Wednesday, May 6, 2015

கால்டுவெல்லின் சாதி மோசடி, அதுவே தமிழனுக்கு தலையிடி

http://vsrc.in/index.php/component/k2/item/441-2014-07-23-19-11-29
கி.பி 1840, 1847-1851 ஆகிய ஆண்டுகளில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் பல இலட்சம் மக்கள் மடிந்ததும், தப்பியவர்களில் பலர் அமெரிக்காவிற்கு குடியேற சென்றதும் சிலர் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதபோதகர்களாய் வந்ததும் கத்தோலிக்கர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. கால்டுவெல் 8.1.1838ல் சென்னையில் தனது காலை ஊன்றினார். பின்னர் 28.11.1841ல் நாசரேத் மற்றும் இடையன்குடி வந்து சேர்ந்து தனது வேலையை ஆரம்பித்தார் இவர் தனக்கென வகுத்துக்கொண்ட பணிகளாவன:
  • பல கோடி இந்தியரை 10-15 கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் அடக்கி ஆள்வது கர்த்தரின் ஆசீர்வாதத்தால் (devine plan) மட்டுமே சாத்தியமாகி உள்ளது. அதற்கான உதவிகளை தன்னை போன்ற பாதிரியார்கள் வழங்க வேண்டும்.
  • தமிழ் மொழியினை, சமஸ்கிருதத்திலிருந்து தனிமைப்படுத்தி, அதற்கான ஒரு சில ஆதாரங்களை தேடி அலைந்து தமிழர்களின் தனித்தன்மையை (?) வெளிக்கொணருதல்.
  • பிராமணர்களை தனிமைப்படுத்துவது
  • மறவர், நாயக்கர் சாணார் (நாடார்). தலித் மக்களை இழிவு படுத்தி பேசுதல், எழுதுதல் அவர்களின் பெருமையை சீர்குலைத்தல்.
  • நாடார்கள். ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்புவந்து தென்தமிழ் நாட்டில் குடியேறிய “வந்தேறிகள்” என்பது
  • பண்டைய தமிழர் சமயம் பூத வழிபாடு முறையை சார்ந்தது. அது இந்து சமயம் (?) அன்று என்பது
  • நாடார்கள் (சாணார்கள்) தலைவன் முற்காலத்தில் இராவணனின் தலைமை அமைச்சராக விளங்கினான் எனும் ஆதாரமற்ற வரலாற்றை கண்டுபிடித்து கூறியது.
  • மறவர்களின் வீரகுணம், தமிழர்களின் அமைதி வாழ்க்கைக்கு புறம்பானது என்பது (இதன் மூலம் தமிழர்களின் வீரத்தை மடக்கி மிதித்து ஆங்கிலேய கிறிஸ்தவர்களின் ஆட்சிக்கு ஊறு சேராத வண்ணம் பார்த்துக் கொள்வது).
  • பிராமணர்கள், வேளாளார்களை சூத்திரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் எனும் பொய் தத்துவத்தை வெளிப்படுத்தி பிராமணர் - வேளாளர், வேதாந்தம் - சித்தாந்தம், கசப்புணர்ச்சிக்கு வழிகோல்வது.
  • இலங்கையிலுள்ள தமிழர்களை, அவர்கள் தனி திராவிட இனம் எனவும் சிங்களர்களை ஆரியர்கள் எனவும் அறிவித்து அங்கு உள்நாட்டு இனப்போர் பல நூறு ஆண்டுகள் நடைபெற வித்திட்டது.
  • பிராமணர்கள் எல்லா இனத்தவரையும், எல்லா வழிபாட்டு மக்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதையே முழு வேலையாக செய்து வருகின்றனர். இத்தகைய பிராமணர்களின் ஒன்று சேர்க்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் (R.Caldwell-Lectures - பக்கம் 42). அதற்கு தேவையான பிரிவுவாத கருத்துக்களை திரட்டுதல் மற்றும் வெளியிடுதல் செய்யப்படவேண்டும். இதன் விளைவாக எழுந்ததே தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் - (பார்க்கவும் Nicholas B.Driks, Castes of Mind பக்கம் 143)
  • அயர்லாந்தில் புரொட்டாஸ்டன்டு சமயத்தினர் ஆரிய இனத்தையும் (celtic race) சமஸ்கிருதத்தையும் (Gaulic language) நசுக்குவது போன்று இந்தியாவிலும் செய்திட வேண்டும்.
  • அயர்லாந்தில் போன்று இந்தியாவிலும் தனி திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை முறைவிட செய்ய வேண்டும். அதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

நாடார்களை பொருத்தளவில் அவர்கள் அன்றும் இன்றும் மற்றவர்களின் வீட்டு எடுபிடி வேலைகளை செய்வது இல்லை. கால்டுவெல், தனது இருப்பிடத்தில் எடுபிடி வேலைகளை செய்ய நாடார்களை நியமித்தபோது அவர்கள் எதிர்த்து கிளர்ந்தனர். இந்நிகழ்ச்சி அன்னாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனவே அயர்லாந்தில் செல்டிக் மக்களை அவமானபடுத்தியது போன்று இங்கு நாடார்களையும் அவமானப்படுத்த எண்ணினார். அதன் பொருட்டு கால்டுவெல் 1849ம் ஆண்டில் “திருநெல்வேலி சாணார்கள், அவர்களின் மதம் - மனநிலை மற்றும் பழக்க வழக்கங்கள்” (Tinevelly Shanars, a Sketch of Their Religion and Their Moral Condition and Characteristics, as a Caste) எனும் 77 பக்கங்கள் கொண்ட ஓர் சர்ச்சைக்குரிய பிரசுரத்தை ஆங்கில - கிறித்துவ அரசு ஆதரவுடன் ஆங்கிலத்தில் சென்னையில் வெளியிட்டார். அடுத்த ஆண்டில் இது புத்தகவடிவாக லண்டனில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் இன்றும் சென்னை கன்னிமாரா படிப்பகத்தில் உள்ளது. அப்புத்தகத்தில் கால்டுவெல் வரிக்கு வரி நாடார்களையும், பக்கத்திற்கு பக்கம் பிராமணர்களையும், இந்து சமயத்தையும் இழித்தும், பழித்தும் கூறியுள்ளார். நாடார்களைப் பற்றி என்ன கூறுகின்றார் என பார்க்கலாம்.
  • நாடார்களுக்கு (சாணார்களுக்கு) பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் முக்கிய தொழில். சிலர் விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர் (புத்தகத்தின் பக்கம் 4)
  • சாணார்கள் - ஸ்ரீலங்காவிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது பனங்கொட்டைகளை தமிழகம் முழுவதும் விதைத்தனர். (பக்கம் 4  / பத்தி 3)
  • இராவணனுடைய பிரதம மந்திரி மகோதாரா என்பவன் சாணார் குலத்தவன். (இதற்கு ஆதாரம் ஏதும் கால்டுவெல் பாதிரியாரால் கொடுக்கப்படவில்லை). சாணார்கள் ஆடிமாதம் முதல் தேதியை விடுமுறை நாளாகவும், மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகவும் கொண்டாடுகின்றனர். ஏனென்றால் இதே தேதியில்தான் சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். இராமனுடைய துயரத்தை சாணார்கள் சந்தோஷமான நாளாக கொண்டாடுகின்றனர் - பக்கம் 28. (இதற்கான சாட்சியங்களை கால்டுவெல்லால் கொடுக்க முடியவில்லை. வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது). ஆடி மாத இறுதி கொல்லம் ஆண்டின் கடைசி நாள். இத்தேதியை நாடார்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் உள்ள மற்ற சமுதாயத்தினரும் “ஆடி இறுதி” என மகிழ்வான நாளாக கொண்டாடுகின்றனர். (கால்டுவெல் ஆடி இறுதி என்பதற்குப் பதிலாக ஆடி முதல் தேதி என தவறாக குறிப்பிட்டுள்ளார்.)
  • சாணார்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல. பொய் சொல்வதற்கு தயங்காதவர்கள். ஏமாற்று வேலையையும், தாழ்வான குணங்களையும் உடையவர்கள், (பக்கம் 33) . இவர்கள் அறிவுபூர்வமானவர்கள் அல்லர். மிகவும் கோழையர்கள் கூட. இவர்கள் நன்றி மறப்பவர்கள். சுயநலவாதிகள், சதிகாரர்கள், ஏமாற்றுக்காரர்கள், வணிக பொருள்களை திருடுபவர்கள், (பக்கம் 38, 39), படிப்பறிவு இல்லாதவர்கள் (பக்கம் 52), நிலப்பிரச்சனைகளிலே காலத்தை கழிப்பவர்கள் (பக்கம் 54).
  • சாணார்கள் சோம்பேறிகள், மந்தபுத்தி உடையவா;கள், அவா;களின் குழந்தைகள் அல்லது உறவினா;கள் காலரா நோயால் சாகும் தருவாயில் இருந்தால்கூட. விழித்திருந்து அவர்களுக்கு ஊழியம் செய்யாமல் தூங்கும் தன்மை உடையவர்கள் (பக்கம் 57).
  • சாணார்கள் சுய சிந்தனை அற்றவர்கள். சுயமாக சிந்திக்காமல் தங்களுடைய முன்னோர்கள் செய்த / கூறிய செயல்களுக்கே மதிப்பு கொடுப்பவர்கள். தங்களின் வாழ்நாளில் பாதியை சோம்பேறித்தனமாகவே கழிப்பவர்கள். எந்த தொழிலை செய்தாலும் இவர்களுக்கு அதனை பூரணமாக செய்யும் திறமை கிடையாது. கடனில் மூழ்கி இருப்பவர்கள், ஏழைகள் (பக்கம் 58).
  • மொத்தத்தில் மேற்கிந்திய தீவிலுள்ள நீக்ரோ அடிமைகளை விட சாணார்கள் அறிவாற்றலிலும், செயல்திறனிலும் தாழ்ந்தவர்கள் (பக்கம் 62) என்றும் எழுதியுள்ளார்;. அத்துடன், திராவிடர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்கள் (வந்தேறிகள்) என்றும், அவர்களின் இந்திய தமிழ்மொழி யுக்ரயின் (Ukraine) நாட்டு பகுதிகளில் பேசப்படும் ஸ்கைத்திய மொழி குடும்பத்தைச் சார்ந்த (வந்தேறி), மொழியென்றும் அடையாளம் காட்டியுள்ளார். (பார்க்கவும் அன்னாரின் ஒப்பிலக்கண நூல்.)

கால்டுவெல்லுக்கு மறுப்பு
இக்காலக்கட்டத்தில், இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பி, நாடார்களை (சாணார்களை) இழிந்த சாதியினர் எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் தடுத்தனர். இது சம்பந்தமாக வழக்கு ஒன்றும் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872). அவ்வமயம் ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரினை தலைமையிடமாகக்கொண்ட மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் (பிராமணர்) அவர்கள் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தார். அதுமட்டுமின்றி நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிய “வந்தேறிகள்” அல்ல என்றும், அதற்கு மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர்கள், சத்திரியர்கள் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடார்கள் வென்றனர்.

இதுபோன்று தோன்றிய கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (OS 33/1898) நாடார்களுக்காக தில்லைவாழ் (தீட்சிதர்) அந்தணர்களும், பாசூர் அந்தணர்களும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.. நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல் அவர்களின் பிரசுரங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர் அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினர். (பக்கம் 167-170-தோள் சீலைக்கலகம்). நாடார்கள் தண்டிக்கப்பட்டனர்.

நாடார்களுக்கு மட்டுமல்லாமல் தொண்டை மண்டல வெள்ளாள கவுண்டர் சமுதாயம் ஆகியவற்றிற்கும். பாசூர் மடாதிபதியும் அவ்வூர் அந்தணர்களும் 18,19,20ம் நூற்றாண்டில் சமுதாய குருவாக பெரும் சேவை ஆற்றியுள்ளனர். (பார்க்கவும் : பொன்தீபங்களின் ‘கொங்க குலகுருக்கள்; கொங்கதேச சாமுத்திர கலாச்சார கேந்திரம் வெளியீடு, ஈரோடு 2009) நாடார்களை பொறுத்த அளவில் அவர்களின் ஆன்மீக, வணிக மற்றும் பொது வாழ்விற்கு இவர்கள் பெரும் துணையாய் விளங்கியுள்ளனர். நாடார்கள் வாழும் கிராமங்களை பாசூர் அந்தணர்களின் குடும்பம் ஒவ்வொன்றும் தனதாக்கி (தத்தெடுத்தும்) 5-10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு வேதாந்த சைவத்தை எடுத்து விளம்பி, சிவ தீட்சை வழங்கி, பூணூல் அணிவித்து, சத்திரியர்கள் என மீண்டும் அறிவித்து தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கினார்கள். நாடார்கள் வசிக்கும் ஊர்களுக்குள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை பல்லக்கில் தூக்கி சென்று (அன்றைய ஆலய பிரவேச தடையை முறியடிக்க) வழிபாடு நடத்திட செய்தனர். அதனில் ஒரு விக்ரகம் இன்றும் சேலம் கருமாபுரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய குருக்கள் வசம் சித்தர் கோவிலில் (சேலம்) உள்ளது (பக்கம் 114 - The History of Nadars by S. Sarada Devi).

சிவதீட்சை பெற்று பூணூல் அணிந்த நாடார்கள் சாதி பெயர் அன்றி சத்திரியர்கள் என பொதுவாக அழைக்கப்பட்டனர். (இதன் காரணமாக பிறந்ததே சத்திரிய வித்தியாசாலைகள்). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்தமிழகத்தில் சிறு கிராமங்களில் கூட இவ்வாறு பூனூல் அணிந்த நாடார்கள் பலர் காணக்கிடைத்தனர். உதாரணத்திற்கு இக்கட்டுரையின் ஆசிரியரின் தந்தையார்; உமரிக்காடு (உமரிமாநகர்) சாமி நாடார் அவர்களும், அவரது தமையனார்; சத்திரியர் அருணாசல நாடார் அவர்களும் பூணூல் அணிந்திருந்தனர். அதுபோன்று வேதங்களை சமஸ்கிருதத்தில் ஓதவல்ல சிவகாசி நாடார்கள் பலர் இன்றும் உண்டு. (உதாரணம்: சிவகாசி தனபாலன் மோசி குடும்பத்தினர் - ஆண்களும், பெண்களும்).

இதன் காரணமாகவே காசிப்பழ நாடார் அவர்கள் 1987ல் எழுதியுள்ள “ உமரிமாநகர் தல வரலாறு” எனும் நூலில் நாடார்களின் குருக்களாக பாசூர் அந்தணர்களை குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காணலாம். பாசூர் அந்தணர்களின் சேவையைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.sishri.org, எனும் வலைதளத்திலோ அல்லது விருதுநகர் வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி சரித்திர பேராசிரியை முனைவர். சாரதாதேவி அவர்களின் நாடார்கள் பற்றிய The History of Nadars எனும் நூலிலோ படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

பாம்பையும், பார்ப்பானையும் ஒன்றாக கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்ற ஈவேரா பெரியாரின் பார்ப்பன கசப்பு வார்த்தைகளை பாசூர் அந்தணர்கள் பொய் என அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துள்ளனர். “பாம்பையும், அன்னிய பாதிரியையும் பார்ப்பனனையும் ஒரு சேர கண்டால் முதலில் உள்ள இரண்டை மட்டுமே அடி” என்பதே உண்மையான கருத்தாகும். இந்த உண்மை இன்று வரை மறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடார்களை கேவலமாக சித்தரித்த கால்டுவெல் பாதிரியை “திராவிட குருவாக” ஏற்றுள்ள திராவிட அரசியல் இயக்கங்களின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. பாதிரிக்கு அவர் வாழ்ந்த இடையன்குடியில் நினைவிடம் அமைத்துள்ள தமிழக அரசின் செயல் நாடார்களை மேலும் புண்படுத்துவதாகவும் உள்ளது.

கால்டுவெல்லுக்கு எதிர்ப்பு
 
சாணார்களைப் பற்றி கால்டுவெல் எழுதிய கருத்துக்கள் அக்காலகட்டத்தில் கிறித்துவ நாடார்கள் மத்தியிலும்கூட பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பை முன்னின்று நடத்தியவர்அருமை நாயகம் என்ற சாட்டாம்பிள்ளை எனும் கிறித்துவ சாணார் இவர் கொற்கை கிராமத்தை சார்ந்த பணக்கார சாணார். இவரை தவிர சாமுவேல் சற்குணர், ஞானமுத்து நாடார் ஆகிய கிறித்துவ சாணார்களும் கால்டுவெல் பாதிரியின் கருத்துகளை கடுமையான சாடினர். கால்டுவெல் தமிழ்ச் சரித்திரத்தை சரியாக புரியாதவர். பொய்யர், ஒரு சில நடப்புகளை உலக நடப்பு என பேசக் கூடியவர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பக்கம் 197 - 202, Robert Caldwell: A Scholar, Missionary in Colonial South India – by Vincent Kumaradas)

மேற்கத்திய பாதிரிகள் தங்கள் விருப்பம் போல் உண்மைக்கு மாறாக பைபிளை மொழி பெயர்க்கின்றனர் என்பது சட்டாம் பிள்ளையின் குற்றச்சாட்டு, சிலுவை வணக்கம் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்றும், இந்திய கிறித்துவர்களை இந்து கிறித்துவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார் சர்ச்சுகளில் பழைய ஏற்பாட்டின் அடிப்படையிலே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்றும், மொழி பெயர்க்கப்பட்ட விவிலியம் (புதிய ஏற்பாடு) மேற்கத்திய கிறித்துவர்களின் பொய்யை பரப்பக் கூடியது, கற்பனையானது, விளையாட்டுத்தனமானது என்றும் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஒழுக்க குறைவான ஐரோப்பிய கிறித்துவ பாதிரிகள் “எந்த விதத்திலும் தாழ்ந்து போகாத ஒழுக்க முறைகளையுடைய இந்துக்களிடையே மதப் பிரச்சாரம் செய்ய தகுதியற்றவர்கள்” என கர்ச்சித்தார்;. இவர் ஜெருசலேம் யூத கோவில்களின் சாயலில் (இவரால் மேற்கத்திய கிறித்துவம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது) ஒரு சர்ச்சினை முதலாவதாக 1857ல் நாசரேத் அருகிலுள்ள மூக்குபீரி எனும் சிற்றூரில் அமைத்தார். அதில் இந்து முறைப்படி படையல் படைத்தும், சாம்பிராணி தூபமிட்டும் வழிபாடு நடத்தினார். (பக்கம் 49 - 56 காலச்சுவடு - 16, டிசம்பர் 1996).

சாணார்களை பற்றிய தனது கருத்தை கால்டுவெல் திரும்ப திரும்ப கூட்டங்களில் வலியுறுத்தினார் என்பது மட்டுமின்றி தனது கருத்தினை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதன் காரணமாக கால்டுவெல் மீது பல கொலைவெறி தாக்குதல் முயற்சிகள் நாடார்களால் மேற்கொள்ளப்பட்டன. கால்டுவெல் கொடைக்கானலில் குடியேறி தப்பினார். அவர் சாகும்வரை கொடைக்கானலில் இருந்து இறங்கி வரவில்லை. (பக்கம் 142 - தோள் சீலைக்கலகம்).

அடுத்த பகுதியில் கால்டுவெல்லின் மொழி மோசடியைப் பார்ப்போம்….
Read 659 times
Rate this item
(0 votes)

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...