Sunday, January 4, 2026

கடையநல்லூர் அண்ணாமலையார் கோவில் ₹.100கோடி நிலத்தை மோசடியாக விற்றிட, முஸ்லிம் ஆக்கிரமிப்பு செல்லாது- ஹைகோர்ட்

 கடையநல்லூர் அண்ணாமலையார் கோவில் ₹.100கோடி நிலத்தை மோசடியாக விற்றிட, முஸ்லிம் ஆக்கிரமிப்பு செல்லாது- ஹைகோர்ட் 


நன்றி - TR.Ramesh
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, கோவில் நிலங்களை மீட்பதில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
110 கோடி மதிப்பிலான கோவில் நில மீட்பு விவகாரத்தின் முழு பின்னணி இதோ:
1. வழக்கின் பின்னணி (1994 - 2025)
இந்த நிலம் சென்னை, திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலமாகும்.
சட்டவிரோத ஏலம்: 1994 ஆம் ஆண்டு, அப்போதைய கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் (HR&CE) சில அதிகாரிகளின் துணையோடு, சுமார் 3.93 ஏக்கர் நிலம் மிகக் குறைந்த விலைக்குத் தனியார் நபர்களுக்கு ஏலம் விடப்பட்டது.
ஆக்கிரமிப்பு: இந்த ஏலத்தை அடிப்படையாக வைத்து, அந்த நிலத்தில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் ஒரு மசூதி உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில் சுமார் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் (சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) குடியேறினர்.
2. நீதிமன்றப் போராட்டம்
இந்த ஏலம் சட்டவிரோதமானது என்றும், கோவில் நிலத்தை விற்பனை செய்ய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் தரப்பில் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தப்பட்டது.
தனி நீதிபதி தீர்ப்பு:
ஆரம்பத்தில் நிலத்தை மீட்டெடுக்கத் தடைகள் இருந்தன.
டிவிஷன் பெஞ்ச் அதிரடி (Division Bench Verdict): சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, 1994-ல் நடந்த ஏலம் "முற்றிலும் சட்டவிரோதமானது" (Ab initio void) என்று அறிவித்தது.
3. தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
நில மீட்பு: அந்த 3.93 ஏக்கர் நிலத்தையும் உடனடியாகக் கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டிடங்கள் அகற்றம்: ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை (மசூதி உட்பட) அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தியது.
மதிப்பு: தற்போது அந்த நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 110 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

5. தற்போதைய நிலை
நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளதால், அறநிலையத்துறை அந்த நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றத் தயாராகி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதா என்பதும் கவனிக்கப்பட்டு வருகிறது.
முக்கியத் தகவல்:
"கோவில் நிலம் ஒருபோதும் ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சொந்தமாகாது, அது எப்போதும் தெய்வத்திற்கே (Deity) சொந்தம்" என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மேற்கோள் காட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=rGX2dCIGvX4
https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-orders-eviction-of-those-who-do-not-pay-rent-to-live-on-temple-land-692527.html



கோயில் சொத்து முழுமையாக மீட்க படுமா?
கடையநல்லூரில் ரூ175 கோடி மதிப்பிலான அண்ணாமலை நாதர் கோவிலுக்கு சொந்தமான 7ஏக்கர் நிலங்களை மீட்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது.
ஆனால் அரசியல் தலையீடுகளால் கோயில் நிலங்களை மீட்பதில் ஆமை வேகம்.
கோவில் நிலங்கள் முழுமைமையாக மீட்கப்பட்டு திருக்கோயில் கட்டுபாட்டில் வருமா?
ஏற்கனவே இந்த பிரச்சனையை தமிழக பாஜக தலைவர், செயல்வீரர் அண்ணாமலைஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் மீண்டும் அவரை நம் மாவட்ட நிர்வாகிகளிடன் சந்தித்து கடையநல்லூர் அண்ணாமலை நாதர் கோவில் சொத்தை மீட்க முயற்சி மேற்க்கொண்டுள்ளோம்.
"இது குறித்த முழு விபரம்"
கடையநல்லூர் உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையார் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இக்கோவில் நிலங்கள் நகரின் மைய பகுதிகளில் அமைந்துள்ளதால் அவற்றின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம்உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுபாட்டில் இருக்கும் இக்கோவிலில் அறங்காவலராக இருந்த சுப்பிரமணியன் என்பவர் கடையநல்லூர் அட்டகுளம் புரவில் இக்கோவிலுக்கு சொந்தமான 75 கோடி மதிப்பிலான 3.93 ஏக்கர் நிலத்தை அரசு விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்தார். விற்கப்பட்ட கோவில் சொத்துகளை மீட்க பக்தர்கள் சார்பிலும்,இந்து அமைப்புகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. இது குறித்து கடையநல்லூர் திருக்கோயில் பக்தர் ஒருவர் முறைகேடாக விற்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு உடனடியாக முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட கோவிலுக்கு சொந்தமான 3.93 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
பக்தர்களின் தொடர் முயற்சியாலும், கோரிக்கையாலும் இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை அளவீடு செய்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கோயில் நிலங்களை ஆக்கிரமித்த சுமார் 100 பேருக்கு காலி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதே போல இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்பிலான புஞ்சை நிலம் சர்வே எண் 16ல் 44 செண்டும், சர்வே எண் 47ல் 2 ஏக்கர் 90 செண்டும் ஆக மொத்தம் 3 ஏக்கர் 34 செண்டில் கட்டப்பட்ட 100 க்கும் மேற்ப்பட்ட வீடுகளை அகற்றவும் இந்து அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் அருள்மிகு அண்ணாமலை நாதர் கோவிலுக்கு சொந்தமான 175 கோடி மதிப்பிலான 7ஏக்கர் நிலத்தை முழுமையாக மீட்பதில் அரசியல் தலையீடு காரணமாக சுணக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம், தலைவர் அண்ணாமலைஜி அவர்களை சந்தித்து கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment

சோமநாதர் கோவிலை பாழாகி கோவில் நிலை TNHRCE பாழாக்க்கும் துறையா- Video

சோமநாதர் கோவில், நீலவேலி; கும்பகோணம்- தரங்கம்பாடி சாலைப் பாதையில் உள்ள கோவில் நிலை. கோவிலிற்கு சொந்தமாக பல நிலங்கள் உள்ளதாம்