Tuesday, March 4, 2014

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்

Devapriya Solomon's photo.

திருச்சி லுத்தரன் சபையின் ஊழல்-கலவர அபாயம் -கொலைக் கூலிப்படை



http://www.dinakaran.com/News_Detail.asp?nid=81650
சென்னை : கடவுளிடம் மன்னிப்பு கேட்பதே தண்டனையாகும் என்று உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது.திருச்சி தமிழ் எவாஞ்சலிகல்  லூதரன் சர்ச் பிஷப் டாக்டர் மார்டின் தொடர்ந்த வழக்கில், சர்ச் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக, நீதிபதி கனகராஜை நியமித்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தாமல் பிஷப் கடந்த ஆண்டு ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுக்குழுவைக் கூட்டி சினாடுக்கு புதிய நிர்வாகிகளையும் அறிவித்துவிட்டார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சார்லஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பிஷப் மீது வைக்கப்பட்டுள்ளது. அவர் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவர் பிஷப் என்கிற புனிதமான பதவியில் இருப்பதால், அவர் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளிடம் மன்னிப்பு கோரவேண்டும். மேலும், அவர் நடத்திய பொதுக்குழு ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் சினாடுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியில் அமரலாம். இந்த உத்தரவு  வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து பிஷப் தாக்கல் செய்த அப்பீல் மனு பொறுப்பு தலை மை நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி சசிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே, மனுதாரரை கடவுளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு தரும் தண்டனையாகவே கருதப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


https://christianityindia.wordpress.com/2014/03/05/tamil-evangelical-lutheran-church-involved-in-legal-warangles/
தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச் – பிஷப், பாஸ்டர்கள், விசுவாசிகளின் வழக்குகள் நடப்பது நீதிமன்றத்தில், ஆனால் பாவ மன்னிப்பு அளிக்கப்படுவது செக்யுலரிஸ நீதி மன்றங்களில் (1)!
மார்ச் 5, 2014
 -


1 comment:


  1. கோர்ட் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. பாதிரிகள் மன்னிப்பு கேட்டால் போதும் என்றால் பாதிரி மீது வழக்கு நடத்தியதே வீண் தானே

    ReplyDelete

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...