Friday, November 20, 2020

திருச்செந்தூர் முருகர் சிலையை கொள்ளையடித்த கிறிஸ்துவ விஷநரிகளும், முருகரின் அற்புதமும்

இறைவன் முருகனுக்கு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருப்பினும் அதில் அறுபடை வீடுகள் மிக முக்கியமானதாகும். இந்த அறுபடை வீடுகளில் ஒரு கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சிலையை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் படையினர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். டச்சுப் படையினரால் கொள்ளையடிக்கப்பட்ட அந்த சிலை மீண்டும் கோயிலை எப்படி வந்தது கொல்லையடுத்த டச்சு படையினர் என்ன ஆனார்கள் என்று தெரியுமா? விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..

பாதிரி சவேரியார் எனும் ப்ரான்சிஸ் சேவியர், தன்னால் தமிழ் பண்பாட்டை மறந்ட்க்ய் மதம் மாறியவனைக் கொண்டு இறை சிலையை உடைக்க வைத்து காண்பதே தன்க்கு மகிழ்ச்சி என எழுதிய மிருகமே மிஷநரிகளின் முகம் ஆகும்

   திருமலை நாயக்கர். இவரது ஆட்சிக் காலத்தில் கேரளக் கடற்கரையின் கொச்சித் துறைமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நெடுநாட்களாக வியாபாரம் செய்துவந்த போர்ச்சுகீசியர்களுடன் திருமலை நாயக்கரது அரசு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் கிழக்கு, மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் டச்சுக் காரர்களும் வர்த்தகத்தில் இறங்கத் தொடங்கினர். அவர்களது வர்த்தகத்தால் கவரப் பட்ட திருமலை நாயக்கர், 1646-ஆம் ஆண்டு டச்சுக் காரர்கள் காயல்பட்டினத்தில் வணிகத் துறைமுகமும், கோட்டையும் அமைத்துக் கொள்ள அனுமதி அளித்தார்; போர்ச்சுகீசியர்களுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த போர்ச்சுகீசியர்கள் ஏராளமான சரக்குகளுடன் காயல் துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த டச்சுக் கப்பல்களைத் தாக்கி அழித்தனர். கோட்டையைக் கைப்பற்றி, அங்கிருந்த டச்சுக் காரர்களையும் விரட்டியடித்தனர். டச்சுக்காரர்கள், இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை ஏற்கனவே காலனிப் படுத்தியிருந்த டச்சு கவர்னரிடம் முறையிட, உடனடியாக டச்சுப் படைவீரர்கள் பல படகுகளுடன் மணப்பாடு துறை வழியாக மன்னார் கடற்கரைப் பகுதிகளில் உட்புகுந்தனர். வீரராமபட்டிணம் என்ற ஊரில் இருந்த போர்ச்சுகீசிய சர்ச்சை முதலில் கையகப் படுத்திய பின், அவர்கள் திருச்செந்தூர் கோயில் உட்புகுந்து அதனையும் ஆக்கிரமித்தனர். பீரங்கித் தளவாடங்களுடன் கோயிலை தங்கள் கொத்தளமாக மாற்றினர்.  

 

சுப்பிரமணிய சுவாமியின் உற்சவர் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக் காரர்கள், அடுத்த கிளர்ச்சி தொடங்கு முன் தப்பிக்கத் திட்டமிட்டு கப்பல்களில் கிளம்பத் தொடங்கினர்.

 

டச்சுக்காரர்கள் கோயிலில் இருந்த தங்கங்களை கொள்ளையிட்டதுடன், முருகனின் உற்சவர் சிலை மற்றும் நடராஜர் சிலைகளை தங்க சிலை என்று கருதி கொள்ளையடித்து சென்றனர்.

 

கப்பலில் செல்லும் வழியிலேயே சிலைகளை உருக்க முயற்சி செய்தனர். அப்பொழுது திடீரென்று கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும் வேகத்துடன் கடலில் சூறாவளி காற்று வீசத் தொடங்கியுள்ளது. கப்பல் கடுமையாக ஆட்டம் கண்டு கப்பம் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, இதனால் பெரும் அச்சமடைந்த டச்சுப்படையினர் அனைவரும் பெரும் அச்சமடைந்து முருகனின் சிலையை கைப்பற்றியதால் தான் இப்படி நடக்கிறது என்று உணர்துள்ளனர். பின் அனைவரும் ஒருமனதாக தாங்கள் கைப்பற்றிய முருகன் சிலைகளை கடலில் போட்டுள்ளனர். அடுத்த கணமே கடலில் ஏற்பட்ட கொந்தளிப்புகள் சட்டென்று நின்றுள்ளது. 

 

இந்த சம்பவம் நிகழ்ந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோயிலுக்கு உற்சவர் சிலை செய்யும் வேலைகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் வடமலையப்பர் என்ற முருக பக்தரின் கனவில் தோன்றிய முருகர். உற்சவ மூர்த்திகள் கடலில் இருக்கும் இடத்தை காண்பித்து, அதற்கு அடையாளமாக ஒரு எலுமிச்சை பழம் மிதக்கும் என்றும் கருட பறவை இடத்தை அடையாளம் காட்டும் என்றும் அறிவித்து அருளியுள்ளார்.

 

இந்த தகவலை கோயிலில் உள்ளவர்களுக்கு தெரிவித்த வடமலையப்பர் மக்களை திரட்டிக்கொண்டு கடலில் உற்சவர் சிலையை தேட தொடங்கியுள்ளார். கனவில் கண்டபடியே கடலில் ஒரு இடத்தில் கருடப்பறவை குறிப்பிட்ட இடத்தை வட்டமிட்டு அடையாளம் காட்டியுள்ளது. அதே போல் அந்த இடத்தில் ஒரு எலுமிச்சம் பழமும் மிதந்துள்ளது. இது தான் முருகன் கனவில் காட்டிய இடமென்று அறிந்த மக்கள் கடலில் மூழ்கி உற்சவர் சிலைகளை வெளியே கொண்டு வந்துள்ளனர்.

 

ஒரு சுப தினத்தில் மீண்டும் கோயிலை அடைந்த முருகன் சிலை இன்றளவும் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த சம்பவத்தை இன்றளவும் திருச்செந்தூர் சுற்றியுள்ள மக்கள் நாட்டார் பாடல்களின் வழியே வெளிப்படுத்தி வருகின்றனர்.

டச்சுக் காரர்கள் பல அரிய பொக்கிஷங்கள் நிறைந்த திருச்செந்தூருக்கு வந்த அங்குள்ள சுப்பிரமணியசுவாமியின் சிலையை திருடிச்சென்றுள்ளனர். கடல்கடந்து சென்ற சிலை காலப்போக்கில் மீண்டும் திருச்செந்தூருக்கு வந்துள்ளது. 

திருச்செந்தூர் கோயிலுக்குப் போனால் கடலில் இருந்து மீட்கப்பட்ட  சண்முகர் சிலையை ஆடல்வல்லான் நடராஜர் சிலையும் அவ்வாறு மீட்கப்பட்டே இன்றும் ஆலயத்தில் உள்ளது!

வடமலையப்பர் உருவாக்கிக் கொண்டு வந்த சிலைகளை அவர் மீண்டும் எடுத்துச் சென்று, திருநெல்வேலியில், பாளையம் கோட்டைக்கு அருகே உள்ள முருகன் குறிச்சி என்ற ஊரில் பிரதிஷ்டை செய்தார் – திருப் பிரந்தீஸ்வரர் ஆலயம் என்று இது அழைக்கப் படுகிறது.



திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் வள்ளி குகையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளி்ல் 2வது படைவீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் விளங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் பல லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிவுப்பாறை உள்ளது. 
இம்மலையின் குடைவறையில் மூலவர் பாலசுப்பிரமணியனின் கருவறை, பஞ்சலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள், வள்ளி குகையும் உள்ளது.
 இந்த குகை கோவிலுக்குள் செல்லும் குடைவரை வழியில் நான்கரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகை கல்வெட்டு ஒன்று உள்ளது. 
இதில் அக்கால தமிழ் வடிவத்தில் 34 வரிகள் உள்ளன. இக்கல்வெட்டை கண்டறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தமிழாசிரியருமான தவசிமுத்து கூறுகையில், கிபி 1656-ம் ஆண்டில் திருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட போது திருச்செந்தூரில் முத்தைய ஜோசியர் என்பவர் திருமலை உத்தரவின் பேரில் வள்ளி குகையில் முன் மண்டபத்திற்கு வெளியே கிணறு ஏற்படுத்தி தினசரி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார். இக்கல்வெட்டு வைகாசி மாதம் 4-ம் தேதி பொறிக்கப்பட்டது. 
முருகப் பெருமானை திருமணம் செய்ய வள்ளியம்மன் சிவபெருமானை லிங்க வடிவத்தில் வழிபட்டது இக்குகையில் தான் என்று திருசெந்தூர் தல புராணம் கூறுவதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. 
கிபி 1648-ம் ஆண்டில் டச்சுக்காரர்கள் திருமலை நாயக்கருக்கு எதிராக படையெடுத்து திருச்செந்தூரில் இருந்து சிலைகள், நகைகளை கொள்ளையடித்துச் செல்லும்போது எழில்மிகு சிற்பங்கள், கடற்கரை குடைவரை சிற்பங்கள், கட்டிடங்களையும் சிதைத்து சென்றதாக வரலாறு சொல்கிறது. 
இக்கல்வெட்டு வாயிலாக 1656-ம் ஆண்டு திருமலை நாயக்கர் சிதைவுற்ற பகுதியை சீர்செய்து திருப்பணிகள் மேற்கொண்டதை அறிய முடிகிறது என்றார்.

https://tamil.oneindia.com/art-culture/essays/2011/17th-century-inscription-found-tiruchendur-temple-aid0175.html
As per some 20th century historians the events are as follows:

சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக் காரர்கள், அடுத்த கிளர்ச்சி தொடங்கு முன் தப்பிக்கத் திட்டமிட்டு கப்பல்களில் கிளம்பத் தொடங்கினர். போரைத் தவிர்க்க விரும்பிய நாயக்கர், தமது தூதராக வடமலையப்ப பிள்ளை என்பவரை அனுப்பி, கோயில் சொத்துக்களைத் திருப்பித் தருமாறு டச்சுக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்னரின் மனக்கருத்தை அறிந்த டச்சுக் காரர்கள் பணயத் தொகையை 100,000 டச்சு நாணயங்களாகக் கூட்டினர், இந்த நடவடிக்கைகள் டச்சுக் காலனிய அதிகார பீடங்கள் வரை எட்டின. பிரசினை வலுக்குமுன், கிடைத்த பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டு விலகுமாறு டச்சு கவர்னர் ஆணையிட்டார். இவ்வாறாக, செந்திலாண்டவன் திருவுருவச் சிலையும், கோயில் சொத்துக்களும் மீட்கப் பட்டன.

Thanks:https://www.hindutamil.in/news/supplements/ilamai-puthumai/206081--~XPageIDX~.html      https://tamil.nativeplanet.com/travel-guide/let-visit-thiruchendur-coastal-town-this-month-001270.html

http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time/ 








No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா