Tuesday, September 30, 2014

இயேசு யூத இனவெறி பிடித்தவர்!

ஏசுவின் சீடர்களை முதலில் அனுப்பும்போதே காணலாம்
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
இயேசுவின் யூத இனவெறியோடு, யூரல்லாதவ்ர் மட்டும் இன்றி யூதரில் பிரிவு சமாரியரிடமும் செல்ல வேண்டாம் என்றார்.
 


இயேசு- ஒரு கிரேக்க சீரோபேனிக்கேயா பெண்ணின் குழந்தைக்கு உதவ மறுக்கும்போது- யூதர் அல்லாதவரை நாய் என்றதைக் கண்டோம்.இங்கே 
மத்தேயு15:.24 இயேசு , ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவர்களுக்கு இல்லை ' என்றார்.
26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.
  மேசையில் எஜமான் சாப்பிட சிந்தும் எச்சில் பொருக்கல் என ஏற்பதாக சொன்னதால் ஏசு உதவினார்

இன்னொரு சம்பவம்-ஒரு ரோமன் படை தலைவர் வேலைக்காரனைக் குணப் படுத்திய கதை
யோவான்4:46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான்.47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.48 இயேசு அவரை நோக்கி, ' அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். 'என்றார்.49 அரச அலுவலர் இயேசுவிடம், ' ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் ' என்றார்.50இயேசு அவரிடம், ' நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.51 அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள்.52 ' எத்தனை மணிக்கு நோய் நீங்கியது? ' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ' நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது ' என்றார்கள்.53 ' உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
லூக்கா7:1இயேசு இவற்றை எல்லா மக்களுக்கும் சொல்லி முடித்த பின்பு, கப்பர்நாகுமுக்குச் சென்றார்.2 அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார்.3 அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார்.4 அவர்கள் இயேசுவிடம் வந்து, ' நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள் மீது அன்புள்ளவர்;5 எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார் ' என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள்.6 இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ' ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.7 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார்.8 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் ' செல்க ' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் ' வருக ' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ' இதைச் செய்க ' என்றால் அவர் செய்கிறார். '9 இவற்றைக் கேட்ட இயேசு அவரைக்குறித்து வியப்புற்றார். தம்மைப் பின்தொடரும் மக்கள்கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, ' இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.
 மத்தேயு8:5 இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.6 ' ஐயா, என் பையன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான் ' என்றார்.7 இயேசு அவரிடம், ' நான் வந்து அவனைக் குணமாக்குவேன் 'என்றார்.8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, ' ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.9 நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ' செல்க ' என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ' வருக ' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ' இதைச் செய்க ' என்றால் அவர் செய்கிறார் ' என்றார்.10 இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.         
  
நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன்.7 உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. 

ஒரு ரோமன் படை தலைவர் இப்படி பேசியதால் தான் இயேசு உதவினார்.


மத்தேயு 7:2 நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்

இந்த ஏசு போதனைப்படி யூதரல்லாத மக்களை

கேவலமாகப் பேசிய ஏசுவே நாய் ஆவார்.(வருத்தமான உண்மை)

கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை

Monday, September 29, 2014

கிறிஸ்துவ மதம் வளர்ந்த கதை- ஏசு காரணமில்லை

ரோமன் ஆட்சியின் 4ம் நூற்றாண்டில் மக்கள் தொகை 6 கோடி,   5%மக்கள் கிறிஸ்துவர்கள் எனப்பல அறிஞர்கள் வரலாற்று- அறிவியல்  ரீதியாக கணக்கிட்டு தருகின்றனர். அதாவது 30 லட்சம். இது கிறிஸ்துவம் மன்னன் கான்ஸ்டன்டைன் ஆதரவு பெரும் முன்பு.  அடுத்த 50 ஆண்டுகளில் இது 3 - 5 கோடியைத் தொட்டது. 

  பல்வேறு ரோமன் லத்தீன், கிரேக்க, புதைபொருள் ஆய்வு போன்ற பலவற்றை ஆராய்ந்து அறிஞர்கள் நூல்கள்
Rodney Stark, The Rise of Christianity (1996)

 W.V. Harris, ed., The Spread of Christianity in the First Four Centuries: Essays in Explanation (2005).

Ramsey MacMullen, Christianizing the Roman Empire 

ஏசு மரணத்திற்கு 300 ஆண்டு பின் 30 லட்சம் எனில், முதல் நூற்றாண்டில் 40 - 50 எத்தனை பேர், 100 வாக்கில் எத்தனை பேர் கிறிதுவர் ஆனர்.

ஆரம்பம் பற்றி பைபிள் விடும் கதைகள்படி பார்த்தால்

 
  அப்போஸ்தலர்1:15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது அப்போஸ்தலர்2:1 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.2 திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.6 அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர்.9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!" என்றனர்.12 எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர்.அப்போஸ்தலர்4:4 அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்
அப்போஸ்தலர்8:1 ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர்.
4 சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
அப்போஸ்தலர்21:20 இதைக் கேட்டவர்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள். எனினும் அவர்கள் அவரிடம், "சகோதரரே! யூதருள் எத்தனையோ ஆயிரம்பேர் நம்பிக்கை கொண்டுள்ளதையும் அவர்கள் அனைவரும் திருச்சட்டத்தின்மீது ஆர்வமுடையவர்களாயிருப்பதையும் நீர் பார்க்கிறீர் அல்லவா? 
 
பவுல் கடிதங்களில் சர்ச்சிலிருந்து வெளியேறியவர்களையும் காண்கிறோம். யோவான், யூதா கடிதங்களில் - கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறியவர்கள் கடைசி காலக் கிறிஸ்து எனவும் சொல்லப் படுகிறது. சேர்ந்தவர்களில் சில- பலர் மனம் திருந்தி வெளியேறியதும் புதிய ஏற்பாடே காட்டும்.

 வருடத்திற்கு 4%  என்ற விகிதத்தில் சராசரியாய் (இது மாறும்) கொண்டால் 40 பொ.கா. 100-200 மக்கள் மட்டுமே கொண்டது கிறிஸ்துவ சர்ச். 100 பொ.கா. வரை 10 ஆயிரம் கிறிஸ்துவர் இருந்திருந்தால் மிக அதிகம்.

 நாம் நடுநிலை பைபிள் அறிஞர்களையும் வரலாற்று ரீதியிலும் கண்டோம். கிறிஸ்துவ சர்ச் சார்ந்தோர் கூறுவதை- முதல் நூலின் விமர்சனம் மூலம் காணலாம்.
Bruce Malina, who has argued that Stark's estimated growth rate is too high: 220 bishops (so Henry Chadwick) attended the Council of Nicea called by Constantine in A.D. 325. These bishops functioned in a face-to-face society. Now in a face-to-face society the maximum number of persons with whom one can interact is ca. 4,000 (so the anthropologist, Jeremy Boissevain); hence, "scientifically" speaking (that is, mathematically), the number of Christians at the time of the Council of Nicea was ca. 880,000, the result of a growth rate of ca. 2.5 percent per year [hence Stark] postulates a growth rate that is exaggeratedly high. --- Bruce Malina, Book Review of Rodney Stark's The Rise of Christianity, in The Catholic Biblical Quarterly 59 (1997): pp. 593-595.

கிறிஸ்துவ மத ஆர்ம்பக் கால பரப்பும் கூட்டங்கள் பற்றிய அறிஞரின் குறிப்பு
"Early Christian meetings involved anarchic and undignified shoutings ans raving.  They worshipped a Jweish Healer who had been executed as a rebel against Rome and absurdly claimed that their dubious Holy man had come back to life again, had risen in to the Sky and would return at any momnent trailing celestical clouds of glory to found a Heavenly Kingdom on earth.   -page-17 The great religions - Richard Cavendish

சமூகத்தில் கல்வி அறிவு இல்லாத, விஷயங்களை சரி பார்க்க வசதியில்லாத ஏழை எளியோரை மட்டுமே தங்கள் மதமாற்ற இலக்கு என பவுலும் சொல்கிறார்.
1கொரிந்தியர்1:26 எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.
ஏசு மரணம் - 30 ஏப்ரல். 50ல் நாம் 500 கிறிஸ்துவர் எனத் துவங்கினால்(200 ஊர்களில்) 
60-700கிறிஸ்துவர் 80-1372 கிறிஸ்துவர்
70-980 கிறிஸ்துவர் 90-  1921 கிறிஸ்துவர்
100வாக்கில் -2689கிறிஸ்துவர்
பொ.கா.100 வாக்கில்வரலாற்று ஏசு மரணத்திற்கு 70 ஆண்டு பின்பு 3000 மக்கள் மட்டுமே கிறிஸ்துவர்கள்- 6 கோடியில். இருபதாயிரம் மக்களுக்கு ஒருவர் கூட இல்லை.

ரோமன் ஆட்சிக் கத்தி பலமே கிறிஸ்துவம் வளரக் காரணம்- வரலாற்று பின்பலம் இல்லை
In 313, the most severe of all the persecution was ended when Emperor Constantine became Christian.  The big minority rapidly swelled into big majority and 80 years later it had became practically illegal for a Citizen of Roman empire not to be Christian. One Hundred years after that the words Roman and Christian seems to have become inter-challengable.  Page-531; Vol-3; Chambers Encyclopedia
அப்போஸ்தலர் நடபடிகள் கதை எல்லாமே கட்டுக்கதை.கிறிஸ்துவ மதம் வளர வரலாற்று ஏசு காரணமில்லை. 
உதவிய கட்டுரைகள் - ரிச்சர்ட் காரியர்மற்றும் பார்ட் எர்மான் கட்டுரைகள்

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...