Thursday, November 5, 2015

பைபிள் வகுப்பில் மாணவனுக்கு சூடு போட்ட கன்னியாஸ்திரி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1380483

பைபிள் வகுப்பு -சிறுவனுக்கு சூடு: ஆசிரியை கைது


சென்னை : கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, சிவசங்கரன் தெருவை சேர்ந்தவர் ஜெஸ்சி, 34; கன்னியாஸ்திரி. அவர் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு, தன் வீட்டில் பைபிள் வகுப்பு எடுத்து வந்தார். அதில், 15 வயதுக்கு உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருவர்.
அதே தெருவை சேர்ந்தவர் குமார்; அவர் மகன் சந்தோஷ், 5; அவன் அங்குள்ள தனியார் பள்ளியில், 1ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் வழக்கம் போல், பைபிள் வகுப்பிற்கு சந்தோஷ் சென்றான்.அவன், வகுப்பை கவனிக்காமல் மற்ற மாணவர்களிடம் சிரித்துப் பேசி விளையாடினான். அதனால் கோபம் அடைந்த ஜெஸ்சி, அவனை கண்டித்தார். ஆனாலும் அவன் தொடர்ந்து விளையாடினான். ஆத்திரமடைந்த ஜெஸ்சி, ஸ்கேலால், சந்தோஷை அடித்து, கரண்டியை சூடுபடுத்தி கன்னங்களில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. ஜெஸ்சியிடம் விளக்கம் கேட்டு, சண்டையிட்டுள்ளனர். ஜெஸ்சி மன்னிப்பு கேட்டார். இருப்பினும், கொடுங்கையூர் போலீசில் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, ஜெஸ்சி கைது செய்யப்பட்டார்.


திருப்பூர்: அரபி படிக்காத சிறுவனுக்கு சூடு; மதாரசா பள்ளி நிர்வாகி கைது!

திருப்பூர்: திருப்பூரில் அதிகாலை எழுந்து அரபி படிக்காத சிறுவனை அயன்பாக்சில் சூடு வைத்த பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
திருப்பூரை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்பவர் தனது 6 வயது மகன் இப்ராஹீமை, அரபு மொழி கற்பதற்காக அக்ஹாரபுதூரில் உள்ள மதரசா பள்ளியில் சேர்த்துள்ளார். அப்துல் ஹக்கீம் தனது மகனை பார்க்க பள்ளிக்கு சென்றபோது பள்ளி நிர்வாகி முகமது ஷேக் பரீத், இப்ராஹீமை பார்க்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. 

Boy Branded with Iron Box, Teacher Held
முடியாது என்று சொல்லவே இப்ராஹீமை பார்க்க அனுமதித்துள்ளார் பள்ளி நிர்வாகி. அப்போது, இப்ராஹீம் உடம்பில் பல பகுதிகளில் தீ காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்துல் ஹக்கீம். இதையடுத்து, தனது மகனை உடனடியாக அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளார். மேலும், இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் அப்துல் ஹக்கீம் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து மதரசா பள்ளி நிர்வாகி ஷேக் பரீத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். போலீசாரின் விசாரணையில், ''சிறுவன் இப்ராஹீம் அதிகாலையில் எழுந்து படிக்கவில்லை என்பதாலும், குறும்பு செய்ததாலும் உடம்பில் அயன்பாக்ஸ் மூலம் சூடு வைத்ததாக ஷேக் பரீத்" கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் ஷேக் பரீத்தை கைது செய்து திருப்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஷேக் பரீத்திடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளி நிர்வாகியை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
 http://tamil.oneindia.com/news/tamilnadu/boy-branded-with-iron-box-teacher-held-190229.html
 




No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா