Saturday, March 8, 2014

தோமா நடபடிகள்- Acts of Thomas

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாதுபரப்பிவிடப்பட்டுள்ள கதைகளின் முதல் அடிப்படை ஊகக் கதை - 3ம் நூற்றாண்டிலே   செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான தோமோவின் நடபடிகள் என்பது ஆகும். ACTA THOMA 


இங்கே முழுமையாகக் காணலாம்
http://www.earlychristianwritings.com/text/actsthomas.html 
இந்த தோமோவின் நடபடிகள் பற்றி அறிஞர்கள் கூறுவதைக்  காணலாம்
http://en.wikipedia.org/wiki/Saint_Thomas_of_Mylapur
The acts of Judas Thomas the apostle[3] written by Jewish poet Bardesan in the 3rd century mentions Calamina in Persia as the place where St. Thomas was martyred. Saint Thomas is said to have visited the (historical) kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila to build a Palace for KingGondophares where he was commissioned to build a palace for the King. Thomas is said then to have visited the kingdom of Misdaeus (also called Mazdai). Gondophares and Mazdai were Greco-Persian Kings not related to Dravidian Tamils.
The acts then state that Thomas converted the wife of King Misdeus, Queen Tertia, Princess Mygdonia wife of Charisius, Prince Juzanes and Cyphorus who was ordained as Deacon. The infuriated King Misdaes ordered four soldiers to take Saint Thomas to a hill in his Persian kingdom and spear him where he was martyred. Thomas's remains were moved to Edessa, Mesopotamia. All these are Greco-Persian, not ancient Tamil names.[citation needed] Bardesan never mentioned Brahmins as the killers of Saint Thomas; this tradition is Portuguese.[citation needed] Syrian Christians appeared in Madras only when it became an important outpost of the Delhi Sultanate in the 13th century. Ancient Tamils ofChola Dynasty and Pandyan Kingdoms never knew Syrian Christians. 
http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore
The acts of Judas Thomas the apostle[3] written by Jewish poet Bardesan in the 3rd century mentions Calamina in Persia as the place where St. Thomas was martyred. Saint Thomas is said to have visited the (historical) kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila to build a Palace for King Gondophares where he was commissioned to build a palace for the King. Thomas is said then to have visited the kingdom of Misdaeus (also called Mazdai). Gondophares and Mazdai were Greco-Persian Kings not related to Dravidian Tamils.
The acts then state that Thomas converted the wife of King Misdeus, Queen Tertia, Princess Mygdonia wife of Charisius, Prince Juzanes and Cyphorus who was ordained as Deacon. The infuriated King Misdaes ordered four soldiers to take Saint Thomas to a hill in his Persian kingdom and spear him where he was martyred. Thomas's remains were moved to Edessa, Mesopotamia. All these are Greco-Persian, not ancient Tamil names. Bardesan never mentioned Brahmins as the killers of Saint Thomas;
  தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னனின் பாலைவன நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறதுமச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.

The Ninth Act: of the Wife of Charisius.

87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;
  
The martyrdom of St. Thomas the Apostle
Icon of the Martyrdom of St. Thomas (taken from the Metropolis of Artis website: http://www.imartis.gr/imartis/texni.php)


இந்த தோமோ நடபடிகள் பற்றி ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ஸ் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) இவர்கள் முக்கிய பதிப்பு-  தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறுஎனப்படும்- பட்லர்ஸ் லைவ் 
ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints-1937)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.
தோமோ பற்றிக்கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில்
 யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது 
என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என 
ஆரம்பிக்கிறார். அவர்“தோமோ  நடபடிகளை விமர்சிக்கையில்இந்தக் 
கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சிலவிபரங்கள் 
எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் 
உண்மையில்லை என்கிறார்.
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Story would have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.
What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.
- The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24.

செயின்ட் தாமஸ்- தோமையர்- புனித தோமாவின் உண்மையான மண்டை ஓடு கொண்ட கிரேக்க பட்மொஸ் ஆர்த்தடக்ஸ் சர்ச்



http://en.wikipedia.org/wiki/Knanaya

Early mentions[edit]

The first known written evidence for a division in the Saint Thomas Christian community dates to the 16th century, when Portuguese colonial officials took notice of it. A 1518 letter by a Jesuit missionary mentions a conflict between the children of Thomas of Cana, hinting at a rift in the community in contemporary times.[12] In 1579 another Jesuit named Monserrate wrote on the tradition of Thomas of Cana's two wives for the first time; he describes the division of the community, but gives no details about either side.[5] A 1603 letter by Portuguese official J. M. Campori further discusses the division, which had by that point become intermittently violent; Campori likewise traces its origin to the story of Thomas' two wives. None of these sources explicitly name the two sides as Northists and Southists.[13]
சென்னை மயிலை உயர்மறை மாவட்டம் தன் 100% பணத்தில் கிறிஸ்துவத் தமிழ்த்துறை என நடாத்தி அதில் பலப் பல பி.எச்டி. வாங்கலியோ என வழங்ககி உள்ளது, தொடர்கிறது. அது பற்றிய விபரங்கள்

பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்



Photo: தோமா இந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும் ஆண்டோ கி.பி முதல் நூற்றாண்டு...ஆனால் முதல் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றிய ஆண்டோ கி.பி ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றே கருதப்படுகின்றது. இந்நிலையில் சுமார் நானூறு ஆண்டுகால இடைவெளியில் உள்ள அவர்களை எவ்வாறு ஒன்றிணைக்கின்றீர்கள்?" என்றக் கேள்வி இப்பொழுது இயல்பாகவே எழலாம்.

உண்மைதான் நானூறு ஆண்டுக் கால இடைவெளியில் இருக்கும் மனிதர்களை வெறும் அவர்கள் தோன்றிய இடத்தினை வைத்து மட்டுமே ஒன்றிணைத்துக் கூறுவது சரியானதொன்றாக அமையாது. இந்நிலையில் அவர்களை நாம் ஒன்றிணைத்துக் கூறுவதற்கு மற்றத் தக்கச் சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு சான்றுகள் இருக்கின்றனவா என்று நாம் பின்னர் காண்போம். ஏனெனில் தோமா தமிழகத்தில் மயிலையில் வாழ்ந்த காலம் என்றுக் கூறப்படுகின்ற அதே காலத்தில் அதே ஊரினில் வாழ்ந்த ஒருவர் இப்பொழுது நமக்காகக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

அவர் வேறுயாருமில்லை 'தமிழகம் வான்புகழ் அடையக் காரணமாயிருந்த வள்ளுவரே அவர்'.

தோமா மயிலையில் வாழ்ந்து இருந்ததாக கூறப்படும் அதே முதல் நூற்றாண்டில் அதே மயிலையில் இருந்து தோன்றியவர் தான் திருவள்ளுவர். இப்பொழுது, தோமா தமிழகத்தில் வாழ்ந்து இறைக் கருத்துக்களை பரப்பினார் என்றால் அவர் வாழ்ந்த அதே காலத்தில் அதே நகரத்தில் வாழ்ந்த வள்ளுவரும் அக்கருத்துக்களைக் கேட்டு இருக்க வேண்டுமே...அவ்வாறு கேட்டு இருந்தால் அக்கருத்துக்கள் அவரது நூலான திருக்குறளினில் இடம் பெற்று இருக்க வேண்டுமே...அவ்வாறு இடம் பெற்று இருந்தால் தானே தோமா மயிலையில் இறைக் கருத்துக்களைப் பரப்பினார் என்று நாம் கருத முடியும். எனவே இப்பொழுது நாம் திருக்குறளில் தோமா பரப்பிய கிருத்துவின் கருத்துக்கள் யாவேனும் இருக்கின்றனவா என்பதனைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் சற்றுக் காணத்தான் வேண்டி இருக்கின்றது.

பொதுவாக இன்றுவரை வள்ளுவரின் சமயம் குறித்து விவாதங்கள் நீண்டுக் கொண்டேத் தான் சென்றுக் கொண்டு இருக்கின்றன. சிலர் அவரை சமண சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். சிலர் அவரை சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்தவர் என்றுக் கருதுகின்றனர். ஆனால் சமீப காலமாக வள்ளுவர் கிருத்துவக் கருத்துக்களைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தும் நிலவி வருகின்றது. அவ்வாறு அவர்கள் கருதுவதற்கு திருக்குறளில் கிருத்துவின் கருத்துக்களின் தாக்கம் பல தென்படுகின்றன என்ற எண்ணமே முக்கியமானதொன்றாகும். இப்பொழுது அவர்கள் கூறும் அந்த கிருத்துவின் கருத்துகளின் தாக்கங்கள் என்னென்னவென்று நாம் சற்றுக் காணலாம்.

1) திருக்குறளின் பாயிரம் அமைப்பு:

திருக்குறளின் பாயிரத்தில் நான்கு அதிகாரங்கள் உள்ளன,

1) கடவுள் வாழ்த்து
2) வான் சிறப்பு
3) நீத்தார் பெருமை
4) அறன் வலியுறுத்தல்

பொதுவாக அனைத்து தமிழ் நூல்களிலும் முதலில் இறை வணக்கப் பகுதி இடம் பெறுவது இயல்பு. அதன்படியே திருக்குறளிலும் முதலில் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் வருகின்றது. ஆனால் ஆய்வாளர்களைக் குழப்புவது என்னவென்றால் பாயிரத்தில் கடவுள் வாழ்த்து வர வேண்டியது சரி, ஆனால் ஏன் அதனைத் தொடர்ந்து வான் சிறப்பு என்றும் நீத்தார் பெருமை என்றும் அறன் வலியுறுத்தல் என்றும் மூன்று அதிகாரங்களை வள்ளுவர் பாயிரத்தில் சேர்த்து இருக்கின்றார் என்ற ஒரு கேள்வி தான் அது.

இன்று பெரும்பாலும் 'வான் சிறப்பு' என்றால் மழையைச் சிறப்பிக்கும் அதிகாரம் என்றும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொள்பவர்களை குறிக்கும் அதிகாரம் என்றுமே பொருள் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆனால் அந்தப் பொருள்கள் முழுமையான அர்த்தத்தினைத் தரவில்லை. காரணம் மழையைச் சிறப்பாக வருணித்து பாயிரத்தில் சேர்க்கும் வழக்கம் நூல் ஆசிரியர்களிடையே இருந்தது இல்லை. சிலர் மழை இல்லாது உலகம் அமையாது அதனால் தான் வள்ளுவர் மழையைச் சிறப்பித்து இருக்கின்றார் என்றும் கூறுவர். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோம் என்றால் மழை மட்டுமே உலகில் முக்கியமான ஒரு பொருள் கிடையாது, நிலம், காற்று போன்ற மற்ற விடயங்களும் முக்கியமானவைகளே. எனவே ஏன் வள்ளுவர் மழையை மட்டும் சிறப்பித்து வைத்து இருக்கின்றார் என்று ஒரு கேள்வியும் நிலவிக் கொண்டு இருக்கின்றது.

பின்னர், 'நீத்தார் பெருமை' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் ஏன் தனியாக துறவு மேற்கொள்பவர்களைப் பற்றி எழுத வேண்டும்?... அதான் அறத்துப்பாலில் 'துறவறம்' என்று தனியாக துறவிற்கே ஒதுக்கி இருக்கின்றாரே பின்னர் ஏன் பாயிரத்திலும் அதனைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்? என்ற ஒரு கேள்வியும் இன்று நிலவிக் கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தான் சில ஆராய்ச்சியாளர்கள் சில புதிய நோக்கினைக் மேலே கூறியுள்ள அந்த அதிகாரங்களுக்கு வழங்கும் பொழுது நாம் அந்த நோக்கினிலும் சற்றுச் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. இப்பொழுது அவர்கள் கூறும் கருத்துக்களைப் பார்ப்போம். அவர்களின் கூற்றுப்படி,

'வான் சிறப்பு' என்று பாயிரத்தில் வழங்கி இருக்கும் அதிகாரம் மழையைக் குறிப்பதில்லை மாறாக இறைவனின் அருள்/ பரிசுத்த ஆவியினைக்  குறிக்கின்றது மேலும்,

'நீத்தார் பெருமை' என்ற அதிகாரம் துறவறம் மேற்கொள்பவர்களைக் குறிக்காது மக்களுக்காக உயிர் நீத்த இயேசுவைக் குறிக்கின்றது மேலும்,

ஒரே இறைவன் மூன்று நிலைகளில் விளங்குவதினால், பாயிரத்தில் வெறும் கடவுள் வாழ்த்தினை மட்டும் வைக்காது இறைவனின் மற்ற நிலைகளையும் விளக்கும்படி 'வான் சிறப்பு' என்று கடவுளின் சக்தியினைப் பற்றியும் 'நீத்தார் பெருமை' என்று மக்களுக்காக பலியான இறைவனின் நிலையினைப் பற்றியும் வைத்துவிட்டு பின்னர் அத்தகைய இறைவன்  வலியுறுத்தும் அறனை  விளக்க 'அறன் வலியுறுத்தல்' என்ற அதிகாரத்தினையும் சேர்த்து பாயிரமாக வைத்து உள்ளார். இதுவே அவர்கள் கூறும் கூற்று.

ஆனால் வழக்கம் போல எந்த ஒருக் கூற்றினையும் சான்றுகள் இன்றி நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்நிலையில் மேலே கூறப்பட்டுள்ள கூற்றுகளுக்கு சான்றுகளோ அல்லது விளக்கங்களோ இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.

2) வான் சிறப்பு:

பொதுவாக பலரால் இன்று வரை இந்த அதிகாரம் மழையின் சிறப்பினை கூறுவதாகவே எண்ணப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் இப்பொழுது இது மழையைக் குறிப்பது அல்ல மாறாக கடவுளின் ஆற்றல்/ பரிசுத்த ஆவியினை குறிக்கும் ஒரு அதிகாரம் என்ற கருத்து சிலரால் எழுப்பப்பட்டு உள்ளது. இக்கருத்தினைப் பற்றி நாம் மேலும் காணும் முன்னர் சில விடயங்களை நாம் காண வேண்டி இருக்கின்றது.

i) “கதிரவனை இடமாகக் கொண்ட சிவபிரான் வெம்மையினால் அச்சம் விளைக்கும் தந்தைத் தெய்வமாகக் கருதப்பட்ட போது தண்ணளியுடைய தாய்த் தெய்வத்தின் வடிவம் தண்ணீராகக் கருதப்பட்டது. ஆழமுள்ள தண்ணீரின் நிறம் நீலமாதலின் தாய் தெய்வத்தின் நிறமும் நீலமாயிற்று.” “பாதி ஆணும் பாதி பெண்ணும் ஆகிய சிவ வடிவத்தில் ஆண்பகுதி செந்நிறமாகவும் பெண்பகுதி நீல நிறமாகவும் கொள்ளப்பட்டது.” (அதாவது சிவன் நெருப்பின் தன்மையினால் சிகப்பாகவும்…சக்தி நீரின் தன்மையினால் நீலமாகவும் வழங்கப்பட்டு இருக்கின்றனர்) - கா.சு.பிள்ளை (இதன் மூலம் நாம் இறைவனின் சக்தி நீரின் தன்மையோடு குறிக்கப்பட்டு உள்ளதாக கருத்து இருப்பதினை அறிகின்றோம்.)

ii) “கதிரவனைச் சிவத்திற்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்கு பெயராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று.”

"வியாபக ஆற்றல் ஆண் தன்மையாகக் கருதப்பட்ட பொழுது விண்டு அல்லது விஷ்ணு என்ற சொல் சக்தியின் ஆண்வடிவத்தைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. அக்கருத்தை உடைய ஆகம சுலோகமும் உண்டு. விஷ்ணுவுக்கும் சிவசக்திக்கும் நீல நிறமே பேசப்படுதல் காண்க.” - கா.சு.பிள்ளை (இதன் மூலம் 'வான்' என்றச் சொல்லே மருவி விஷ்ணு என்று வந்து இருக்கின்றது என்றும் (வான் - விண் - விண்ணு - விண்டு - விஷ்ணு), விஷ்ணுவும் சக்தியும் ஒன்றே என்றும் அவர்களுக்கு நீரின் தன்மையான நீல நிறமே வழங்கப்பட்டு இருக்கின்றது என்பதனையும் அறிகின்றோம்)
 
iii) விவிலியத்திலும் பரிசுத்த ஆவியினை நீரின் தன்மையுடைவராகவே குறிப்பிடப்பட்டு உள்ளது.நிற்க

மேலே உள்ள சில விடயங்கள் மூலமாக இறைவனின் சக்தியை நீரின் தன்மையோடு காணும் போக்கு சமயங்களில் இருக்கின்றது என்றே நாம் அறிய முடிகின்றது. மேலும் சில திருக்குறள் ஆய்வாளர்களின் கருத்துக்களும் வான் சிறப்பு என்பது இறைவனின் ஆற்றல்/ கருணை ஆகியவற்றைக் குறிப்பதாகவே கருதுகின்றனர்.

"இறை வாழ்த்துப் அதிகாரத்தில் கடவுளின் பண்பாற்றல்களை எல்லாம் தொகுத்துரைத்த வள்ளுவர், இந்த வான் சிறப்பு அதிகாரத்தில் வெளிப்படையாகவே மழைச் சிறப்பு மட்டும் கூறுகின்றாரானாலும், உண்மையில் அவர் முதற் பொருள் மழையை வருணிப்பதன்று; கடவுளின் கருணை ஆற்றலை வகுத்துரைப்பதேயாகும்." என்றே பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் கூறுகின்றார்.

"கடவுளுடைய தண்ணருளைக் குறிப்பதற்கு, மழையே சிறந்த அறிகுறியாகி இருக்கின்றது. மழைச் சிறப்புக் கூறுதல், திருவருட்சக்தி வணக்கங் கூறுதலாக முடிகின்றது" என்றே எம். சுப்ரமணிய பிள்ளை அவர்களும் கூறுகின்றார்.

எனவே வான் சிறப்பு என்பது மழையினைக் குறிக்காது மாறாக இறைவனின் அருட்சக்தியினைக் குறிக்கும் ஒன்று என்றக் கருத்தினை நாம் கருதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. சரி இப்பொழுது நீத்தார் பெருமையைப் பற்றிக் காணலாம்.

3) நீத்தார் பெருமை:

இது வரையிலும் 'நீத்தார் பெருமை' என்பது துறவறம் மேற்கொண்டவர்களை பற்றிக் கூறும் ஒரு அதிகாரமாகவே கருதப்பட்டு வந்துள்ளது. காரணம் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் அவ்வாறே எழுதி வைத்துச் சென்று உள்ளனர் (அவர்கள் 1000 ஆண்டுகளுக்கு பின்னரே திருக்குறளுக்கு உரை எழுதினர் என்ற விடயமும் இங்கே கருதத்தக்கது). சரி இப்பொழுது நாம் சிலர் 'நீத்தார் பெருமை' என்பது மக்களுக்காக உயிர் நீத்த இறைவனைக் குறிக்கும் அதிகாரம் என்று கூறுகின்றார்கள். அக்கூற்றினைப் பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் தனது குறளில் தேவை இல்லாது எந்த ஒரு வார்த்தையையோ அல்லது அதிகாரத்தையோ அல்லது கருத்தையோ வைத்தது இல்லை.

குறளுக்கு ஏழு வார்த்தைகள்...அவ்வளவே!!! அந்த ஏழு வார்த்தைகளுள் தான் சொல்ல வந்தக் கருத்தினை கூறி இருக்கின்றார். (ஏழு என்ற எண் திருக்குறள் முழுவதிலுமே சிறப்பாக கையாளப்பட்டு இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் காண்போம்). இப்பொழுது அவ்வாறு அவர் பயன்படுத்திய ஒரு வார்த்தையைத் தான் நாம் இப்பொழுது காண போகின்றோம்.

'ஐந்தவித்தான்' என்ற வார்த்தையே அது. பொருளில் ஐம்பொறிகளையும் கடந்தவன் என்று விளங்கும் இந்த வார்த்தையினை வள்ளுவர் இரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தி உள்ளார். ஒன்று கடவுள் வாழ்த்துப் பகுதியில் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்று கூறி உள்ளார், மற்றொன்று 'நீத்தார் பெருமை' பகுதியில் 'ஐந்தவித்தான் ஆற்றல்' என்றுக் கூறி உள்ளார்.

அதாவது ஐந்தவித்தான் என்றச் சொல்லின் மூலம் இறைவனையும் சரி நீத்தாரையும் சரி ஒன்றாகவே குறிப்பிட்டு உள்ளார். இது ஏன் என்று சிந்திக்கத்தக்கதான ஒன்றாக இருக்கின்றது. மேலும் துறவினைக் குறிக்கும் அதிகாரங்களில் அவர் எந்த ஒரு இடத்திலும் ஐந்தவித்தான் என்றச் சொல்லினை பயன்படுத்தி இருக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆய்வக வெளியீடான 'திருக்குறளும் விவிலியமும்' என்னும் நூல் 'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்னும் தொடரோ கிருத்துவ இறையியற் கொள்கைக்கே மிக ஏற்புடையதாகும். அங்கு அது எவ்வித இடர்ப்பாடுமின்றிப் பொருந்தும் என்றே கூறுகின்றது.

எனவே கருத்துக்கள் இவ்வாறு இருக்கையில் 'நீத்தார் பெருமை' என்பது மனிதனாக வந்து மனிதர்களுக்காக தன்னுயிர் நீத்த இறைவனைக் குறிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் நாம் அறிய முடிகின்றது.


மேலும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கடவுள் வாழ்த்தை மூவராகிய முதற் கடவுளரை வாழ்த்தும் வாழ்த்தாக கருதுகின்றார். இதுவும் ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்க்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.   மேலே கண்டுள்ள கருத்துக்கள் மூலம் திருக்குறளில் கிருத்துவ கருத்துக்கள் இருக்கலாம் என்ற சிந்தனையும் ஆராய்ச்சிகளும் நம் சமூகத்தில் இருக்கின்றன என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது. இதனைப் பற்றி நாம் இன்னும் விரிவாக காணலாம் ஆனால் அது ஒரு ஆராய்ச்சிப் பதிவாக மாறி விடும் என்பதனால் அதனை இப்பொழுது இங்கே காண வேண்டாம் என்றே எண்ணுகின்றேன்.

இப்பதிவின்படி தோமா மறைந்ததாக அறியப்படும் மயிலையில் அவர் வாழ்ந்த அதே காலத்தில் திருவள்ளுவரும் வாழ்ந்து இருக்கின்றார் என்பதும், தோமாவின் கருத்துக்களின் தாக்கம் திருக்குறளிலும் தென்படுகின்றன என்ற கருத்தும் நிலவுகின்றது என்பதையும் நாம் அறிகின்றோம். நிற்க.

மேலும் சில விடயங்கள் நாம் கவனிக்கத்தக்கவைகளாகவே இருக்கின்றன...

1) திருக்குறளை மொழிப்பெயர்த்து உலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் கிருத்துவர்கள்.

2) விவிலியத்திற்கு பின்னர் உலகில் அதிக அளவு மொழிப்பெயர்க்கப் பட்ட நூல் திருக்குறளே ஆகும்.

3) அப்படிப்பட்ட ஒரு நூலினை 'தீக்குறள்' என்றும் அதனை படிக்கக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள சிலர் கூறியும் இருக்கின்றனர்.

4) உலகப் பொதுமுறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பஞ்சம சாதியினை சார்ந்தவராக கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  
ஆதாரமற்ற விபரம் கொண்டு பெருகும் பொய்யான நூல்கள்
குறள் 196: 
பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
மு. உரை:
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.


  

தோமா நடபடிகள்- தமிழில் இதன் சாரம் நண்பர் வேதப்பிரகாஷ் தருவது 


8 comments:

  1. திருக்குறளுக்கு கிறித்துவப் பொருள் கொடுப்பதை, இந்த பைத்தியக்காரத்தனத்தை, மற்ற தன் மானமுள்ள கிறித்துவர்கள் பதில் தரவில்லையா?

    கிரிகோரி

    ReplyDelete
  2. திருக்குறள்-G.U.Pope உரை
    543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.
    G.U.Pope 543
    Learning and virtue of the sages spring,
    From all-controlling sceptre of the king.
    The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
    described.

    559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.
    G.U.Pope 559
    Where king from right deflecting, makes unrighteous gain,
    The seasons change, the clouds pour down no rain.
    If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

    560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.
    G.U.Pope 560Where guardian guardeth not, udder of kine grows dry,
    And Brahmans’ sacred lore will all forgotten lie.
    If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

    ReplyDelete
  3. ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

    “திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
    பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

    முடிவாக -
    “திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
    பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்.

    ReplyDelete
  4. திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
    “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

    இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

    ReplyDelete
  5. After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

    I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She hadconverted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

    1. குறள் கூறும் சமுதாயம்
    2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
    3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

    The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
    The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

    Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

    “மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்//

    ReplyDelete
  6. நீங்கள் "தோமா பணிகள்" நூலைப் பற்றி எழுதிகிறிர்களே. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கேரளத்தில் மலயாளத்தில் ரம்பன் பாட்டு, வீரடியான் பாட்டு என தாமஸ் இந்தியாவில் செய்த தொண்டைத் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே "தோமா பணிகள்" மட்டுமில்லை உள்ளூரின் தெளிவான ஆதாரங்கள் உண்டு.


    ஆனால் சர்ச் வரலாற்று ஆசிரியர்கள்
    kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila to build a Palace for KingGondophares
    King Misdeus, Queen Tertia, Princess Mygdonia wife of Charisius
    இம்மன்னர்கள் உண்மையில் தமிழகத்தை ஆண்ட கந்தப்ப ராஜா எனவும் மச்ச தேவன் என்பது சிரிய மொழியில் மாறிவிட்டது எனச் சொல்கின்றனர்.
    ஜான் செல்வராஜ்

    ReplyDelete
  7. தோமா வந்தார் என்றால் கிறித்துவம் 1950 வருடங்களாக இந்தியாவில் உள்ளது என ஒரு நம்பிக்கையை உருவாக்க சர்ச் அளவுக்கு அதிகமாக தோமா கதையை பரப்பினர். அது ஆர்ச்பிஷப் அருளப்பாவையும், சின்னப்பா அவர்களையும் பதவியிலிருந்து நீக்க வேண்டியது ஆனது.

    ReplyDelete
  8. We do not have any reliable manuscript on gospel story hero Jesus and the earliest manuscript of even a full gospel goes to late 3rd century. All leading theologians agree that Jesus was expecting World to end in his life time and ended up in Stake; crying- “God! Why did you abandon me!!!”
    Analyze the Acts stories – as per 8:1 Apostles did not leave Jerusalem after Stephen Stoning event. Take again the summit in Acts15 – Alleged meeting of Paul with James- Peter and here we do not even utter a word about divinity of Jesus which is the belief of present Christianity and the tale go on to say that Paul circumcised Timothy Acts 16:3. Again take the event of Paul’s final visit to Jerusalem & James and elders force him to take penance of cleaning the Jerusalem temple and here too this tale proves by 55CE or so, the Apostles remained as Jews and had no problem with other Jews.
    I refer to St. Thomas Christians Encyclopedia,Vol-2, Edited by Rev.George Menachery and the Article “DID St.Thomas Really Come to INDIA- From a Doubters point of View” by Rev H.COMES. It explains-
    //Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas's carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.//
    As per tradition in Rome, Thomas died a normal death in Israel(mostly). As for the growth of Christianity Vatican historian while reviewing the book “The Rise of Christianity” of Rodney Stark very clearly quoting various estimates said that the population of Christians at 8.8 Lakhs out of 55 millions Rome citizens, growing att 2.5% year from a base of 1000 Christians by 40CE and around a total of 3800 Christians by 100CE.
    As per Archaeological Survey of India reports 1969-60 of digging in and around Kodungallur at several places, the human habitation took place here only in late 8th century or early 9th century only, and the belt was below Sea then.
    The totally unreliable tales of “The Acts of Thomas itself says-
    The Ninth Act: of the Wife of Charisius. 87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;
    This certain scholars identify in Bahrain and even a tomb was identified – considering the above facts the so called book referred above is but another bunch of lies with out real evidence

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா