பணியாற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின்சம்பளத்தில் வருமான வரிப்பிடித்தம் செய்யப் படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, வருமான வரித்துறை, சம்பளப் பணத்தில் வரிப்பிடித்தம் செய்ய சில நடவடிக்கைகளைத் தொடங்கியது. அதை எதிர்த்து, ஐகோர்ட்டில் பள்ளி நிர்வாகங்கள் முறையிட்டன. விசாரித்த தனி நீதிபதி, வரிப்பிடித்தம் செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்தார். அதை எதிர்த்த வருமான வரித் துறை அப்பீலை விசாரித்த ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது. ‘பாதிரியார்கள் மற்றும் கன்னி - யாஸ்திரிகளாக இருப்பவர்கள், ஆசிரியர் பணிக்காகப் பெறும்
சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
சம்பளம், வருமானம் என்ற வகை ப்பிரிவில் வரும். எனவே, வரு மான வரி செலுத்த வேண்டும்' என்று டிவிசன் பெஞ்ச் உத்தர விட்டது.
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் டில் 93 அப்பீல்கள் தாக்கல் செய் யப்பட்டன.அவற்றை இணைத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி.பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி கருத்து கூறு கையில், “ஆசிரியர்களாகப் பணி யாற்றும் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளின்தனிப்பட்ட வங்கிக்கணக்குகளில்தான் சம்ப ளம்செலுத்தப்படுகிறது. சம்பளத் தொகையை தங்களின் மத நிறு
வனத்துக்கேவழங்கிவிடுகின்றனர் என்ற காரணத்தின் அடிப்படை யில், வரி விலக்கு வழங்க முடி யாது. ஒரு இந்து கோயிலில் பணியாற்றும் பூஜாரி, நான் சம்ப ளத்தை வாங்காமல் என்மத நிறு வனத்துக்கு வழங்குவதால் வரு மான வரி செலுத்த முடியாது என்றால், அதை ஏற்க முடியுமா? சட்டம், அனைவருக்கும் சமம். - சம்பளம் என்பது வருமானம். எனவே, சம்பளம் பெறுபவர்கள், வருமான வரி சட்ட விதிமுறை கள்படி, வருமான வரி செலுத்த வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, 'ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது. அப்பீல்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. என்று சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment