Saturday, March 15, 2014

யூதாசு மரணம் எவ்வாறு? சுவிசேஷங்கள் கட்டுக் கதைகள் என நிருபிக்கின்றதா?

சுவிசேக் கதையின் நாயகன் இயேசு தன் ஆட்சியில் யூதர்களின் 12 ஜாதியை நீதி பரிபாலனம் செய்ய 12 சீடர்கள் என்பதில் ஒருவர் யூதாசு இஸ்காரியோத்து. 

மத்தேயு 19:28இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 

இந்த யூதாசு தான் இயேசுவை ரோம் ஆட்சியினருக்கு காட்டிக் கொடுத்தவர்.   யூதாசு மரணம் பற்றிய கதைகளை பார்ப்போம்  

மத்தேயு சுவிசேஷக் கதையின்படி இயேசுவின் மரணத்திற்கு முன்பே தற்கொலை செய்து இறந்தார் 

 

யூதாஸின் தற்கொலை

மத்தேயு 26: 3இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்த யூதாஸ் அவர்கள் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்ததைக் கண்டபோது தன் செயலுக்காக மிகவும் வருந்தினான். ஆகவே 4 யூதாஸ்,, “நான் பாவம் செய்து விட்டேன். குற்றமற்றவரான இயேசுவை உங்களிடம் கொலை செய்யக் கொடுத்துவிட்டேன்” என்றான். அதற்கு யூதத்  பாதிரிகள் தலைவர்கள்,, “அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அது உன்னுடைய பிரச்சனை. எங்களுடையதல்ல” என்றார்கள்.5 ஆகவே யூதாஸ் பணத்தை தேவாலயத்தில் வீசியெறிந்தான். பின்னர் யூதாஸ் அவ்விடத்தைவிட்டுச் சென்று தூக்கு போட்டுக் கொண்டு இறந்தான்.யூதாஸ் வீசியெறிந்த வெள்ளி நாணயங்களைப் பொறுக்கி எடுத்த தலைமை ஆசாரியர்கள்,, “இப்பணத்தைத் தேவாலயக் கருவூலத்தில் வைத்திருக்க நம் சட்டம் அனுமதிக்காது. ஏனென்றால், இப்பணம் ஒருவனது மரணத்திற்காகக் கொடுக்கப்பட்டது” என்று சொல்லி, 7 அப்பணத்தைக் கொண்டு குயவனின் வயல் என்றழைக்கப்பட்ட நிலத்தை அவர்கள் வாங்கத் தீர்மானித்தார்கள். அந்த நிலம் எருசலேமைக் காண வரும் யூதரல்லாத அன்னிய ஜாதி பயணிகள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. 8 எனவே தான் அந்த நிலம் இன்னமும், “இரத்த நிலம்” என அழைக்கப்படுகிறது. 9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது. , “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. 10 கர்த்தர் எனக்கு ஆணையிட்டது போல, அந்த முப்பது வெள்ளி நாணயங்களை குயவனின் வயலை வாங்கப் பயன்படுத்தினார்கள்.”

அப்போஸ்தலர் நடபடிகள் கதை; கதாசிரியர் -லூக்கா கதையின்படி இயேசுவின் மரணத்திற்குப்பின் தான் பெற்ற பணத்தில் வாங்கிய நிலத்தில் உடல் பெரிதாக ஊதி வெடித்து இறந்தார் 

யூதாஸின் மரணம்

 அப்போஸ்தலர் 1:18  இயேசுவை காட்டிக் கொடுக்க  செய்வதற்கு யூதாஸிற்குப் பணம் தரப்பட்டது.  யூதாஸ்  அப்பணத்தில் ஒரு நிலத்தை வாங்கினான் படுத்தப்பட்டது. ஆனால் அந்த நிலத்திலே  யூதாஸ் தலைகுப்புற வீழ்ந்து அவன் சரீரம் வெடித்து சிதறி பிளவுண்டது. அவனது குடல் வெளியே சரிந்தது. 19 எருசலேமின் மக்கள் அனைவரும் இதை அறிந்தனர். எனவேதான் அந்நிலத்திற்கு “அக்கெல்தமா” என்று பெயரிட்டனர். அவர்கள் மொழியில் அக்கெல்தமா என்பது “இரத்த நிலம்” எனப் பொருள்படும்.)
20 “சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப் பட்டுள்ளது: “‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது,     யாரும் அங்கு வாழலாகாது. 

இயேசுவின் கைது நிகழ்ந்தபோது, சீடர்கள் அனைவரும் தப்பி ஓடினர் எனக் கதை, பின்னர் ஒன்று சேர்ந்து சர்ச் தொடங்கியதாகக் கதை. அந்த நாட்களில் நடந்த ஒரு கதை சம்பவம்- யூதாசு மரணம்

 மாற்கு 14:50 இயேசு சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள். 51.ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52.ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். 

       இயேசு வந்தவர்களை எல்லாம் தன்னோடு சேர்த்துக் கொள்ளவில்லை, தன் புதிய உலகில் நீதி பரிபாலன செய்ய தகுதியானவர் எனத்தேர்ந்த யூதாசினைப் பற்றிய சுவிசேஷம் கூறும் கதைகள்

 யூதாசு காட்டிக் கொடுத்த கதை.  

மாற்கு 14: 10பன்னிரண்டு சீஷர்களுள் ஒருவன் தலைமை ஆசாரியர்களிடம் பேசச் சென்றான். அந்த சீஷனின் பெயர் யூதாஸ் ஸ்காரியோத். அவன் அவர்களிடம் இயேசுவை ஒப்படைக்க விரும்பினான்.10 தலைமை ஆசாரியர்கள் இது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் அதற்குரிய பணத்தை அவனுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆகையால் அவன் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். 

மாலையில் அந்த வீட்டுக்குப் பன்னிரண்டு சீஷர்களோடு இயேசு சென்றார்.
  இயேசு தான் கைது ஆவேன் எனச் சொன்னதாகக் கதை பண்ணுவோர், யூதாசு காட்டிக் கொடுப்பன் என்றும் கதை பண்ணினர்

 

யூதா என்பவர் பெயரிலும், யாக்கோபின் பெயரிலும் கடிதங்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளகு, இருவரும் இயேசுவின் உடன் பிறந்த சகோதர்கள் என சர்ச் பாரம்பரியம். ஆனால் இந்த வசனம்படி 

மாற்கு 14:  18 அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இப்பொழுது என்னோடு உணவு உண்டுகொண்டிருக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்” என்றார்.

19 இதைக் கேட்டதும் சீஷர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். ஒவ்வொருவரும் அவரிடம், “உறுதியாக அது நானில்லை” என்று கூறினர்.
20 இயேசுவோ, “எனக்கு எதிரியாகிறவன் உங்கள் பன்னிரண்டு பேர்களில் ஒருவன்தான். அவன் என்னோடுதான் இப்போது தனது அப்பத்தை இப்பாத்திரத்தில் நனைத்துக்கொண்டிருக்கிறான். 21 மனித குமாரன் இறந்து போவார். வேதவாக்கியங்களில் எழுதியபடி எல்லாம் நடக்கும். எனினும் எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக் கொடுக்கப்படுவாரோ அந்த மனிதனுக்குக் கேடு வரும். அவன் பிறக்காமல் இருந்தால் அது அவனுக்கு நன்மையாக இருந்திருக்கும்” என்றார்.

 பாவம் யூதாசு கெட்டவனா? இல்லை ஐயா இல்லை! யூதாசு கெடக் காரணம் ஏசுவே. அவர் கையால் அப்பம் தந்து ஏசு யூதாசிடம் சாத்தானை அனுப்பினார்.

யோவான் 13:26 இயேசு அதற்கு, “நான் இந்தத் தோய்த்தெடுத்த அப்பத்துண்டை எவனுக்குக் கொடுக்கிறேனோ அவனே எனக்கு எதிரானவன்” என்றார். பின்னர் அவர் அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். இயேசு யூதாஸிடம், “நீ செய்யப் போவதைச் சீக்கிரமாகக் செய்” என்றார். 


இயேசுவே சாத்தானை அனுப்பினார் எனக் காட்ட யூதாசு திருடன் கெட்டவன் எனவும் ஒரு கதை

யோவான் 12:  4 யூதாஸ்காரியோத்தும் அங்கிருந்தான். (யூதாஸ் இயேசுவின் சீஷரில் ஒருவன். இவன்தான் பிறகு இயேசுவிற்கு எதிரானவன்.) மரியாள் செய்தவற்றை இவன் விரும்பவில்லை. 5 அவன் “இத்தைலம் முந்நூறு வெள்ளிகாசுகள் மதிப்பு உடையது. இதனை விற்று, அந்தப் பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம்” என்றான். 6 ஆனால் உண்மையில் அவனுக்கு ஏழைகளின்மீது அக்கறையில்லை. அவன் ஒரு திருடனானபடியால் இவ்வாறு சொன்னான். இவன்தான் இயேசுவின் சீஷர்களுள் பணப்பையை வைத்திருந்தவன். இவன் அவ்வப்போது பணப்பையிலிருந்து பணம் திருடி வந்தான்.

இதே யோவான் சுவியின் 6:5 கதைப்படி சீடர் பிலிப்பு பொருளாளன், பணப்பை கையாள்பவர் என உள்ளது.  ஆகையால்  
 

யோவான் 7:3 இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீங்கள் இந்த இடத்தை விட்டு பண்டிகைக்காக யூதேயாவிற்கு போங்கள். அங்கே உமது சீஷர்கள் உம்முடைய அற்புதங்களைக் காண்பார்கள். 4 மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள். 5 இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள். 

யூதாஸ் ஸ்காரியோத் - யூதா தோமா - யூதா ததேயூ மூவரும் ஒருவர் தானா- சர்ச் ம்ற்பிதா வரலாற்றில் மறுக்கவோ, ஏற்கவோ ஆதாரம் இல்லை
இயேசு தன்னை கடவுள் என்றும் தன்னிடமிருந்து உணவு பெற்றால், வானிலிருந்து வந்த மன்னாவை உண்டவர்கள் பூமியில் இறந்தது போல அல்லாமல், ஏசுவை ஏற்றவர்கள் பூமியில் மரணமடையமாட்டார்கள் என்றார். 

யோவான்6: 31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.  32 “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு.

49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான்.   

யூதர்கள் இறந்த மனிதர் ஏசுவைத் தெரியும், தெய்வீகர் என்பது இல்லை எனத் தெரியும். சர்ச்சின் மதமாற்ற இலக்கு யூதரல்லாத புற ஜாதியினர். எனவே கிரேக்க மொழியில் ஏசுவை அறியாதவர்களால் புனையப் பட்டதே சுவிசேஷங்கள். ரோமன் ஆட்சி கைப்பாவையாய் சர்ச் மாறிய பின் லத்தீனில் 4- 5 ஆம் நூற்றாண்டில் மொழி பெயர்க்கப்பட்டது வல்காத்து ஆகும்.
ஏன் பழைய ஏற்பாடு கூட ஒரே நேரத்தில் அதாவது பொ.மு.300 – பொ.கா. 150 இடையே எபிரேயம்/கிரேக்கத்தில் எழுதப் பட்டவை தான்.
குட் ஸ்பெல் (Good Spelle- gospel) என்னும் சொல்லிற்கு நல்ல கதை எனப் பொருள். அதை சமஸ்கிரிதம் கலந்த தமிழில் சுவி- நல்ல சேஷம்- செய்தி எனும் படியும் நற்செய்தி எனவும் தரப்படுகிறது. 
மத்தேயு புனைவது -இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது- ஆனால் இவ்வசனம் எங்கு உள்ளது

செக்கரியா11:12 அப்போது நான் அவர்களை நோக்கி, உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்: இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள் என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.  13 ஆண்டவர் என்னிடம், "கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!" என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன். 


ஏசு மரணம் நிகழ்ந்த பின்னர் நிலம் வாங்கி அதில் வெடித்து இறந்தார் யூதாசு என்பது லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம் கதாசிரியர் எழுதிய அப்போஸ்தலர் நடபடிகள் எனக் கூறுகிறது.

ஏசு மரணம் நிகழும் முன்பே துக்கில் தொங்கி தற்கொலை செய்து இறந்தார் என்பதை மத்தேயு சுவி தெளிவாகக் கூறுகிறது.

 யூதாசு தற்கொலைக்குப்பின் பாதிரிகள் நிலம் வாங்கினாலும் ரத்தநிலம் - யூதாசே நிலம் வாங்கி அந்த நிலத்தில் உடப்பு ஊதி வெடித்து இறந்ததால் ரத்த நிலம். இதிலும்   தீர்க்கம்  நிறைவறியது, அதிலுமே  தீர்க்கம் நிறைவறியது

எது உண்மை? இரண்டுமே பொய்யா? 

1 comment:

  1. ஒருவர் ஒரு முறை தான் மரணம் அடைய முடியும்.

    ReplyDelete

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...