Monday, December 9, 2024

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை? சாந்தோம் டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 சென்னை: இனாமாக வழங்கிய, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை, சட்டவிரோதமாக டயோசிஸ் நிர்வாகிகள் விற்பனை செய்தது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த, எல்சியஸ் பெர்னான்டோ என்பவர் தாக்கல் செய்த மனு: 

சென்னை - மயிலாப்பூர் ஆர்ச் பிஷப் டயோசிஸ், செங்கல்பட்டு டயோசிஸ் நிர்வாகிகள், சட்டவிரோதமாக அரசு நிலங்களை விற்பனை செய்துள்ளனர். இந்த நிலங்களின் மதிப்பு, 5,000 கோடி ரூபாய்.

சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயத்துக்கு, 75.25 ஏக்கர் நிலத்தை இனாம் ஆணையம் வழங்கியது. மத சேவைக்காக, 1915ல் இந்த நிலம் வழங்கப்பட்டது.

சென்னை - மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் சொசைட்டி அல்லது செங்கல்பட்டு டயோசிஸ் சொசைட்டியின் கீழ், இது எப்படி வந்தது என்று தெரியவில்லை.

நிலத்தின் பெரும் பகுதியை சட்டவிரோதமாக பலருக்கு, சொசைட்டியின் நிர்வாகிகள் விற்பனை செய்துள்ளனர். நிலத்தை கண்காணித்து பாதுகாக்க வேண்டிய கடமையில் இருந்து, இனாம் ஆணையர் தவறி உள்ளார்.

சட்டவிரோத விற்பனைக்கு அவர் பதில் கூற வேண்டும். 75.25 ஏக்கர் நிலத்தையும் மீட்கும் கடமை அவருக்கு உள்ளது. 

இரும்புலியூர் கிராமத்தில் மேய்ச்சல் நிலம், 53 ஏக்கர், பட்டா நிலமாக மாற்றப்பட்டு உள்ளது.

இதை, 300க்கும் மேலான வீட்டுமனைகளாக மாற்றி, அருள் நகர் என்ற பெயரில், பலருக்கு விற்பனை செய்துள்ளனர்.

நில விற்பனை வாயிலாக கிடைத்த வருவாயை, டயோசிஸ் கணக்கில் சேர்க்கப்படவில்லை. பிஷப் மற்றும் அவரது கூட்டாளிகள் பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் புனிதமேரி சாலையில், 1.55 ஏக்கர் புறம்போக்கு நிலம், தேவாலயத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பாதுகாக்க போலீசார் முயற்சிக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசுக்கும், போலீசுக்கும் மனு அனுப்பினேன். என்னை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை.
நீதிமன்றம் தலையிடவில்லை என்றால், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் போய் விடும்.

எனவே, 130 ஏக்கர் நிலத்தை மீட்கவும், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா