Sunday, April 3, 2016

Britain Racist Law (Criminal Tribes Act 1871) becoming Film; Barathi Raja attacks Director Bala

"குற்ற பரம்பரையினர் சட்டம்" (Criminal Tribes Act 1871).
இதை கொண்டுவந்த நீதிபதி James F. Stephen, இந்த சட்டத்தின் சாராம்சமாக முன்மொழிந்த கூற்று,
"...like weaving, carpentry,.. we speak of professional criminals, tribes whose ancestors were criminals from time immemorial, themselves destined by the caste to commit crime and offend law. The whole tribe should be exterminated, like Thugs" April 3, 2016 15:48 IST
Updated: April 3, 2016 16:35 IST

'குற்றப்பரம்பரை'- பாலாவின் முனைப்பும் பாரதிராஜாவின் அவசர பூஜையும்!



'குற்றப்பரம்பரை' படம் குறித்து சர்ச்சை நிலவி வந்த நிலையில், இன்று பட பூஜையுடன் பணிகளைத் தொடங்கி இருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா.
'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான முதற்கட்ட பணியில் தீவிரமானார் இயக்குநர் பாலா. விஷால், ஆர்யா, அரவிந்த்சாமி, ராணா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவித்தார். இப்படம் 'குற்றப் பரம்பரை' என்று தகவல்கள் வெளியானது.
இப்படத்தில் நடிக்கவிருக்கும் ஒருவர், "குற்றப்பரம்பரை' கதையைப் படிக்க வேண்டாம் என்று பாலா சார் என்னிடம் தெரிவித்தார். முழுமையாக திரைக்கதை வடிவத்தை முடித்துவிட்டு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.
அந்தச் சமயத்தில் பாரதிராஜா 'குற்றப்பரம்பரை' தனது கனவுப் படம் என்றும் தெரிவித்து வந்ததாகவும், ஆனால் பாலா முந்திக் கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சில நாட்களாக மீண்டும் பாரதிராஜா 'குற்றப்பரம்பரை' படத்தை இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்க இருக்கிறார்கள்.
குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளையும் இயக்குநர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
தற்போது பாலா படத்தின் கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 'குற்றப்பரம்பரை' படத்துக்கு பூஜைப் போட்டுள்ளார். உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
தமிழ் திரையுலகினர் பலர் இப்படப் பூஜையில் கலந்து கொண்டு இயக்குநர் பாரதிராஜாவுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
இயக்குநர் பாலா தனது படத்துக்கு என்ன தலைப்பு வைக்கப் போகிறார், இந்த சர்ச்சைக்கு என்ன சொல்லப் போகிறார் என்பது தான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது.

No comments:

Post a Comment

தமிழக உள்துறை அதிகாரி சாஹீரா பானு மீது DVAC வருமானத்திற்கு அதிக சொத்து வழக்கு பதித்தது மகன் சையத் முகமது கரீமுல்லா ரூ.8.5 கோடி தங்கம் கடத்தல்,

மகனின் தங்கக் கடத்தலுடன் தொடர்புடைய டிஏ வழக்கில் உள்துறை அதிகாரி மீது டிவிஏசி வழக்குப் பதிவு செய்துள்ளது சுங்க விசாரணையில் குற்றம் சாட்டப்பட...