Friday, March 14, 2014

கிறித்துவ சூழ்ச்சிகள் ஆரிய திராவிட மாயை

'நற்செய்தி பரப்பும் ' கருவியாக இனவாதம் (25-8-2002 திண்ணை)
அரவிந்தன் நீலகண்டன்
 
'தெற்காசிய கலாச்சார வரலாற்றின் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் எளிமையான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றியல் கருத்துக்களை மிக வன்மையாக மறுதலிக்கிறோம். இன்றும் நிலவி வரும் இத்தகைய விளக்கங்கள் ஐரோப்பிய இனமுதன்மை, காலனியாதிக்கம், இனவாதம் மற்றும் செமிடிக் வெறுப்பு போன்ற அம்சங்களால் குறுகிய தன்மை பெற்று விளங்குகின்றன. தெற்காசிய பண்பாட்டு வரலாறு குறித்து வெளிவந்துள்ள அகழ்வாராய்வுத் தகவல்களை புறக்கணித்து பாரபட்சமாக பழைய ஊகங்களையேப் பற்றித் திரியும் போக்கு வரும் நூற்றாண்டிலாவது மாற வேண்டும் ' 1 -ஜேம்ஸ் ஷாஃபர்

மனித வரலாற்றில் ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல கோட்பாடுகள் மனித அறிதலின் பெரும் பயணத்தில் மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆரிய இனவாதக் கோட்பாடு போல மிகத் தெளிவாக மிக முழுமையாக உடைத்தெறியப் பட்ட கோட்பாடுகள் மிகச்சிலவே. எனினும் ஜேம்ஸ் ஷாஃபர் குறிப்பிடுவது போல மிகச் சிலக் கோட்பாடுகளே இவ்வாறு மறுதலிக்கப் பட்ட பின்பும், தன் ஆதாரமற்ற தன்மை வெளியானபின்பும், வெகு ஜன கல்வியிலும், சில அறிஞர்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் உயிர் வாழ்ந்துள்ளன. 'ஆரிய இன ' வாதம் அடிப்படையற்ற ஒரு உருவாக்கம். இன்று அது ஒரு நிரூப்பிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏதுமற்று உண்மையென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு பொய்.
   
இவ்வாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள பொய்களிலும் கூட, ஆரிய இனவாதம் போன்று மனித குலத்திற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய 'ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொய்கள் ' ஏதுமில்லை. பலகோடி இந்தியர்களின் அடிமை நிலையினை நியாயப்படுத்திய இக்கொள்கையின் மரபுப் பிறழ்ச்சி ஹிட்லரின் 'இறுதித் தீர்வு 'களில் ஐரோப்பாவையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. இலங்கையில் இன்றும் மனித இரத்தம் சிந்தக் காரணமாயுள்ளது. ஆரிய இன ஆராய்ச்சியில் தொடங்கிய இத்தகைய மேற்கத்திய இனவாத ஆராய்ச்சிகளின் விளைவுகள் ஆப்பிரிக்காவில் இன்றும் இனப்படுகொலைகளை நடத்தி தம் இரத்தப் பசியை தீர்த்து வருகின்றன. இத்தகைய இன ஆராய்ச்சிகள் வெறும் அறிவு தாகம் தீர மேற்கத்திய காலனிய அறிஞர்களால் நடத்தப்பட்டவை அல்ல. 'நற்செய்தியை உலகமெங்கும் பரப்ப ' கிளம்பிய மிஷனரி ஆய்வாளர்களின் மூளைகளில்தான் மனிதர்களைப் பிரிக்கும் இந்த இனக் கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கல்விமுறை மூலம் பலகோடி இந்திய குழந்தைகளின் மனங்களில் விதைக்கப்பட்ட இக்கோட்பாடு, இந்தியர்களிடையே பொறாமை, நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்பினை பரப்பும் கருவியாகச் செயல்பட்டது. 'வெள்ளைத் தோல் ' ஆரிய நாடோடிகள் கருப்பின பழங்குடியினரை வெற்றிக் கொண்டதே பாரதத்தின் தொல் பழம் வரலாறு என விளக்கும் இந்த கோட்பாடு அன்றைய ஆளும் வர்க்கத்தினரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு மிகச் சிறப்பாகத் துணை போனதென்றால், இன்று வத்திக்கான் முதல் பாப்டிஸ்ட்கள் ஈறாக பல மிஷினரிகள் வனவாசிகள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோரிடையே 'ஆத்மாக்களின் அறுவடை 'யை நடத்த இக்கோட்பாடு மிக நன்றாகவே உதவி புரிகிறது. அன்றைய காலனியாக்க வாதிகளுக்கு 'பிரித்தாள 'ப் பயன்பட்ட ஆரிய இனவாதம் இன்றைய ஆன்மிக காலனியாதிக்க வாதிகளுக்கு 'பிரித்து மதம்மாற்ற ' பயன்படுகிறது.

இம்மாதிரி இனம் பற்றிய போலி ஆராய்ச்சிகளின் வேர்களை அறிய சில நூற்றாண்டுகளாவது நாம் பின் செல்ல வேண்டும். பொது வருடம் (CE) 1312 இல் வியென்னாவின் இயுக்மெனிக்கல் கவுன்சில், 'புனித திருச்சபைக்கு அவிசுவாசிகளின் மொழிகளில் திறமை பெற்ற பல கத்தோலிக்கர்கள் அவசியம். பரிசுத்த நற்செய்தியை அவிசுவாசிகளிடம் கொண்டு செல்ல அவர்கள் தேவைப்படுவார்கள் ' என அறிவித்தது. 'அவிசுவாசி 'களின் மொழியை கற்பதோடு இந்த மதமாற்ற வியூகம் முடிவு பெறவில்லை. மாறாக, மொழியியல் ஆராய்ச்சிகளும் இம்மதமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டன. எனவே காலனியாதிக்கத்தை இந்தியாவில் வேரூன்ற வைக்கும் திருப்பணியில் பங்கேற்க பல்கலைக்கழகங்கள் அழைக்கப்பட்ட போது அவற்றின் 'அறிஞர் பெருமக்கள் ' தீவிர கிறிஸ்தவ அறிஞர்களாகவே இருந்தனர். இவர்களைப் பொருத்தவரையில் இந்தியாவில் கல்விப் பணியின் முக்கிய அவசியம் உண்மையினை அறிதல் என்பதனை விட கிறிஸ்தவத்தைப் பரப்புதல்தான்.

எனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் கிழக்கத்திய கலாச்சாரம் குறித்து ஆராய கர்னல் போடன் ஒரு கணிசமான தொகையினை(அந்த காலத்தில் 1832 (CE) 25,000 பவுண்டுகள்) தன் உயிலில் அளித்திருந்தார். இதன் நோக்கம் குறித்து அவர் தெளிவாகவே கூறினார், 'நாம் இந்திய மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றவே இத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. ' பின்னாளில் ஆரிய இனவாதக் கோட்பாட்டின் மிக முக்கிய பரப்பு மையமாக போடனின் இந்த சமஸ்கிருத ஆய்வுத்துறையே விளங்கியது. ஆக்ஸ்போர்டின் ஒரு முக்கிய சமஸ்கிருத பேராசிரியரான மாக்ஸ்முல்லர்தான் ஆரிய இனவாதத்தைப் பரப்பியவர்களுள் முதன்மையானவர். இந்த சமஸ்கிருத பேராசிரியர் தன் பல வருட கடின உழைப்பின் மூலம் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தன் வாழ்வின் மிகப்பெரிய இச்சாதனைக் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ' எனது இம் மொழிபெயர்ப்பு இந்தியாவின் விதியையும் பலகோடி இந்திய ஆத்மாக்களின் வளர்ச்சியையும், பெருமளவுக்கு நிர்ணயிக்கப் போகின்றது. வேதங்களே இம்மக்களின் சமயத்தின் வேர். அவ்வேர் எத்தகையது என்பதனைக் காட்டுவதன் மூலம் அதிலிருந்து மூவாயிரம் வருடங்கள் வெளிவந்திருக்கும் அனைத்தையும் வேரறுக்க முடியும் என நிச்சயமாக நம்புகிறேன். ' 2

இந்திய கலாச்சாரத்தை அறிவதல்ல முல்லரின் நோக்கம் மாறாக அதனை 'வேரறுப்பதே '. பொதுவாகவே ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரி அறிஞர்களின் நோக்கங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டே மாக்ஸ்முல்லர். 1851ெஇல் மாக்ஸ் முல்லர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில்தான் முதன்முதலாக 'ஆரிய ' எனும் வார்த்தை இனவாதத் தன்மையுடன் பயன்படுத்தப்பட்டது. மாக்ஸ் முல்லரின் சிறந்த நண்பரும் அவருடன் பணி புரிந்த இந்தியவியலாளருமான பவுல் இவ்வார்த்தையினை இனவாதப் பொருள்பட பிரான்சில் பிரபலப்படுத்தினார். விரைவிலேயே பல கிறிஸ்தவ ஈடுபாடுடைய அறிஞர்கள் ஆரிய இனவாதத்தால் ஈர்க்கப்பட்டனர். 1859 இல் சுவிஸ் மொழியியலாளரான அடால்ஃப் பிக்டெட் ஆரிய இனவாதம் குறித்து பின்வருமாறு எழுதினார், ' இறையருளால் உலகம் முழுவதும் ஆள வாக்களிக்கப்பட்டதோர் இனம் உநூடன்றால் அது ஆரிய இனம் தான். கிறிஸ்துவின் மதம் உலகிற்கொரு ஒளியாக வந்தது. கிரேக்க மேதமை அதனை சுவீகரித்துக்கொண்டது;ரோம சாம்ராஜ்யாதிகாரம் அதனைப் பரவச் செய்தது;ஜெர்மானிய வலிமை அதற்கு புத்துயிர் அளித்தது. மனித குலம் முழுமைக்குமான இறைவனின் திட்டத்தில் முக்கிய கருவி ஐரோப்பிய ஆரியர்களே. '3

பிரான்சின் சமய வரலாற்றாசிரியரான எர்னெஸ்ட் ரெனன் 1861 இல் பின்வருமாறு குறிப்பிட்டார், '..செமிட்டிக் இனத்தவர் (யூதர்கள் -அ.நீ) செய்ய வேண்டியதைச் செய்யும் திறன் அற்றவர்கள்;நாம் ஜெர்மானியகளாகவும் கெல்ட் இனத்தவர்களாகவுமே இருப்போம். நம் நித்திய நற்செய்தியான கிறிஸ்துவத்தை ஏந்தியிருப்போம்....யூதர்கள் வீழ்ந்த பிறகு ஆரியர்களான நாமே மனித இனத்தை நடத்திச் செல்ல மீதியிருப்போம். '4 ஆராய்ச்சியின் பேரில் இனவாத அர்த்தம் கொடுக்கப்பட்ட ஒரு சொல் ஒரு சில வருடங்களில் உலகத்தின் மீது ஐரோப்பிய இன, கலாச்சார, சமய மேன்மையினை நிறுவுதலை நியாயப்படுத்தும் ஒரு சொல்லாகிவிட்டது. 

அனைத்து ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் மாக்ஸ்முல்லரின் இந்த இனவாத விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1861 இல் 'மொழிகளின் அறிவியல் ' என தான் கொடுத்த மூன்று நாட்கள் சொற்பொழிவுகளில் வேதங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தன் இனவாத விளக்கத்தை மாக்ஸ் முல்லர் நியாயப்படுத்தினார். அமெரிக்க வரலாற்றறிஞரான லுயெிஸ் பி சிண்டர் மாக்ஸ் முல்லரின் இந்நிலைபாடு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார், 'மாக்ஸ் முல்லர் மீண்டும் மீண்டும் , இந்தோெஐரோப்பிய மற்றும் இந்தோெஜெர்மானிய போன்ற பதங்கள் 'ஆரிய ' எனும் பதமாக மாற்றப்பட வேண்டும் என வாதாடினார். ஏனெனில் இந்தியாவில் வாழ்ந்த சமஸ்கிருதம் பேசிய இனத்தவர் தங்களை 'ஆரியர் ' எனக் குறிப்பிட்டனர் என்பதால். இப்பழம் ஆரிய மொழி ஒரு பழம் ஆரிய இனம் இருந்திருக்க வேண்டும் என்பதனை க 'ட்டுவதாகவும், அந்த இனமே ஜெர்மானிய, கெல்ட், ரோமானிய, கிரேக்க, ஸ்லாவிய, பெர்சிய, ஹிந்து இனங்களின் பொது மூதாதைய இனம் என்பது அவரது வாதம். '5 சிண்டர் மாக்ஸ்முல்லரின் இம்முயற்சி குறித்து, 'ஆரிய மொழியினை ஆரிய இனத்துடன் இணைக்க முயலுவது முட்டாள்தனமான முயற்சி ' என கருத்து தெரிவிக்கிறார்.5 மாக்ஸ்முல்லரது காலத்திலேயே ஜெக்கோபி, ஹிலெபிராந்த், விண்டர்னிட்ஸ் போன்றவர்கள் ஆரிய இன வாதக் கோட்பாட்டினை எதிர்த்துள்ளனர். எனினும் இக்கோட்பாடு எங்ஙனம் இந்தியாவில் வேரூன்றியது ?

இக்கோட்பாட்டினை பரப்புவதில் மிஷினரிகளின் பங்கு அபாரமானது. முன்னணி மிஷினரி இந்தியவியலாளரான ஹண்டர், இந்தியவியல் ஆராய்ச்சிகள் ' கிறிஸ்தவப் பற்று எனும் புனித ஜுவாலையால் சூடேற்றப்படுவதாக 'க் கூறினார்.6. இத்தகைய 'கிறிஸ்தவ புனித ஜுவாலையால் சூடேற்றப்பட்ட ' ஆராய்ச்சியின் விளைவின் எடுத்துக்காட்டாக மாக்ஸ் முல்லர் வேதங்களின் காலத்தை விவிலிய சிருஷ்டிக் கால அளவின் அடிப்படையில் ெ உலக சிருஷ்டி 4004(BCE) அக்டோபர் நிர்ணயித்ததன் மூலம் அறியலாம்.7 இவ்வாறு கிறிஸ்தவப் பற்று எனும் புனித ஜுவாலைக்கும் ஐரோப்பிய இனவாதத்திற்குமான திருமணத்தில் எழுந்த ஆராய்ச்சி வினோதங்கள் விரைவில் ஐரோப்பாவில் சாவு முகாம்களையும், உலகப்போரையும் உருவாக்கின. இத்தகைய இந்தியவியல் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பம்பாயின் ஆசியக் கழகத்தின் தலைவராக 1836ெமுதல் 1846 வரை விளங்கியவர் பிராட்டஸ்டண்ட் திருச்சபையைச் சார்ந்த மிஷினரி ஜான் வில்சன். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரியர்ெஆரியரல்லாதோர் எனும் பகுப்பின் படி அமைவது மதமாற்றத்திற்கு சிறந்த இலக்கான மக்கள் கூட்டங்களை தேர்ந்தெடுத்து பணியாற்ற உதவும் என்பது இவர் நம்பிக்கை. 1856 இல் அவர் ஆற்றிய உரையில் பிரிட்டிஷ் அரசு உண்மையில் ஆரியர்கள் என்ற முறையில் மீண்டும் தங்கள் இந்திய ஆரிய சகோதரர்களுடன் இணைந்ததுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தினார். (மெக்காலேயிஸ்ட் இந்தியர்களும் இதற்கு ஒத்தூதினர். உதாரணமாக, கேஷப் சந்திர சென். இது குறித்து 'பில்ட் டவுண் மேற்கோள் ' என தனிக் கட்டுரை எழுதப்படுகிறது.) மேலும் வில்சன் இந்த பிரிந்தவர் இணைந்தது 'உலகின் மிக தாராள கொடையாளியான பிரிட்டிஷ் அரசுடன் இந்தியாவை இணைத்துள்ளதாகவும் ' குறிப்பிட்டார்8.

காலனியாதிக்கத்தை நியாயப்படுதியதுடன், இந்தியர்களுக்கு தங்கள் பாரம்பரியம் குறித்து எவ்வித பெருமையும் ஏற்படாதவாறும் இந்த இனவாதக் கோட்பாட்டின் கற்பித்தல் பார்த்துக்கொண்டது. கிழக்கத்தியவியல் அறிஞர்களின் சர்வ தேச மாநாட்டில் பேசிய மாக்ஸ்முல்லர் இது குறித்து தெளிவாகவே கூறினார், ' இனி அவர்கள் தங்கள் பழம் புலவர்கள் குறித்து உயர்வான புகழ்ச்சி கொள்ள மாட்டார்கள், மாறாக (தங்கள் பழம் பாரம்பரியம் குறித்து) கவனமான ஆராய்ச்சியில் எழும் இரசனையே கொள்வார்கள் '9 அதாவது தங்கள் மூதாதையர்கள் குறித்து இந்தியர்கள் கொள்ளும் பெருமிதத்தின் அளவுகோல்கள் மாக்ஸ்முல்லர் மற்றும் இதர கிறிஸ்தவ மிஷினரி ஆராய்ச்சியாளர்களாலேயே நிர்ணயிக்கப்படும். இந்த காலனியாதிக்க கலாச்சார மறுகல்வியினை பரப்ப, அக்கால பிரிட்டிஷ் கல்வி முறையைக்காட்டிலும் மேன்மையானதாக இருந்த இந்திய பாரம்பரிய கல்வி அமைப்புக்கள் அழிக்கப்பட்டு வெற்றிடம் உருவாக்கப் பட்டது. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான கெயிர் ஹார்டி பிரிட்டிஷ் ஆவணங்களை ஆதாரமாகக் 

கொண்டு அளித்த புள்ளிவிவரங்கள்படி வங்காளத்தில் மட்டுமே அனைத்து ஜாதியினரும் பயிலும் பள்ளிக்கூடங்களின் தொகை 80,000. அதாவது 400 வங்காளிகளுக்கு ஒரு கல்விச் சாலை. லதூலள தன் 'பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு ' எனும் நூலில், கூறுகிறார், ' ஒவ்வொரு ஹிந்து கிராமத்திலும் அனைத்துக் குழந்தைகளும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும் அடிப்படைக் கணிதத்தில் தேர்ச்சி உடையவர்களாகவும் இருந்தனர். நம் அதிகாரம் பரவி வேரூன்றி விட்ட இடங்களில் இந்தக் கிராம கல்வி சாலைகள் அழிக்கப்பட்டு விட்டன. ' காலனியாதிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகளால் பாரம்பரிய கல்விமுறை அழிக்கப்பட்ட பின் அவ்வெற்றிடங்களில் நுழைந்தன கிறிஸ்தவ மிஷினரிகளின் கல்விச்சாலைகள். இந்திய மொழி வழக்கில் உயர் இலக்கியத்திற்கோ அறிவியலுக்கோ சிறிதும் இடமில்லை என தன் புகழ் வாய்ந்த 'மினிட்ஸ் ' களில் குறிப்பிட்ட மெக்காலே பிரிட்டிஷ் கல்வி முறையினை இந்தியாவில் புகுத்த வழி வகுத்தார். இச்செயலின் குறிக்கோளில் மிகுதியான அளவுக்கு சமய நோக்கம் கலந்திருந்தது. இதனை மெக்காலே தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார், ' நம் கல்வித்திட்டங்கள் முழுமையான முறையில் அமுல் செய்யப்பட்டால் இன்னமும் முப்பது வருடங்களில் வங்காளத்தில் படிப்பறிவு பெற்ற எவருமே விக்கிரக ஆராதனையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்பது என் திடமான நம்பிக்கை. '

மெக்காலேயின் 'திடமான நம்பிக்கைகள் ' இன்று பொய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவெங்கும் மெக்காலேமெிஷினரி கூட்டணியில் உருவான கல்விச்சாலைகள் மூலம் பல கோடி குழந்தைகளுக்கு ஆரிய இனக் கோட்பாடு கற்றுக் கொடுக்கப் பட்டது. இவ்வாறாக தலைமுறைகளாக இந்தியக் குழந்தைகளுக்கு தங்கள் வரலாற்றை, தங்கள் சமூக உறவுகளை இன ரீதியில் காண, விளக்க, அறிந்து கொள்ள ஒரு கோட்பாடு கொடுக்கப் பட்டது. ஆரியெஆரியரற்ற இனக்கூட்டங்களை அடையாளம் காணவும், இந்தியாவில் என்றென்றும் வடக்குெதெற்கு பிரிவினை ஏற்படுத்தி அதனை இன ரீதியில் அணுகவும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கல்வி முறை இந்தியாவில் இவ்வாறுதான் வேரூன்றியது. வெறுப்பின் விதைகள் இளம் மனங்களில் விதைக்கபட்டாயிற்று. 

தென்னகத்தில் ஆங்கிலிக்க திருச்சபையைச் சார்ந்த ஆயர் இரா.கால்தூவல் தென்னிந்திய மக்கள் ஆரியரல்லாத திராவிடர் எனும் ஒரு தனி இனத்தைச் சார்ந்தவர்கள் எனும் பிரச்சாரத்தை தன் ஆய்வு மூலம் துவக்கினார். ஆரியர்களிலிருந்து இனத்தால் மாறுபட்ட, பண்பாட்டால் உயர்ந்ததொர் தனி இனத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் எனும் பிரச்சாரம் தென்னகத்தில் நன்றாகவே எடுபட்டது. விரைவில் இந்த தனிமைப்படுத்தல் அரசியல் இயக்கமாகவும் வெளிப்பட்டது. இந்திய தேசிய விடுதலை இயக்கத்திற்கு எதிரானதோர் கருவியாக இந்த 'திராவிட ' அரசியல் 'விழிப்புணர்வு ' பிரிட்டிஷ் அரசால் நன்றாகவே பயன்படுத்தப் பட்டது.

பாரத விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் பிரிவினை வாதப் போக்கினை தூண்டும் விதத்தில் கிருஸ்தவ திருச்சபைகள் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பயன்படுத்தின. 1950களின் இறுதியிலும், 1960களிலும் கிருஸ்தவ ஆயர்கள் வெளிப்படையாகவே 'திராவிட இயக்கம் இந்து மதத்தை அழிக்க கிருஸ்தவ சர்ச்சால் வைக்கப்பட்டுள்ள 'டைம்பாம் ' ' என பேசினர். எனினும் இன்று தமிழ் நாட்டில் ஒரு வலிமையான பிரிவினைவாத இயக்கத்தை உருவாக்குவதில் மிஷினரிகள் தோல்வியே அடைந்துள்ளனர் என்ற போதிலும் நாகலாந்து, மிசோரம், திரிபுரா ஆகிய இடங்களில் மிஸோ,ரியாங், ஜமாத்தியா, வங்காளிகள் என பல சமூகங்களிடையே மோதல்களுக்கு இனரீதியிலான பூச்சு கொடுப்பதில் மிஷினரிகள் ஆற்றியுள்ள பங்கு அபாரமானது.

இலங்கையில் நடைபெறும் தலைமுறைகளாக குடும்பங்களை சிதறடித்து வரும் வன்முறை நிகழ்வுகளின் வேர்களில் மிஷினரிகளால் பரப்பப் பட்ட இனக்கோட்பாடுகள் இருப்பதை நாம் காணலாம். தமிழ் சங்கங்களின் ஆஸ்திரேலாசிய ஒருங்கிணைப்புக் குழுவின் செயலரான அன.பரராஜ சிங்கம் கூறுகிறார், ' புராண கதைகளிலிருந்து சிங்கள தேசியவாதம் தன் மூலத்தை பெற்றிருந்தாலும், இன்றைய சிங்கள இனவாதத்தில் ஐரோப்பிய பங்கு மிகவும் உண்டு. சிங்களர்கள் (தமிழர்களிலிருந்து இனரீதியில் வேறுபட்டதோர்) ஆரிய இனத்தவர் என்பது மஹாவம்சம் மூலம் உருவான தேசியவாதமல்ல. மாறாக இதன் வேரினை சிங்களர்களையும் தமிழர்களையும் இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழிகளை பேசும் வேற்றினத்தவர்கள் எனப் பகுத்த ஐரோப்பிய மொழியியலாளர்களிடம் காணலாம். '10 இனரீதியில் இலங்கை மக்கலை பிரிக்கும் முயற்சி 1856ெஇல் தொடங்கியது எனலாம். இராபர்ட் கால்தூவல் தன் புகழ்பெற்ற ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் 'சிங்களர்கள் பேசும் மொழிக்கும் தமிழர்களின் மொழிக்கும் எவ்வித நேரடித் 

தொடர்பும் கிடையாது ' என அறிவித்தார். 1861 -இல் தன் 'மொழிகளின் அறிவியல் ' சொற்பொழிவில் 'சிங்கள மொழி ஆரிய குடும்பத்தைச் சார்ந்ததாக ' அறிவித்தார். சிங்கள இனவாத தேசியத்தின் உதயத்தில் சர்ச்கொலனிய அரசு எனும் கூட்டணி ஆற்றிய செவலித்தாய் பங்கு குறித்து சிங்கள அறிஞரான கமலிகா பியரிஸ் கூறுகிறார், ' 'ஆரிய ' மொழி பேசும் அனைவரும் ஆரிய இனத்தவர்களாக்கப் பட்டனர். அதனைப் போலவே திராவிட இனமும் அடையாளம் காணப்பட்டது. இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள் மாக்ஸ் முல்லரும், இராபர்ட் கால்தூவல்லும். போர்சுகீசியரும், டச்சுக்களும் அவர்கள் அவர்கள் நாட்டில் நிலவிய மத வெறுப்புக்களை இலங்கையில் இறக்குமதி செய்தனர். இன ரீதியிலான பிளவினை வேரூன்றச் செய்தவர்கள் பிரிட்டிஷ் காரர்கள்தான். 1833 அல்லது 1871 இல் இன ரீதியில் மக்களை அடையாளப்படுத்துவது முழுமையடைந்தது. 1833-இல் சட்ட சபைக்கு இனரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1871-இல் பிரிட்டிஷாரால் முதல் மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இக்கணக்கெடுப்பில் தமிழர்களும் சிங்களர்களும் முதன்முதலாக தனித்தனி இனங்களாக பிரிக்கப் பட்டனர். ' 11 இன்றைக்கும் மேற்கின் ஆயுத வியாபாரிகளுக்கு கொழுத்த சந்தையாகவும் சிதறியடிக்கப்பட்ட குடும்பங்களை ஆசிய ஆத்மாக்களின் அறுவடையாளர்களுக்கு எளிதாக அறுவடையாகக் கூடிய வயல்களாகவும் மாற்றியிருக்க கூடியவை இந்த இன வெறுப்பை தம்மில் உள்ளடக்கிய இனக்கோட்பாடுகள்தாம்.

தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகமெங்கிலும் இந்த செயல்பாதூடாழுங்கினை நாம் காலனியமெிஷினரி கூட்டு ஆராய்ச்சிகளில் காணலாம். உதாரணமாக அண்மையில் நடைபெற்ற ருவண்டாவில் நடைபெற்ற ஹுதூடட்சி இன மோதல்கள் ஏற்படுத்திய இனப்படுகொலை அவலங்களை அனைவரும் அறிவோம். இந்த இனமோதலின் தொடக்க வேர்கள் குறித்து பிரான்சின் மானுடவியலாளரான ஜீன்பெ¢யாரி லாங்லியர் கூறுகிறார், 'முதன்முதலாக ஹுதூடட்சிக்கள் வெவ்வேறு இனத்தை சார்ந்தவர்கள் எனும் தவறான கருத்தாக்கம் ஜான் ஸ்பீக் எனும் பிரிட்டிஷ் பயணியால் கூறப்பட்டது. மிஷினரிகள்,ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காலனிய அதிகாரிகள் ஆகியோரால் (மற்ற ஆப்பிரிக்க வரலாற்றைப் போன்றே) ருவாண்டாவின் வரலாறும் திரிக்கப்பட்டது. படையெடுத்து வந்த டட்சி இனத்தவரால் ஹுதுக்கள் அடிமையாக்கப்பட்டதாக மிஷினரிகளால் கற்பிக்கப் பட்ட வரலாற்றின் அடிப்படையிலேயே வெறுப்பு வளர்க்கப்பட்டது. ' 12

இவ்வாறாகத்தான் உலகமெங்கும் முக்கியமாக ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இனவாதத்தினை 'நற்செய்தியை பரப்பும் ' கருவியாக மிஷினரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தலைமுறைகளாக இந்த தேசங்களில் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகள் கணக்கிலடங்காதவை. இன்றைக்கும் தாய்க்கும் மகளுக்கும், தந்தைக்கும் மகனுக்கும் பிரிவினையை ஏற்படுத்த வந்த நற்செய்தியின் 'சமாதானத்தையல்ல, பட்டயத்தையே ' கொண்டு வரும் தன்மை அன்பின் கடவுளின் பெயரை பூவுலகில் மகிமைபடுத்திக் கொண்டுதான் உள்ளது.

குறிப்புக்கள்

1. ஜேம்ஸ் ஷாஃபர் (கேஸ் வெஸ்டர்ன் பல்கலை கழகம்) 'Migration, Philology and South Asian Archaeology, ' Aryan and NonெAryan in South Asia: Evidence, Interpretation and History, edited by J. Bronkhorst and M. Deshpande (University of Michigan Press, 1998).

2. The Life and Letters of the Rt. Hon. Fredrich Max Muller, vol I, edited by his wife (London: Longmans, 1902), 328. 


3. Adolphe Pictet in Essai de paleontologie linguistique (1859), மேற்கோள் காட்டப்பட்ட நூல் மைக்கேல் டானினோவின் The Invasion That Never Was (1996). 

4. Ernest Renan, L 'Avenir religieux des societes modernes (1860), டானினோவின் மேற்கூறிய நூலில் மேற்கோள் காட்டப்பட்டது.

5. Louis B. Synder, The Idea of Nationalism: Its Meaning and History (New York: Von Nostrand, 1962) 

6. 'Genesis of the Aryan race Theory and its Application to Indian History ' by Devendranath Swarup, வெளியான பத்திரிகை விவரம்: Manthan - Journal of Deendayal Research Institute (New Delhi, AprilெSeptember 1994). 

7. N. S. Rajaram, Aryan Invasion of India, The Myth and the Truth (Voice of India, 1993). 

8. Sri Aurobindo, 'The Origins of Aryan Speech, ' The Secret of the Veda, p. 554. 

9. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: Arun Shourie 's Missionaries in India - Continuities, Changes, Dilemmas (New Delhi: ASA, 1994), 149. 

10. Ana Pararasasingam, 'Peace with Justice. ' Paper presented at proceedings of the International Conference on the Conflict in Sri Lanka, Canberra, Australia, 1996.

11. காண்க : http://www.lacnet.org/srilanka/politics/devolution/item1342.html. 

12. மேற்கோள் காட்டப்பட்ட நூல் N. S. இராஜாராமின், The Politics of History (New Delhi: Voice of India, 1995). 

ஏசுவும், கிறுத்தவர்களும் ஆரியர்களா ?

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்,

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய,

வேரிய கமல பாதம் வினை அறப் பணிந்து போற்றி,

ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம் 

திரு.ஜடாயு அவர்களின் பதிவில் பெஸ்கி பாதிரியார் ஏசுகிறிஸ்துவை ஆரியன் என்று பாடுவதாக ஒரு அனானி பின்னூட்டியிருந்தார்.

இரண்டாம் உலகப் போர் முன்பு இந்த ஆரிய இனக் கொள்கை மிகவும் பிரபலம். ஹிட்லரின் இந்த ஆரிய இனவாதம்வாடிகனின் ஆசியுடனேயேகடைபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்திய வெள்ளையர்களுக்கு கிறித்துவை, தாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாய் புழுவாய் நடத்திவரும் யூத இனத்தில் பிறந்தவராகக் காட்டிக் கொள்ள அருவருப்பாக இருந்தது. குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் ஏசு யூதர் அல்லர், ஆரியர் என்ற "உயர்ந்த இனத்தைச்" சேர்ந்தவர் என்ற புது வரலாறு இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுப் பரப்புரை செய்யப்பட்டது.

ஆரிய என்ற வேர்ச்சொல்லில் இருந்து (கிரேக்க aristos) அரிஸ்டோ, அரிஸ்டோக்ரேட் என்று பல சொற்கள் அதே பொருள்பட ஐரோப்பிய மொழிகளில் இருந்தும், அதை ஓர் இனமாக்கியது இந்தக் காரணத்திற்காகத்தான்.

Stewart Chamberlain போன்ற அடிப்படைவாத கிறுத்துவ இனவெறியர்கள், ஏசுவை யூதர் அல்லர், ஆரியர் என்று பரப்பி யூதப்பெருங்கொலைக்கு வழிவகுத்தவர்கள். இந்த ஸ்டுவர்ட் ஒருபடிமேலே போய், ஏசுவை யூதர் என்று சொல்பவர் வடிகட்டிய மடையர்கள். ஒரு சொட்டு யூத ரத்தம் கூட அவர் நாளங்களில் ஓடவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம் என்றான். இவனின் வாயிலிருந்து உதித்த இன்ன பிற நஞ்சுக்களை இங்கே பார்க்கலாம். பின்னர் ஹிட்லரின் தோல்வி மற்றும் எதிர்பாராத யூத எழுச்சி போன்ற காரணங்களால், வாத்திகன் இந்த ஆரிய இனவாதக் குல்லாவைக் கழட்டி விட்டது. 

ஆனால் இந்தியர்களைப் பிரிப்பதற்கு வசதியாக இங்கே மட்டும் இந்த யாதொரு அடிப்படையுமில்லாத இனவாதத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதற்கு இந்த திராவிட Fascist கள் ஜல்லி ஒரு பக்கம் என்றால் மார்க்ஸ்வாத மடையர்களின் Tacit support இன்னொறு பக்கம். 

திராவிட Fascist களுக்கு இது அதிகார ஆசையினால் கடைபிடிக்கும் கொள்கை என்றால், எதிர்ப்புவாத மார்க்ஸ்வாதிகளுக்கு என்ன இலாபம் ? If you cannot beat them, Join them என்ற உடன் போக்கு "பொதுபுத்தி" யோ ? 

இப்போது அந்த அனானி கேட்ட கேள்வி,
இங்கே ஆரியன் என்பது ஏசுவின் இனமா அல்லது குணமா என்று தமிழ்மண ஆரியதிராவிட இனவியாதிகளே பதில் சொல்லட்டும்.

அதை அப்படியே வழிமொழிந்து இந்த பதிவின் மூலம் இனவாத துவேஷிகளைக் கேட்கிறேன். பதில் உள்ளதா ?

20 comments:

  1. 144000 யூதர்கள் மட்டுமே சொர்க்கத்துக்கு போவார்களாம். மற்றவர்கள் எல்லோரும் நரகத்துக்குத்தான் போவார்களாம்..

    ரட்சிப்பின் லட்சணம் இதுதான்.

    7:4 And I heard the number of them which were sealed: and there were sealed an hundred and forty and four thousand of all the tribes of the children of Israel.

    அதென்ன பைபிள் முழுவது யூதர்கள்தான் கடவுளின் மக்கள் மற்றவர்களெல்லாம் நாய்கள் என்று ஒரே கும்மி?

    ReplyDelete
  2. இன்றும் யூதர்கள் ஏசு உட்பட தினமும் சொல்லும் தினசரி ஜெபம்.
    I quote from little Sedur (Jewish prayer book).
    The exact prayer is this:
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a Gentile.”
    “Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a slave.”
    Blessed are you, Hashem, King of the Universe, for not having made me a woman.”

    This prayer is said every morning by millions of Jews around the world.

    இறைவனே என்னை பெண்ணாக படைகாததற்கு, யூதரல்லாதாரகப் படைக்காதற்கு அடிமையாக படைக்காதற்கு நான் ஆசிர்வதிக்கப் பட்டேன்.

    இந்த ஒரு இன வெறிக்கு ஆதாரமில்லத கற்பனை கதைகளான் தேர்ந்தெடுக்கப் பட்டவர் -எகிபிதிலிருந்து யாத்திரை என்ற வரலாற்று பொய்களை என்றும் பைபிள் கொண்டுள்ளதால் தான்.

    ReplyDelete
  3. பைபிளை சர்ச்ச் சிறையிலிருந்து மொழி பெயர்த்துத் தந்த திண்டேல் சர்ச்சினால் உயிரோடு சிலுவையில் கொல்லப் பட்டு பின் கொழுத்தப் பட்டார்.
    விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.
    No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.
    Page-266 The Religious World.

    ReplyDelete
  4. “The idea of a Universal Deity does not exist for most of the Biblical period; and every religion including YAWHism alest implicitly acnowledged the existance of other Gods (who however, tended to be impotent outside the boundaries of their own realms. Under these circumstances it was inevitable that a covenant of Israel enterend in to which Yahweh would focus on possession of the Land, the “promissed Land andthat this possession would ratify the exclusiveness of the relationship with their Diety in a very material way. The Biblical picture of a promissed Land is a strangly idealised one(for Eg.inthe allocation of Palestine to the different tribes, or the fixation as up on “Mount Zopm” a PLACE THAT OWE MORE TO THE IMAGINATION OF THE PROPHETS THAN TO THE TOPOGRAPHY OF JERUSALEM-
    ” Bible as Literature” , Oxford University Press

    ReplyDelete
  5. “Though most of this material is familiar to Scholars and specialists in the Fields, it is seldom made available to the wider Public and even when it does find its way into the books on the early Christian movement, it does not play a Major role in shaping our view of Christianity.”
    Page – xi-xii, Professor L.Wiken, Professor of History of Christianity –Notre dame University; Published by Yale University Press.

    “In contrast to the “Keep them Ignorant” policy, Protestantism has often, though not always, empasised literacy so that people could read the bible. The result was an enormous splintering of Protestantism. As people read, they also interpreted and often their interpretation was different from their Superiors, their denomination etd., So they started their Own Denomination.
    There are over 20,280 Christian Denominations in the world most of them Protestant, many of them based on some Variant interpretation of Bible”
    Pate 13,14. “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson- Practising Pastor & visiting Professor of Jordan University.

    “Surely God almighty could have found a less Blood thirst way of getting the Hebrews out of Egypt than murdering the Egyptian First Born (I am a First Born son, and I have a first born child) and killing the pursuing Forces of Pharaoh – a little sand storm would have stopped them with dry feet on the western shore. The vast Majority of those Egyptian mothers and fathers had nothing and to do with keeping the Hebrews in Egypt. Why should innocent Children be murdered and Parents suffer such loss when God himself hastened Pharaoh’s heart to keep the Hebrew there”

    P-42 “Authority, The Bible Who needs it-“ Henry O.Thompson

    ReplyDelete
  6. http://johnharmstrong.typepad.com/john_h_armstrong_/2009/01/pearls-swine-and-forced-character-formation.html

    ReplyDelete
  7. பெர்னார்ட் on September 27, 2009 at 11:25 pm
    அசோக் குமார் கணேசன் இங்கே இந்துத்த்வா காரர்களின் பொய் பித்தலாட்டத்தை நன்றாக அம்பலப்படுத்திவருகிறார்.

    அய்யா அரவிந்தன் நீலகண்டன். உலகம் உங்களது இந்துப்புராணங்களில் பல கோடி வருடங்கள் பழையதாக சொல்லப்பட்டிருக்கலாம்.

    ஆனால், பைபிள் அய்யம்திறிபற 6000 ஆண்டுகளுக்கு முன்னரே கர்த்தரால படைப்பட்டது என்று கூறிவிட்டது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் கர்த்தரின் முன்னால் முதலாவதாக பாவம் செய்த ஆதாம் ஏவாளின் பாவங்கள் நம் ஒவ்வொருவர் மீதும் இருப்பதாலேயே நாம் எல்லோரும் பாவிகளாகிறோம்.

    அநத பாவத்த்தை நீக்குவதாலேயே கர்த்தராகிய ஏசுகிறிஸ்துவை ரட்சகராக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

    இந்துப்புராணங்கள் ஆதாம் ஏவாள் என்று யாரும் இல்லை என்று சொல்கின்றன. ஆனால், ஏவாள் இருந்ததை அறிவியலே நிரூபித்தி விட்டது.

    mitorchondrival eve என்று தேடிப்பாருங்கள்.

    நாம் குரங்கிலிருந்து வந்ததாக இருந்தால் ஆதாம் ஏவாளும் இல்லை. முதல் பாவமும் இல்லை. இயேசு கிறிஸ்துவுக்கு வேலையும் இல்லை. தெரிகிறதா?

    ReplyDelete
  8. தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்-அ. கணேசன் ” எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர்கள், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

    //கால்டுவெல் எந்தவித உள்நோக்கமும் அற்ற உண்மையான ஆய்வாளர் அல்லர். ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற அவரது நூல் மிகச் சிறப்பான ஆய்வு நூல் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் இந்தியப் பண்பாட்டு, மரபு பற்றிய ஏளனமான பார்வையும், கிறிஸ்தவத்தை இந்த மண்ணில் வேரூன்றச் செய்ய வேண்டுமென்றால் தம்முடைய மரபு குறித்த பெருமித உணர்வை இந்த மண்ணின் மைந்தர்களிடமிருந்து நீக்கிவிட வேண்டுமென்ற நோக்கமுமே அவருடைய செயல்திட்டத்துக்குப் பின்புலமாக அமைந்த அம்சங்களாகும்.
    கால்டுவெல் எழுதிய History of Tinnevelly என்ற நூலின் மூலமும், சென்னை அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள மண்டல வரலாற்றுத் தொகுப்பு நூல்களின் மூலமும் தமிழர்களின் வரலாற்று உணர்வு குறித்து கால்டுவெல் கொண்டிருந்த ஏளனமான கண்ணோட்டம் புலப்படுகிறது. பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கிழக்கிந்தியக் கும்பினியின் சர்வேயர் ஜெனரல் காலின் மெக்கன்ஸியால் 1803ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டன. இவ்வம்சாவளி வரலாறுகள் குறித்துக் “கட்டுக்கதையைவிட மோசமான புனைவுகள்” என்று கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் சென்னைக் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1980ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் இவ்வரலாறுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை சில இடங்களில் சற்று மிகைப்பட எழுதப்பட்டிருப்பினும் நம்பகமான வரலாற்று அடிப்படையைக் கொண்டவையே என்பதில் ஐயமில்லை. அவ்வாறிருக்க, இவ்வளவு கடுமையான விமர்சனத்தை இவ்வரலாறுகள் குறித்துக் கால்டுவெல் முன்வைத்ததன் நோக்கம் என்ன? இந்தியர்களுக்கு வரலாற்றுப் பார்வை அறவே இல்லை என்ற எண்ணம் கொண்டவர் கால்டுவெல் என்பதுதான் இதற்குப் பதில்.
    காலின் மெக்கன்ஸி, பிரான்சிஸ் வைட் எல்லிஸின் நெருங்கிய நண்பர் என்பதோடு இவ்விருவரும் ஆய்வுப் பணிகளிலும் தம்முள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஆவர். காலின் மெக்கன்ஸியும் எல்லிஸ¤ம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் நிர்வாக அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் ஆவர். அவர்களுக்குக் கால்டுவெல்லைப் போல கிறிஸ்தவ மதப்பரப்பல் நோக்கம் இருந்ததில்லை. நல்ல நிர்வாகிகள் என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இருந்ததால் அவர்கள் இந்த மண்ணின் மரபுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளில் காலனி ஆதிக்க மனப்பான்மை சிறிதும் இருந்ததில்லை என்பதல்ல எமது வாதம். ஆளப்படுவோரின் வாழ்வியலை அனுதாப உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டுமென்ற முயற்சி அவர்களிடம் இருந்தது என்பதைத்தான் குறிப்பிட விழைகிறோம். கள ஆய்வு அனுபவங்கள் அவர்களுடைய கண்ணோட்டத்தைச் செழுமைப்படுத்தின.
    கால்டுவெல்லுக்கோ மதமாற்றக் களத்தில் அமோக மகசூலை அள்ளிவிட வேண்டுமென்ற உள்நோக்கம் இருந்த அளவுக்கு இந்த மண்ணின் மரபுகள் குறித்து அனுதாபத்தோடு கூடிய புரிந்துணர்வு இல்லை. Tinnevelly Shanars என்ற அவருடைய நூல் நெல்லைச் சீமைச் சான்றோர் சமூகத்தவர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்தை விசுவாசத்தோடு பின்பற்றி வந்த சான்றோர் சாதியினரே அவர் மீது கடும் சீற்றம் கொண்டனர். ஞானப்பிரகாசம் நாடார் என்ற புராடஸ்டண்ட் கிறிஸ்தவர் 1883ஆம் ஆண்டில் பாளையங்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் இங்கிலாந்துப் பிரதமர் கிளாட்ஸ்டனுக்கு இந்த நூலைத் தடை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோள் ஏற்கப்படாது போய்விட்டாலும்கூட, நெல்லைச் சீமையில் தம்மால் நிம்மதியாகத் தொடர்ந்து வாழ முடியாது என்று உணர்ந்துகொண்ட கால்டுவெல் கோடைக்கானலுக்குச் சென்று தம் இறுதிக்காலம் வரை, சற்றொப்ப இருபது ஆண்டுகள் அங்கேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணமாக அமைந்தது சான்றோர் சமூகத்தவரின் பெருமிதம் வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ இயலாத வண்ணம் அவருடைய பார்வையில் படிந்து போய்விட்ட, கிறிஸ்தவ மதம் சார்ந்த ஐரோப்பிய இன மேன்மை என்ற காமாலைக் கண்ணோட்டம்தான்.

    ReplyDelete
  9. திராவிட மொழிகள் குறித்த பிரான்சிஸ் வைட் எல்லிஸின் முன்னோடிப் பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரத்தைக் கால்டுவெல் வழங்கவே இல்லை. எல்லிஸ் கிறிஸ்தவ மதத்தின்பால் விசுவாசம் உடையவர் அல்லர். பெளத்த சமயம் குறித்த அனுதாபத்தோடு கூடிய புரிதல் அவரிடம் இருந்தது. திருவள்ளுவர் உருவத்தைப் பொற்காசில் பொறித்து வெளியிடும் அளவிற்கு திருக்குறளை நேசித்தவர் எல்லிஸ். சென்னைப் பட்டிணத்தின் குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்குவதற்காக 27 கிணறுகள் வெட்டுவித்து வார திதி, நக்ஷத்திர யோக கரணம் (பஞ்சாங்கம்) பார்த்துப் புண்யாஹவாசனம் செய்தவர் எல்லிஸ். (திருமலை நாயக்கர் அரண்மனைக் காட்சிக்கூடத்திலுள்ள கல்வெட்டு வாசகம்.) இப்படிப்பட்ட ‘பாசண்டி’யை கால்டுவெல் போன்ற விசுவாசமான கிறிஸ்தவரால் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இதுதான் கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் இருந்த அடிப்படைப் பிரச்சினை ஆகும்.
    பாளையப்பட்டுகளின் வம்சாவளி வரலாறுகள் கட்டுக்கதையைவிட மோசமானவை எனக் குறிப்பிடும் கால்டுவெல் தஞ்சைப் பெரியகோயில் மாவு விற்ற கிழவியின் பொருளுதவியால் கட்டப்பட்டது என்றும், அவள் மாவு விற்கும் நேரத்தில் மழை பெய்து மாவு கரைந்துவிட்டால் அவள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்பதற்காகக் கரிகால் சோழன் மேகங்களைச் சிறை செய்தான் என்றும் குறிப்பிடும் ஓர் அபத்தமான கதையினை வரலாற்றுக் குறிப்பு என்ற பெயரில் தொகுத்துள்ளார்.
    மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் பற்றிய புராணக் குறிப்பு சிலப்பதிகாரத்தில் முதன் முதலில் இடம்பெறுகிறது. புதிய கற்காலப் பண்பாட்டு நிலையிலிருந்து இரும்பு யுக நாகரிகத்திற்குத் தமிழ்ச் சமூகம் மாற்றம் அடைந்தபோது, நீரைத் தேக்கி பிரம்மாண்டமான நீர் நிலைகளை உருவாக்கிக் குடிநீர் மற்றும் நீர்ப் பாசன வசதிகளைப் பாண்டிய மன்னர்கள் மேம்படுத்தி அதன்மூலம் மழை பொய்த்த வறட்சிக் காலங்களிலும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வகை செய்தனர் என்ற வரலாற்றினை இது உணர்த்தக்கூடும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கால்டுவெல்லின் கண்ணோட்டத்தில் மழை பிணித்தாண்ட பாண்டிய மன்னன் கரிகால் சோழன் என்றும், அவன் மேகத்தைச் சிறை செய்தது மாவு விற்கும் கிழவியின் வியாபாரத்தைக் காப்பதற்குத்தான் என்றும் தோன்றியிருக்கின்றன. தமிழக வரலாறு பற்றிய கால்டுவெல்லின் வரலாற்றுக் கண்ணோட்டம் இதுதான்.
    பாளையப்பட்டுகளின் ஆதாரபூர்வமான வரலாற்றைக் கட்டுக்கதையைவிட மோசமானதென்று குறிப்பிடும் கால்டுவெல் “மாவு விற்கும் கிழவி” போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை வரலாறு என்று குறிப்பிடுவதன் உட்பொருள் என்ன? கால்டுவெல் ஆய்வுக் கண்ணோட்டமில்லாத அடிமுட்டாள் அல்லர். மிகச் சிறந்த அறிஞர். ஆனால், ஆங்கிலேயர்களை எதிர்த்து இன்னுயிர் ஈந்த கட்டபொம்மன் போன்ற திராவிட வீரர்களை (பாளையக்காரர்களை) இந்த மண்ணுக்கு உரிமையற்றவர்கள் என்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களே உண்மையான திராவிடர்கள் என்றும் ஒரு சித்திரத்தைத் தீட்ட முயன்றவர் கால்டுவெல். அவர் தமிழர்களை முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாவும் கருதியதால்தான் மாவு விற்கும் கிழவி பற்றிய அபத்தமான கதையை வரலாற்றுக் குறிப்பாகப் பதிவுசெய்துள்ளார் என்பதுதான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை. திராவிட இயக்கத்தாரின் தொடக்க கால கோஷங்களுக்கும், ‘தீ பரவட்டும்’ போன்ற இயக்கங்களுக்கும் கால்டுவெல் ஒரு முன்னோடியான உந்துசக்தியாக இருந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.//

    ReplyDelete
  10. A related News, as to what is happening in America.

    //More Americans say they have no religion

    Posted March 9, 2009

    March 9, 2009
    Yahoo News
    http://news.yahoo.com/s/ap/20090309/ap_on_re/rel_religious_america/print

    ReplyDelete
  11. http://www.dharmanext.org/2008/08/bad-manna-christian-conversions-in.html

    ReplyDelete
  12. chillsam Says:

    October 23, 2009 at 1:16 pm | Reply
    http://www.youtube.com/watch?v=pHRP0I2SrVs&feature=player_embedded
    Why the Bible..?
    Here is the Answer..!
    நண்பர் சில்சாமிற்கு நன்றி.

    பல பைபிளியற் அறிஞர்கள் தெளிவாக ஆய்விற்குப்பின் பெரும்பாலோனோர் ஏற்றபின்னரும்; மழுப்பல் பாதிரிகள் நூற்றாண்டிற்கு முந்தைய பழைய மூட – குருட்டு நம்பிக்கைகளைக் கொண்டு இன்னும் பைபிளை உயர்த்திப் பேசி ஏமாற்றுகின்றனர், என்பதற்கு உதாரணம் ரவி சகாரியாவின் காணொலி.

    சம்பவங்கள் முடிந்து பல நூறு வருடம் முடிந்தபின் முன்பு வாழ்ந்ததான கதாபாத்திரங்கள் இவற்றை முன்பே கூறியதாக புனைவது பழைய ஏற்பாட்டு வழக்கம். இது புதிய ஏற்பாட்டிலும் காணலாம்

    சிறு உதாரணம் காண்போம்.

    பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகம்- இது புராண மூட நம்பிக்கைப்படி BCE பொ.ச.மு. 15ம் நூற்றாண்டு வாழ்ந்த கதைப் பாத்திரம் மோசே என்பவர் புனைந்தது. இன்று பைபிளியல் அரிஞர்கள் இது 3ம் ல் தான் இன்றைய வடிவில் புனையப் பட்டது என்கின்றனர்.

    மோசே அவருடைய முன்னோர் ஆபிரகாம் என்பவர் கதைப்படி 700 வருடம் முன்பு வாழ்ந்தவர். அவரை ஈராக்கிலிருந்து இஸ்ரேல் தேர்ந்தெடுத்து அனுப்பியதாகவும், அவர் வாரிசுகள் வேறு நாடு சென்று 400 வருடம் பின்பு 4 தலைமுறைக்குப் பின் திரும்பும் என்றும் கதை. வேறொரு வசனம் 430 வருடம் என்கும். 4 தலைமுறை என்றதான கதை, கொடுக்கப்பட்டுள்ள சந்ததிப் பட்டியல்படி ஒரே ஒரு தலைமுறை மட்டுமே வரும்.

    ஆபிரகாமிற்கு எபிரேய மொழி பேசும் மக்களுக்கான சிறு எல்லைத் தெய்வம் எகிபிதின் நைல் நதிய்னிலுருந்து எபிராய்த்து நதி வரை இடத்தின் அரசியல் ஆட்சி உரிமை நிரந்த்ரமாகத் தந்ததாகக் கதை. கடந்த 4000 வருடங்களில் ஒரு நாள் கூட இந்த மொத்த நிலப் பரப்பு எபிரேயர் வசம் முழுமையாக வரவில்லை. கர்த்தர் யவ-வினால் சொன்னதைச் செய்ய முடியவே இல்லை.
    ஆதியாகமம்: 15
    13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி, உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்

    18. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

    சுவிசேஷக் கதைகளில் ஏசு உயிர்த்ததாகக் கதை- மாற்கு சுவியின் 5ம் நுற்றாண்டிற்கு முந்தய ஏடுகளில் பழைய உடம்பில் ஏசு மீன்டும் வந்த காட்சி எல்லாம் கிடையாது.

    மாற்கு16:8 வசங்களுடன் முடிகிறது. இங்கு ஏசு வாயில் தான் உயிர்த்த பின் கலிலேயோ ச்ல்வதாக வெள்ளை சட்டை வாலிபர் பெண்களிடம் சொல்வார்.

    மத்தேயுவும் இதே கதையை சொல்வார். மத்தேயு மூல மாற்கில் இல்லதபடி ஏசு கலிலேயோ மலையில் ஒரே ஒரு முறை உயிர்த்ததான ஏசு காட்சி தந்ததாகக் கதை. மாற்கு 14:28, மத்தேயு26:32ல் ஏசு உயிரோடு இர்ந்த போதெ காட்சி கலிலேயொவில் என தீர்க்கம் சொன்னதாகக் கதை.

    லுக்கா சுவியில் காட்சி ஜெருசலேமில் மட்டும் தான் உயிர்த்ததான ஞாயிறு அன்றே வானத்திற்கு கொண்டு செல்லப் பட்டார் ஏசு. இவற்றை எல்லம் மாற்றியபடி வேறொரு கதை யோவான் சுவியிலும் நடபடிகளிலும்.

    இப்படி தன்னிச்சையாகக் கதைப் புனைந்தவையை உண்மை தேடும் நடுநிலையாளர் யாரும் ஏற்கமாட்டர். குருட்டு நம்பிக்கையாளர்கள் தெஇவு பெற வேண்டும்.

    The Collegeville Bible Commentary, By Litugical Press, Collgeville, Minnesota; 1989 – What this Author says on the Book Daniel

    A kind of literature that flourished from 200BCE to 00 BCE (see for example, Isa24-27, Ezek 38-39, Dan 7-12, Joel 3, 2Esd; Rev) apocalyptic(Greek for “unveiling” uncovering or revelation) … Pges 533-534

    Daniel (second century BCE) PAGE 534

    On zechariah-

    The final date for editorial process of First and Second Zecoriah is before 200BCE. Page-616

    பைபிளியற் அறிஞர்கள் மிகத் தேளிவாக நீண்ட ஆய்விற்குப்பின் ஏற்கும் உண்மைகளை மறைத்து இன்றும் அருவருக்கும் பொய்களை பரப்ப்கிறார் ரவி செகாரியா.

    ReplyDelete
  13. http://www.dinamani.com/specials/kannottam/2013/09/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/article1806755.ece
    மாக்ஸ்முல்லரிடம் இவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும், மாக்ஸ்முல்லர் உட்பட மேலை நாட்டு அறிஞர்கள் இந்தியா பற்றியும், அதன் ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றியும் சரியாக அறிந்திருக்கவில்லை என்பது சுவாமிஜிக்குத் தெரிந்தே இருந்தது. மாக்ஸ்முல்லரும் தமது சில கட்டுரைகளில் இந்து மதத்தைப் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் சில உண்மையற்ற கருத்துக்களை கூறியிருந்தார். அதுபற்றி, 'பேராசிரியர் மாக்ஸ்முல்லர் இந்து மதத்தைப் பற்றி எழுதுகின்ற எல்லா நூல்களிலும் இறுதியில் அதனைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு கூற்றை சேர்த்துவிடுகிறார் என்றாலும், நாளடைவில் முழு உண்மையையும்அவர் கண்டேயாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அவர் கடைசியாக எழுதியுள்ள வேதாந்தம் என்ற நூலின் பிரதி ஒன்றை முடிந்த அளவு விரைவில் பெறுங்கள்; அந்த நூலில் அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதை நீங்கள் காணலாம் - மறுபிறவி, மற்ற எல்லாவற்றையுமே ஏற்றுக் கொளகிறார்' என்று எழுதுகிறார் அவர்.

    ReplyDelete
  14. ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியா?'
    http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=1109

    ReplyDelete
  15. http://thillaiakathuchronicles.blogspot.com/2014/03/ToVishnuNamboothiriSir.html
    தாங்கள் ஸ்வாமி விவேகானந்தரின் வாக்குகளை மேற்கோள் காட்டி “Comparative Grammar of Dravidian Linguistics”, எனும் ஆராய்ச்சிப் புத்தகம் எழுதிய ராபர்ட் கால்ட்வெல் (Robert Caldwell - http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell) எனும் மனிதாபிமானமுள்ள ஒரு அறிஞரை துரோகி என்று சொல்லியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிச் சொல்ல உங்களுக்குத் தைரியம் தந்தது என்று நீங்களே உங்கள் கட்டுரையில் (மாத்ருபூமி செய்தித்தாளின் வாராந்திர ஞாயிறு மலரில்-ஜனவரி 16 & 23) சொல்லியிருக்கும், திரு. C. நாராயணராவ் மற்றும் திரு N.V. கிருஷ்ணவாரியர் போன்றவர்கள் எழுதியவையும், சொல்லியவையும்தான் ஆதாரம் என்றதால், அதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம், திரு நாராயணராவ், “சுத்தமான திராவிட மொழி என்று ஒன்று இருக்குமேயானால் அது இந்தி மொழி அன்றி தமிழல்ல” என்றெல்லாம் கண்மூடித்தனமாய் சொன்னதாலும், இப்படிச் சொல்லும் அவரது புத்தகத்தை வாசித்ததும், திரு கிருஷ்ணவாரியர் ஆவேசத்துடன் (நீங்கள் சொன்னதுதான்), “இந்தியாவுக்கு மிக அதிக அளவில் துரோகம் செய்தது ராபர்ட் கால்ட்வெல் தான்”, என்று சொன்னதும்தான்

    ReplyDelete
  16. மாக்ஸ்முல்லர் என்ன செய்தார்? அசோகர் கல்வெட்டில் குறித்த வடமேற்கு இந்திய மன்னர்களின் காலம் தெரிந்ததால் புத்தர் காலத்தைக் கணக்கிட்டார். உபநிஷத்துக்களில் புத்த மதத்தின் சாயல் கொஞ்சமும் இல்லை என்றவுடன் அவராக அதற்கு 200 வருஷம் பழையது என்று முத்திரை குத்தினார். ஏன் 200 வருஷம்? ஒரு மொழி 200 வருஷத்தில் மாறுதல் அடையும் எனபது அவர் கணிப்பு. உபநிஷத்துக்களைவிட ஆரண்யகம் நடை பழமையானது.ஆகையால் அவைகளுக்கு இன்னும் 200 ஆண்டுகள் கொடுப்போம். அதைவிட பிராமணங்கள் மொழி நடை பழையவை. அவைகளுக்கு இன்னும் 200 ஆண்டுகள் கொடுப்போம். அவைகளை விட ரிக் வேத துதிகள் மொழி நடையில் இன்னும் பழமையானவை. அவைகளை இன்னும் 200 ஆண்டு கொடுத்து கி.மு.1200 க்கு முன் வைப்போம் என்றார்.
    வேதம் என்பது மற்ற மொழிகள் மாதிரி மாறாததது.ஏனெனில் அவை ஸ்வரம் மாறாமல், எழுத்து மாறாமல் வாய்மொழியாக கற்பிக்கப்படுகிறது என்பதால் நானே மக்ஸ்முலர் முடிவை ஏற்க மாடேன். ஆனால் மற்றவர்கள் எல்லாரும் காரணமே இல்லாமல் தொல்காப்பியத்தின் காலத்தை கி.மு20000 ஆண்டு முதல் கி.பி.எட்டாம் நூற்றாண்டு வரை வைத்து கூத்தடிப்பதைவிட இது கொஞ்சமாவது தர்க்க ரீதியில் அமைந்துள்ளது. ஆகவே மொழி மாறாமை கொண்டு முதல், இடை, கடைச் சங்கங்களுக்கு நூறு நூறு ஆண்டு கொடுத்து குத்து மதிப்பாக கணித்துள்ளேன்.
    swamiindology.blogspot.com
    https://groups.google.com/forum/#!msg/mintamil/c8c_5BA33vM/6lhlW3pgsJoJ

    ReplyDelete
  17. " When the walls of the mighty fortress of Brahmanism are encircled, undermined & finally stormed by the soldiers of the cross, the victory of Christianity must be signal and complete" ( Modern India and Indians, p.247).

    ReplyDelete
  18. மத்தேயு23:15 ' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.

    ReplyDelete
  19. பாப்பனுங்க ஆரியர்னு தானே எல்லா பாட புத்தத்திலேயும் தராங்க

    ReplyDelete

ஏசு ஜெபம் செய்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி -கிறிஸ்தவ மத போதகர் கெனிட்ராஜ் கைது

  ஞாயிறு தோறும் ஜெபித்துவிட்டு பாஸ்டரை சந்திக்க நேரிடும் போது இடையில் வந்துள்ள சாத்தானை என்னவென்று சொல்வது தெரியாமல் இருவரும் திகைத்தனர் htt...