Thursday, February 13, 2014

கிறிஸ்து தான் கடவுள் மகனா? பைபிள்படியே இல்லையே?

 
லூக்கா1:26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.
30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' 54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்;55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார் ' .

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான்19:18 இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.
  
அப்போஸ்தலர்1:6 பின்பு அங்கே கூடியிருந்த அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் (கதைப்படி உயிர்த்ததான), ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள்.


கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன்-மட்டுமே

ஏசுவை நேரில் பார்க்காத பவுல் என்பவர்  கட்டும் கதை- ஆதாம் செய்த பாவத்தால் வந்தது மரணம். இயேசு மரணம் மூலம் பூமியில் மனிதம் மரணம் ஒழிக்கப்பட்டது
  
கலாத்தியர்2:15 பிறப்பால் நாம் யூதர்கள்: பாவிகள் எனப்படும் பிற இனத்தாரைச் சேர்ந்தவரல்ல.
1கொரிந்தியர்2:.7 வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது.
1கொரிந்தியர்15:22 ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்:ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.
யோவான் 6:34 அவர்கள், ' ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
யோவான் 6:47உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை மரணம் இல்லாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

ஏசுவை நேரில் பார்க்காத பவுல் என்பவர்  கட்டும் கதை- ஆதாம் செய்த பாவத்தால் வந்தது மரணம். இயேசு மரணம் மூலம் பூமியில் மனிதம் மரணம் ஒழிக்கப்பட்டது.


இதையே ஏசு சொன்னதாக 4வது சுவி 120 வாக்கில் புனையப்பட்டது இயேசுவே சொன்னதாக உள்ளது. ஏசுவை ஏற்றால் மரணம் இல்லையாம். பவுல் முதல் அனைவரும் மரணமானர் எனில் ஏசு கிறிஸ்து இல்லையே.
 
உலகம் அழிவு- ஏசுவின் இரண்டாவது வருகை பவுல் தான் வாழ்நாளில் என்றார். பவுல் மரணத்திற்கு 50 வருடம் பின்பு புனைந்த 4வது சுவி
யோவான்21:20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.
  
இயேசுவின் அன்புச் சீடரும் மரணமானர் எனில் ஏசு கிறிஸ்து இல்லையே.

1 comment:

  1. இயேசு மரணம் மூலம் ஆதாம் பாவம் ஒழிய வில்லை. அது பரலோகம் கிடைக்க வழி ஆகும்

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா