பலான பாதிரிகள்

 பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் புனையப்பட்ட காலம்  பொ.மு. 400 - 250 வாக்கில். (படிக்க)

பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை


இங்கே கர்த்தர் பேசினார், என்பது கதாசிரியர் புனைந்தவை. இதன்படி மேசியா வருகை என்பது மற்றொரு கற்பனை. ஆனால் மேசியா வந்தால் அவரோடு உலகம் அழிய வேண்டும் என்பதும் அந்த நம்பிக்கையின் தொடர்ச்சி.

கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்


ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும், அது தான் கடைசியாய் உலகில் வாழும் தலைமுறை எனத் திரும்பி திரும்பச் சொல்லி உள்ளார்.

ஒட்டகங்கள் பரவலாய் இஸ்ரேலில் பயன்பாட்டிற்கு வந்தது எப்போது? அதாவது வீட்டுக் கொட்டிலில் கட்டி வளர்க்கும் விதமாக- இஸ்ரேலில் கிடைக்கும் ஒட்டக எலும்புகள் கொண்டு தற்கால ஆய்வு முடிவுகள்.
இது பற்றி விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்இங்கே
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//
தற்போது மேலும் ஒரு தரமான ஆய்வு வெளியீடு, இதுவும் இஸ்ரேலின் டெல் அவிவ்ல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர்-இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில்  மேற்கொள்ளப்பட்ட  கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி  மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு  9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான்  என இவர்கள் கூறுகிறார்கள்.

இவற்றின் இணைப்புகள் இங்கே ஒன்றுஇரண்டு


பைபிள் பழைய ஏற்பாட்டின் அடிப்படை, கல்தேயர் நாட்டை சேர்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் எனும் இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை அவர் வாரிசுகளுக்கு என்பதே.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். 

//The idea of universal Deity does not exist for most part of the Biblical period and every region inluding Yahwwhism atleast implicitly acknoleged the existence of other Gods, (who however tends to be impotent outsie the boundaries of their realms). Under these circumstances it is inevitable that a covenant of Isarel entered with Yahweh would focus on possession of the Land the "Promissed Land" and that this possession would ratify the exclusiveness of the relationship with their Deity in a material way. The Biblical Picture of a Promissed Land is a strongly idealised  one( for eg. in the allocation of an area in Palestine to the different tribes, or the fixation upon "Mount Zion"    a place that owe more to the imagination of the Prophets than to the Topography of Jerusalem. // Page-91 & 92. The Bible as Literature
A History book designed witha specifically religious puurpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a Point, namely when the People of Israel where Faithful to their Deity and observed his statutes, they Prosphered, but when they gave their alligence to Alien Gods they suffered at the Hands of their Enemies. A Prediction to this effect was put in to the mouth of Moses at the end of Deutronomy. // Page 67 The Bible As Literature.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள  இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

அந்த கர்த்தரே ஒரு வசத்தில் அவர் பலம் சிரியாவும் தனதே என்பதாக ஒரு வசனம்.

செக்கரியா9:1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.2. அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். 3.தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

 உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

ஆபிரகாம் காலம் பொ.மு.2100 எனில், மோசே காலம் பொ.மு.1500 எனில், பழைய ஏற்பாட்டின் முக்கிய கதைகள், புனையப்பட்டது, பொ.மு.400 - 250 (இங்கே) எனில் கதை சம்பவங்களுக்கு 1600 - 1000 வருடம் பின்பு, அதிலும், சிறு தெய்வம் கர்த்தர் சொன்னார், அரசியல் ஆட்சி உரிமை- கொலைகள் என்பவை அனைத்தும் ஒரு அரசியல் சூழ்ச்சிகளே தவிர, இதில் தெய்வக் கோட்பாடுகள் கிடையாது.

கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த நாடு, பக்கத்து நாட்டினரை கொலை செய் என்னும் இன வெறியர்.  ஏசு அதை ஏற்ற தீவிர இன வெறியரே.

மாற்கு சுவியில் இல்லாத தன்மையில் லூக்கா மட்டும் நல்ல சமாரியர் போன்றவை சேர்த்தவை பிற்கால கட்டுக் கதைகள் என நேர்மையான பைபிளியல் ஆய்வாளர் அனைவரும் ஏற்கின்றனர்.

ஏசுவைப் பற்றி அவர் காலத்தில் வாழ்ந்த யாரும் பதிவு செய்ய வேண்டும் எனும் தாக்கத்தையே  ஏற்படுத்தவில்லை. அவரோடு அவர் கூடவே இருந்த சீடர்கள் (ஏசு இயக்கம் எத்தனை நாள் தெரியாது?) துண்டைக் காணோம் துணியைக் காணொம் என ஓடினர். 

இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்
(மத் 26:47 - 56; லூக் 22:47 - 53; யோவா 18:3 - 12)

மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.  46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.48 இயேசு அவர்களைப் பார்த்து, ' கள்வனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?49 நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக் கொண்டு உங்களோடு இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில் எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும் ' என்றார்.50 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.


ஆனால் ஏசு சொன்னதை அப்படியே நினைவில் வைத்து இருந்தனராம். தான் புரிந்து கொள்ளாததை, அப்படியே நினைவில் வைத்தனர் என்பதன் உளறல் அனைவரும் புரிவதே!

முதல் நூற்றாண்டில் நிகழ்ந்தவை பற்றி வரலாற்றாசிரியர் ஜோசபஸ் எழுதியவைகளின் ஏடுகள் நம்மிடம் உள்ள ஏடுகள் அனைத்தும் 1000 வருடத்திற்கும் பிற்காலத்தவை. ஓரின்கன் பதில்களில் ஜோசபஸ் பற்றி சொன்னவர், இன்று ஏசுவிற்கு ஆதாரம் எனக் காட்டப்படும் குறிப்புகளைப் பற்றி இல்லை, ஆனால் அதே புத்தகத்தைப் பற்றி எழுதியதும் உள்ளது. நடுநிலை வரலாற்றாசிரியர் அனைவரும் இவை கிறிஸ்துவ இடைசெருகல் என ஏற்கின்றனர்.


 மாற்கு எழுதியதில் பல மாற்றத்தை, மற்ற ஒவ்வொரு சுவிசேஷக் கதாசிரியரும் தன் சௌகரியத்திற்கு மாற்றி உள்ளானர். அப்படி இருக்க எது உண்மை, எது பொய்- தெளிவான காரணத்தைக் கொண்டு விளக்கவும். பிற்கால சர்ச் பிதாக்கள் சற்றும் பயன் இல்லை ஏன் எனில் பவுல் காலத்திலேயே குழப்பம். 
சாபம் மூலம் மட்டுமே கதைக்கப்படும் அதாரம் காட்டப்படவே இல்லை.

கலாத்திய1:6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!


வெவ்வேறு ஊர் மக்கள் தேவைக்கு ஏற்ப வேறு  வேறு கதாசிரியர் புனைந்தவை மத்தேயூ- லூக்கா சுவிகள். 
 கன்னி கருத்தரித்தல் கதைகள் மாற்கில் கிடையாது.
சர்ச் பாரம்பரியப்படி தந்தை ஜோசப் பொ.கா. 20 வாக்கிலும்,   தாய் மேரி 48லும் மரணம். 67 ல் மரணம் அடைந்த   பேதுரு   மரணம்   அடைந்த சீடன் மாற்கு மற்றும் 110ல்யோவானுக்கு தெரியாத இந்தக் கதை கதாசிரியர்களுக்கு சொன்னது?
 ஏசு ஜோசப் மகன் இல்லை எனில் இப்பட்டியல் தேவையே இல்லை. தாவீது பரம்பரை வளர்ப்பு மகன் என எங்காவது உள்ளதா காட்டுங்களேன். இவை உங்கள் சொந்த சரக்குகள்.

மத்தேயூவில் ஒரு பகுதி - லூக்காவில் ஒரு பகுதி என இணைத்தும், 
அ வின் மகன் ப எனில் அது மகனாக இர்க்கலாம்- இல்லை அண்ணன் மகனாக இருக்கலாம் எனில், உள்ள வசனத்தை நீங்கள் ஏற்கவில்லை. அப்புறம் எந்த வசனத்தை ஏற்பது - மறுப்பது என முடிவு செய்வது யார்? 

மத்தேயூ கதாசிரியர் சுவி கதைப்படி, ஆபிரகாம்- தாவீது - சாலமன் வரிசையில் பெத்லகேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வழியே 41வது தலைமுறையினர் ஏசு. லூக்கா கதாசிரியர் சுவி கதைப்படி, ஆபிரகாம்-- தாவீது - நாத்தன் வரிசையில் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் வழியே 57வது தலைமுறையினர் ஏசு.

முதலில் இந்த ஏசு பிறப்பு கதைகள் நம்பிக்கைக்கு உரியனவா?

 யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச்
செயல்படுகிறீர்கள் ' என்றார்அவர்கள், ' நாங்கள்
பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்லஎங்களுக்கு ஒரேதந்தை 
உண்டு;
யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச்  செய்கிறீர்கள் என்றார்அதற்கு அவர்கள்நாங்கள்
வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்லஒரே பிதா எங்களுக்கு
உண்டு.


இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"

"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.
The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள்
பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.

நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின்
இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசு ச்றிவித்தது
என்றோஏன் நற்செய்தி என்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு
எனக் கொள்ளவோ வழி இல்லை.
யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன்என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றினஇவற்றின்
எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட யோவான்8: 41  காண்கிறோம் என்கிறார்.

நாம் மேலும் ஆராய்ந்தால்மேரி ஓர் இருளில் ரோம் வீரனால்

கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம்

வீரன் பெயர் பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி

யூதர்களால் எழுதப்படும் "புனித தாலுமூதுதெரிவிக்கின்றது.


இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்
 மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய
நிகழ்ச்சிகள்அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும்
திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததுஅவர்கள் கூடி வாழும்
முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்ததுஅவர் தூய
ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு
நேர்மையாளர்அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க
விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.(18.இயேசு
 கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது:
அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு
நியமிக்கப்பட்டிருக்கையில்அவர்கள் கூடி வருமுன்னே,
 அவள்பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று
காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு
நீதிமானாயிருந்துஅவளை அவமானப்படுத்த மனதில்லாமல்,
இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)
25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு
அவரோடு கூடி வாழவில்லையோசேப்பு அம்மகனுக்கு இயேசு
என்று பெயரிட்டார்


மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்குமுயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்துகொல்ல்ப்பட்டிருக்க வேண்டும்எனவே சிறு பெண் வாழ்வின்துயரம் என ஏற்ற நல்லவர்,   எனத்  தெரிகிறதுமேலும் மத்தேயுபட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வர்கிறது.
 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள்
பெரேட்சும் செராகும்
சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;
 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது
ஈசாயின் மகன் தாவீது அரசர்தாவீதுக்கு உரியாவின்
மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.
இராகாபு முதலில் ஒரு விபச்சாரி
போவாசுரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில்
இணைந்தது.
தாவீது அரசன் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள்
குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டுபின் வீரன்
உரியாவைக் கொலை செய்துஉரியா மனைவியிடம் பெற்ற மகன்சாலமோன் ஞானி.
இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின்துயரமான முறை கர்ப்பமேமுன்பு இது போன்றவை
கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- 

ஒரேபேறான குமாரனே  புனையல் 
யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லைபிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான்1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லைதந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். )
மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-monogenusGreek is 'monogenus'. Mono means 'one' and genus means 'species' or 'type' or 'kind'. It is worth noting that the word is monogenus, notmonogenesis (which would mean came from one source, rather than of a unique kind). 

 ஒரு தன்மையிலானஅல்லது தனிதன்மையிலான என்பதான 
சொல்லே யோவான் சுவி பயன்படுத்தியுள்ளது.

5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழிபெயர்ப்பில் 
மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ONLY BEGOTTEN"; மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் 
ஆனல் அவர் யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.  இதே மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள் தரும்படியாக மொழி
பெயர்க்கின்றனர்.
 இக்கட்டுரை சரி செய்யப்பட வேண்டும்(22.05.2014 - 13.07)

1 comment:

  1. Were there dinosaurs in the Noah's ship?

    ReplyDelete