Tuesday, December 3, 2024

கிறிஸ்துவ சுகமளிக்கும் மோசடிகளும் சித்து மனைவி கேன்சர் குணமாகியதும் - எச்சை கொத்தடிமைகளும்

 இந்த சிவில் சொசைடி சர்ச் மோசடிகளிற்கு நோட்டீஸ் அனுப்பாதா:


https://www.dinamalar.com/news/india-tamil-news/-notice-issued-to-sidhu-wife-demanding-rs-850-crore-/3792702

நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு (பாட்டியாலா அரசு மருத்தவனையில் டாக்டர்- ஓய்வு) புற்று நோயில் குணமடைந்த முறை பற்றிய ஆதாரம் கேட்டு, சத்தீஸ்கர் சிவில் சமூகம் அமைப்பினர் ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அன்னியக் கிறிஸ்துவ ஜெபத்தால் எந்த தீவிர வியாதியும் குணமாகாது எனப் பிறப்பால் உடல் ஊனம் கொண்ட பாதிரி ஜஸ்டின் பீட்டர் காணொளியில் பென்னி ஹின் மோசடியை காணொளி மூலம் நிரூபித்து உள்ளார்.

புற்று நோய் குணம் அடைந்தது எப்படி; ரூ.850 கோடி கேட்டு சித்து மனைவிக்கு நோட்டீஸ்




UPDATED : நவ 29, 2024

ராய்ப்பூர்: உணவுக் கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய சிகிச்சையால் புற்றுநோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறிய விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து மனைவிக்கு ரூ.850 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவி கவுர் புற்றுநோய் சிகிச்சை முறை குறித்து கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதமே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறிய நிலையில், 40 நாள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதாகவும் கூறினர்.

அதன்பிறகு, கடுமையான உணவு கட்டுப்பாடுகளின் மூலம், புற்றுநோயில் இருந்து தனது மனைவி குணமடைந்து விட்டதாகவும், மஞ்சள், வேப்பம் தண்ணீர், ஆப்பிள் வினிகர், எலுமிச்சை தண்ணீர் சாப்பிட்டதாகவும், சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்த உணவுகளையே சாப்பிட்டதாகவும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுபோன்ற ஆதாரமற்ற மருத்துவ முறைகளை மேற்கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு சத்தீஸ்கர் சிவில் சமூகம் என்ற அமைப்பினர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், புற்றுநோயில் இருந்து குணமடைந்ததற்கான சிகிச்சை முறைகள் குறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், மன்னிப்பு கேட்டு விட்டு, ரூ.850 கோடியை பி.எம்.,கேர் நிதிக்கு செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக உரிய பதிலளிக்காவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் ஆலோசகர் குல்திப் சோலான்கி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் சத்தீஸ்கர் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 08:42 PM

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...