Friday, April 4, 2014

இயேசு கிறிஸ்து யூதரல்லாத மக்களை நாய் என யூத இனவெறியோடு கூறினார்.

                 

கானானியப் பெண்ணின் நம்பிக்கை (மாற் 7:24 - 30)
மத்தேயு15:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லைசீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 இயேசு மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ' என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.


   

கானானியப் பெண்ணின் நம்பிக்கை(மத் 15:21 - 28)   
மாற்கு 7:24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.28 அதற்கு அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ' என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ' என்றார்.30 அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.


  யூத மதம் என்பது இஸ்ரேலுடைய எபிரேய் மொழி பேசுவோர் மதம், இது பக்கத்து நாடுகள் பலவற்றின் கருத்துக்களை சேர்த்து வந்த கலவை மதம். இது கடவுள் - இறை நம்பிக்கை என்பதைவிட அரேபியரான ஆபிரகாம், இன்றைய ஈராக்(பாபிலோன்)கில் வாழ்ந்த போது கர்த்தர் அவரை அழைத்து, இஸ்ரேல் நாட்டிற்கு அழைத்துவந்து இஸ்ரேல் நாட்டிற்கான ஆட்சி அரசியல் உரிமை ஆபிரகாமின் சந்ததிகளுக்கு எனும் கோட்பாடு தான் பைபிள் அடிப்படை

புராணக் கதை பைபிள், பக்கத்து நாட்டு மக்களை மிகவும் கேவலமாக கர்த்தர் கூறுவதாகப் புனைந்ததைப் படித்தவர்கள். யூதர்கள் தங்களை இனரீதியில் உயர்ந்தவர் எனும் மூட  நம்பிக்கையில் உழல்பவர்கள்.

இயேசுவும் ஒரு பழமைவாத யூத இனவெறியராய் கிரேக்கப் பெண்ணை நாய் என்றார். தன்மானமுள்ள மனிதர் யாரும் இதை ஏற்க முடியாது. 

இதே விஷயத்தை நான் முன்பு என் வர்ட்பிரஸ் வலையிலும் தமிழ் ஹிந்துவிலும் எழுத, அதற்கு மறுப்பை இணைய நண்பர் யவனஜனம் சில்சாம் அவர் வலையில் மழுப்பல் எழுத- ஒரு கிறிஸ்துவர் பதில்(சில்சாமிற்கு நன்றி)






சகோதரரே,
தேவப்பிரியாவின் எழுத்தையும் உங்களுடைய பதிலையும் படித்தேன். குழப்பமே மிஞ்சியது.
//லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவை மிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.//
இது தேவப்பிரியாவின் கருத்து மட்டுமே என்று சொல்லவியலாது. சமீபகாலத்து புதிய ஏற்பாட்டு ஆய்வாளர்கள் எல்லோருமே யூதரல்லாதவர்களை நாய்கள் என்று இயேசு சொல்வதை சால்ஜாப்பு சொல்லி மழுப்ப முயல்கிறார்கள்.
ஆனால் நீங்கள் சொல்வது என்னவென்றால், அந்த கிரேக்க பெண்மணியை சோதிக்க இயேசு சொல்வதாக கூறுகிறீர்கள்.
ஆனால் அடுத்த வரி அப்படி அல்ல என்று நிரூபிக்கிறதே..
//‘இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப் பட்டேன் ‘ //
இது இயேசு சொன்னதுதானே? அப்படியானால், இயேசு பொய் சொன்னாரா? இயேசு பொய் சொல்லவே மாட்டார் என்றால், இது உண்மை என்றுதானே பொருள்? அப்படியானால், இயேசு யூதர்களுக்காகத்தான் வந்தாக சொல்கிறாரே அன்றி தமிழர்களுக்கோ இந்தியர்களுக்கோ வந்ததாக நாமாக கூறிக்கொள்கிறோம் என்றுதானே பொருள்? கிரேக்க பெண்மணிக்கு விளக்கம் கொடுப்பதற்காக இப்படி பொய் சொன்னார் என்று சொல்கிறீர்களா? அப்படி பொய் பேசுவது இயேசுவுக்கு முறையாகுமா? ஏன் இப்படி பொய் சொல்லி ஒரு விஷயத்தை விளக்குவானேன்? நேரடியாக, “யூதர்கள் யூதரல்லாதவர்களை நாய்கள் என்று கூறுகிறார்கள். நான் அப்படி கூறமாட்டேன். நீயும் என் அன்புக்கு பாத்திரமானவளே. உன் குழந்தையை நான் குணப்படுத்துவேன்” என்று கூறியிருந்தால் சரியான விளக்கமாக இருந்திருக்குமே?
ஒரு கடவுளே ஆனாலும், தமிழர்களை நாய்கள் என்று கூறுபவரை எப்படி வணங்குவது? போற்றுவது?
இல்லை அவர் பொய் சொன்னார், அவர் எல்லோருக்காகவும்தான் வந்தார் என்று நீங்கள் சொல்கிறீர்களா?
நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.





//நீங்கள் எழுதுவது சால்ஜாப்பு செய்வது மாதிரிதான் தோன்றுகிறது.//
யாருக்காகவும் யாரும் சால்ஜாப்பு செய்து உண்மையினை நிறுவிட முடியாது, நண்பரே;
அதே நேரம் உண்மையினைத் தவிர்த்து பொய்யானது தாக்குப்பிடிக்கவும் முடியாது;
இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் மிகவும் சிறந்த புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனாலும் உண்மையினைத் தேர்ந்தெடுப்பதில் நம்முடைய முன்னோர்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தாங்கள் அறிந்திட விரும்புகிறேன்;
இந்த பொதுவான உண்மையின்படி, ‘இயேசுவானவர் சர்வ லோக இரட்சகராக நிரூபிக்கப்பட்டவர்’ எனும் உண்மையினை நான் நம்புகிறேன்;
தங்களால் தற்போதைக்கு இந்த உண்மையினை ஏற்க இயலாவிட்டாலும் அதனால் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை;
தம்மை காட்டிக் கொடுத்தவனையே மன்னித்த இயேசுவின் மாண்புக்கு முன்னால் உங்களைப் போன்றவர்கள் குற்றவாளிகளல்ல..
மீண்டும்  சில்சாமிற்கு நன்றி
கர்த்தரின் மனைவிகள் பற்றி நண்பர் ஜார்ஜ் உதயகுமார் முகநூலில் எழுத இக்கதைப் பற்றி வர,  Theosgospelhall Tirupur எனும் பாதிரியார் விவாதத்தில் சேர பின் நடந்ததை பார்ப்போம்
//நண்பரே சமயம் என்பது மனிதன் செம்மைய் ஆகுதல், சமைத்தல் ஒழுக்கம் பெறல் என்பதே ஆகும்.சமயத்தைக் கொண்டு ஒழுக்கத்தோடு, மேலும் மேலும் அறிவை வளர்த்து நன்னெறியில் செல்வதற்கே சமயம். ஆனால் உன் சமயம் பொய், நீ வணங்குபவை கடவுளல்ல என இன்னொரு சமயம் நுழையும்போது மிக நிச்சயமாய் அது ஆய்வுக்கும் உள்ளாகும். ஆனால் சமயத்தின் பெயரில் நாங்கள் தேர்ந்தெடுக்கபப்ட்டவர்கள் என மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தலை பெருமையாய் புனைவது பைபிளாகும். யூதரல்லதவர்களை நாய் என்றும் பன்றி எனவும் இனவெறி பிடித்த யூதராய் வரலாற்று ஏசு உள்ளார். இதை மக்களிடை கொண்டு செல்வது சரியே.//
 Raveendran Anthonipillai சகோதரன் உதஜகுமார் கூறுவது தவறு=ஜேசு நாய் என்று கூறியது- இனவெறியில் அல்ல=உதாரணத்துக்கே- ஜேசு பின்பு சமாரியனைப் பற்றி சொல்கின்றார்=புற ஜாதி பெண்ணிடம் தண்ணீர் கேட்கின்றார்=நன்மை செய்கின்றவராக சுற்றித் திரிந்தார்=இஸ்ரேல் மக்களுக்காக அவர் தன் ஜீவனைக் கொடுத்த காரணம்= அவர்கள் நீதி மான்களாக இருந்தார்கள்=ஏன் எம் குடும்பத்தில் கூட கீழ் படியும் மக்களுக்கே நாம் உதவி பண்ணுவோம்= கீழ் படியாத மக்களை நாய் என்பதில் என்ன தப்பு---தவிர, ஒழுக்கத்தோடு வாழ சமஜம் தேவை இல்லை= பாடசாலை நல்ல நட்பு வாசிகசாலை போதுமே=பைபிள் வார்த்தை மிகத் தெளிவாகக் கூறுகின்றது- கடைசிக் காலத்தில் இப்படியான மறுதலிக்கும் கூட்டம் எழும்பும் என்று= அது நீங்களா= உதவி பண்ணா விட்டாலும் உபத்திரவம் என்றாலும் பண்ணாமல் இருங்கள்= சகோ உதஜகுமார்===
நண்பரே குடும்பத்தில் ஒருவரை செல்லமாக திட்டவது போல என்றாற், மூன்றாம் நபரை அதிலும் பலர் முன் நாய் என ஏசு சொன்னதானது தெளிவான இனவெறி தான். மேலும் உடனே பைபிளியல் அறிஞர் கூற்று தரப்பட்டது.
லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.
As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.
Theosgospelhall Tirupur புறஜாதிகளை நாய் என்று திட்டியதற்காக "இனவெறி பிடித்த யூதராய் வரலாற்று ஏசு உள்ளார்" என்று விமர்சிக்கும் நீங்கள் அந்த யூதர்களையே விபச்சார சந்ததிகள் என்று ஏன் இயேசு சொல்ல வேண்டும், இதிலிருந்து அவருக்கு இனம் மொழி, பாகுபாடு கிடையாது என்பது தெளிவாகிறது, அதேபோல் உலகம் முழுவதும் சென்று சுவிசேஷம் அறிவியுங்கள் என்றூ மத் 28:16ல் கட்டளையிட்ட இயேசு, அதற்கு முன் இஸ்ரவேல் தேசத்திற்கு மட்டும் போங்கள் என்று அவர் ஏன் சொன்னார் எனப்தை தெரிந்து கொள்ள கூட மனமிலை உங்களுக்கு. எப்பொது உங்களின் கருத்துக்காக இயேசுவின் முழு பொதனையையும் மறைத்து பாதியை மாத்திரம் வெளிப்படுத்தினீரோ அப்போதே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்து விட்டது, ஒன்றை விமர்சிக்கும் போது முழு விஷயத்தையும் தெரிந்து அதற்கேற்ற பதிலை கொடுப்பது தான் புத்திசாலித்தனம்.

நாம் இதற்கு விபரமான பதிலைப் பார்ப்போம்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார் "மத்தேயு 23ம் அத்தியாயத்தில் உள்ள ஏசு பரிசேயரை சாடும் வசனங்கள் 1ம் நூற்றாண்டின் இறுதி வர்லாற்று நிலையில் கிறிஸ்துவத்திற்கும்- பரிசேயருக்கும் பிரிவு இருந்தபோது எழுதப்பட்டவை"
//The form in which  they have come down in Matthew-23, may reflect a period later in the First Century, when the lines of division between Jewish Christians and Pharisees were sharply drawn. //  Page 153, The Real Jesus - F.F.Bruce
அடுத்தது பாதிரி நண்பர்- நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மாற்று கருத்து தருவதை தரட்டுமா என்றார். பைபிள்  வசனங்களை புனையப்பட்ட மூல கிரேக்கத்தில், மற்றும் தேவை எனும் போது அதன் மூல அரேமியம் வரை சென்று தான் நம் ஆய்வுகளாகும்.

 ஏசுவின் இனவெறி இங்கல்ல சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . 
அதேபோல நல்ல சமாரியர் கதை- மாற்கு, மத்தேயுவில் இல்லாததை 
லூக்கா புனைந்தது மட்டுமே

ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே  புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.
ஏசு சீடர்களை ஏற்காவிட்டால் தண்டனை எனச் சாபம் வேறாம். 
//Raveendran Anthonipillai சகோ உதஜகுமார்= ஆக்ஸ்போர்ட் கூறுகின்றது= கத்தோலிக்க பேராசிரியர் கூறுகின்றார் என்றல்ல இந்த இணை- இதில் கருத்து எழுதுபவர்கள் ஆவி உடனும் உண்மை உடனும் எழுதவேண்டும்= அப்படி இல்லை என்றால் புறக்கணிக்கப் படுவார்கள்= அல்லது அண்டிக் கிறிஸ்து என்றே சொல்லப்படுவார்கள்- இது கடைசிக் காலம் ஜேசுவின் வருகை மிக சமீபம்= அதனால் இப்போ வேதத்துக்கு அடுத்த தேடல்களை உண்மை உள்ள கிறிஸ்தவர்கள் கேட்க்க அங்கீகரிக்க மாட்டார்கள்- என்பது உண்மை- அது இந்த இணை ஒன்றுக்கும் பொருந்தும்- என்பதனை உதஜகுமார் அவர்களுக்கு அன்புடன் சொல்லிக் கொல்ல விரும்புகின்றேன்=//

மத்தேயு23:1 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ' மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். 
அப்போஸ்தலர் 23:8 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர். 
அப்போஸ்தலர்4:1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக் கொண்டிருந்தனர் . அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்
:// மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றவர்கள் - வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்-
ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார். மோசே நாற்காலியில் இருந்த சதுசேயர் சொன்னதே சரி, இனவெறி ஏசுவின் மூடநம்பிக்கைகள் பொய் என்பதே வரலாறு நிருபித்துள்ளது.

மத்தேயு 7:2 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்

மத்தேயு 7: ,“புனிதமானவற்றை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள். அவை திரும்பி உங்களைத் துன்புறுத்தவே செய்யும். முத்துக்களைப் பன்றிகளின் முன் போடாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால் அவைகள் முத்துக்களைக் காலால் மிதித்து சேதப்படுத்தும்.

இங்கு நாய் பன்றி என இனவெறி ஏசு மற்றவரை சொன்னால் அது ஏசுவையும் யூதர்களையுமே குறிக்கும்.
 முத்து என்பது பைபிள் என்றால் அது பன்றிகளின் உணவிற்கு சமானம் என ஏசு கூறுகிறார்
இந்த ஏசு போதனைப்படி யூதரல்லாத மக்களை கேவலமாகப் பேசிய ஏசுவே நாய் மற்றும் பன்றி ஆவார்.(வருத்தமான உண்மை)

10 comments:

  1. Krishna Krishnan தலையங்கமாக, பெண்களின் மாதவிடாய்தீட்டு நீங்க புறாக்குஞ்சைப் பலிகொடுக்க வேண்டுமென்று பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ஆதாரத்தோடு கர்த்தர் சொல்லியுள்ள புருடாக்கதையைப் போட்டுக்கொள்ளுங்கள். இதோ கர்த்தர் சொன்ன புறாக்குஞ்சுப் புருடா.லேவியராகமம்
    15 அதிகாரம்

    28. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக, அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.

    29. எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.

    30. ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடையசந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்
    றாக்குஞ்சு சமாச்சாரம் ஒத்துவராவிட்டால், உலக ஒற்றுமைக்காக தன்னை நிந்திக்கின்ற அனைவரும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டுமென்று சொல்லி உலக ஒற்றுமைக்கு உலை வைத்த கர்த்தரின் இந்த வசனத்தைப் போடுங்கள்.லேவியராகமம்
    24 அதிகாரம்

    16. கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டு

    ReplyDelete
  2. ஆழ்ந்த கருத்துகள்! ஆதாரத்துடன் கூடிய கட்டரை. தங்கள் கட்டுரை சிந்திக்க வைக்கும்.

    ReplyDelete
  3. நன்றி திரு. ஏன்ட்
    மக்களிடம் உண்மை செல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. //அதே நேரம் உண்மையினைத் தவிர்த்து பொய்யானது தாக்குப்பிடிக்கவும் முடியாது;

    இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் மிகவும் சிறந்த புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனாலும் உண்மையினைத் தேர்ந்தெடுப்பதில் நம்முடைய முன்னோர்கள் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை தாங்கள் அறிந்திட விரும்புகிறேன்;
    .
    .
    .
    தங்களால் தற்போதைக்கு இந்த உண்மையினை ஏற்க இயலாவிட்டாலும் அதனால் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை; //
    இது உண்மையாக இருந்தால் உலகம் தட்டயைானது என்ற பைபிள் கூற்றை முன்னோர்கள் நிராகரித்திருப்பார்களே! ஆனால் உண்மையில் அவர்கள் நிராகரித்தது உண்மையைத்தனே.

    ReplyDelete
  5. நீங்கள் பயன்படுத்தும் தமிழ் பைபிள் எளிதாக உள்ளது, பெரும்பாலான சபைகள் வடமொழி கலந்த பைபிளைத் தான் குறிப்பிடுகின்றன.

    ஏசுவின் நல்ல சமாரியர் உவமைக்கு நிங்கள் பதில் தரவில்லை.

    ReplyDelete
  6. To Devapriya Sister,
    இக்கட்டுரைக்கான பதிலைக் கீழுள்ள முகவரியில் பதித்துள்ளேன். தங்கள் விளக்கம் தேவை. நன்றி.

    http://rakthasaatchi.blogspot.in/2014/04/blog-post_18.html

    ReplyDelete
  7. நண்பரே,
    இரு சுவிகளும் தரும் பட்டியல்
    அ வின் மகன் ஆ
    ஆ வின் மகன் இ என உள்ளது. இதில் மத்தேயூவுப் பெரும்பான்மை பெரும்பாலும் சாலமன் வரிசையோடு பொருந்தி வருகிறது.
    http://devapriyaji.wordpress.com/2009/10/04/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-2/
    தாவீது ராஜா தன் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் வாரிசு வரிசை என மத்தேயு புனைய லூக்காவோ தாவீது ராஜா வேறோரு வைப்பாட்டி பத்சுவாள் மூலமான நாத்தன் வரிசை 1நாளாக3:5-7. எனவே பட்டியல் முழுதும் மாறியது சரியே. ஆனால் பாபிலோன் சிறைக்குப்பின் சாலமோன் வரிசை செயல்தியேல், செருபாபேல் ஆகிய இரண்டும் திணிக்கப் பட்டுள்ளது.

    லூக்கா பட்டியலில் ஆபிரகாமிற்கு முன்பும் ஒரு தலைமுறை அதிகமாக பழைய ஏற்பாட்டில் இல்லதது உண்டு. KJV கிடையாது, மற்றவையில் உண்டு.
    நேரடியாக சொன்னதை
    அ வின் மன் ஆ
    ஆ வின் மகன் இ ; அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது, சுறுக்கப்பட்டது என நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற மழுப்பல்கள், நடுநிலையாளருக்கு அவசியமில்லை. நீங்கள் உங்கள் மூடநம்பிக்கையை பிடித்து வைக்க தேடும் மழுப்பல்கள்.
    அடுத்தது- பெத்லஹெம் நாசரேத் குழப்பம்.
    பொ. மு 6ல், மத்தேயுவின் யாக்கோபு மகன் ஜோசப் பெத்லஹேமில் வாழ்ந்தவன், வீட்டில் பிரசவம், ஆனால் அவனை நாசரேத்து கொண்டுவர ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்வதாகக் கதை, தப்ப எகிப்து ஓடுவார் யாக்கோபு மகன் ஜோசப், பின்னர் திரும்பி வரும்போது யூதேயாவை ஏரோது மகனே ஆழ்வதால் நாசரேத் வந்ததாகக் கதை. நண்பரே கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகனே.
    லுக்காவின் ஏலி மகன் ஜோசப் நாசரேத் வாழ்பவர், பொ.கா.8ல் நடந்த சென்செஸ் போது பெத்லஹேமில் குழந்தை பிறந்ததாம். பின் ஜெருசலேம் சென்று சொந்த ஊர் திரும்பியதாகக் கதை.

    வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூ கதையை ஏற்று லூக்கா கதை மாட்டுத் தொழுவத்தை நீக்கினார்.
    http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html
    மத்தேயு லுக்கா சுவிசேஷங்களில் முதல் ஓரிரு அத்தியாங்களாக உள்ளன. இவற்றை பைபிளியலில் குழந்தைப் புனையல்கள் எனப்படும்.
    நீங்கள் இப்படி அங்கே இங்கே எனத் தேடி ஏதோதோ புலம்ப ஒவ்வொரு மழுப்பலும் இன்னொரு புது பிரச்னையை உருவாக்கும், அதனால் இவை எல்லமே சுவிசேஷக் கதாசிரியர் புனைந்தவை என அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் கூறுவது- "குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில்மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர்கதைகள்-யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே இருந்தது.."
    There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia
    காலுக்கு காலணி தைக்க வேண்டும். நிங்கள் சுவிசேஷப் புனையலுக்காக ஆதரவு மழுப்பல் தேடுவது உள்ள காலணிக்காக காலை வெட்டுவது போல உள்ளது.

    Posted at http://rakthasaatchi.blogspot.in/2014/04/jesus-geneology-tamil.html but awaiting Moderation.

    ReplyDelete
  8. Reply to Confirm on other posts would be as new posts next week.

    ReplyDelete
  9. All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view.... Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.
    page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin

    "The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission." C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81

    ReplyDelete
  10. உங்கள் கட்டுரைகள் தெளிவாக பைபிள் வசனத்தோடு, தகுந்த பைபிள் அறிஞர் ஏற்பர் என்பதுவோடு உள்ளது. ஏசு நிச்சயமாய் தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்தார். சரி இரண்டாவது வருகையும், அப்போது வாழ்ந்த மக்கள் உயிரோடு இருக்கும் போது என்றார். ஏசுவை ஏற்ற அனைவரும் மன்னாவை சாப்பிட்டவர் போலே இறந்தனர். ஏசு சாதரண மனிதன்.
    தொடரவும் உங்கள் பணி

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...