திருப்பரங்குன்றம் மலை மீதான கோவில் ஸ்தல் விருட்ச கல்லத்தி மரத்தில் அரேபிய முஹம்மதிய தர்கா கொடி ஏற்றியதை HRCE ஏன் தடுக்கவில்லை- போலீஸ் புகார் தாருங்கள் -ஹைகோர்ட்
1. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டாம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொன்னாரா?
2..கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் தர்கா சந்தனக்கூடு விழா நடத்தியது ஏன்?
3..இது தொடர்பாக தர்கா நிர்வாகம் மீது காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டாமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில தீபம் ஏற்றுவதை அனுமதிக்காத அரசு, கந்தூரி திருவிழாவுக்காக மலை மேல் சென்ற இஸ்லாமியர்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில கொடி கட்ட அனுமதித்திருக்கிறது. அதுவும் ஸ்தல விருட்சம் என்று அழைக்கப்படும் கல்லத்தி மரத்தில் இஸலாமியர்கள் கொடியை கட்டியிருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த பொழுதே கோயிலுக்கு சொந்தமான இடத்தில எப்படி கொடி கட்டலாம் என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் அரசும், அறநிலையத்துறையும் மவுனமாக இருந்தனர். இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடந்த பொழுது, இஸ்லாமியர்கள் கொடி கட்டிய இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று, திருப்பரங்குன்றம் கோவிலின் செயல் அலுவலர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த அரசு எவ்வளவு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்பதற்கு இதைவிட பெரிய சான்று தேவைப்படாது. கோயிலின் இடத்தை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறை, இந்த சம்பவத்துக்கு ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. கோயிலின் செயல் அலுவலர் தான் இந்த சட்டவிரோத செயலுக்கு புகார் அளிக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் வாக்குகளுக்காக கோயில் இடத்தை வெளிப்படையாக தாரைவார்க்கிறது இந்த அரசு.
அதே போல் கொடி கட்டும் இடம் தர்காவுக்கு சொந்தம் இல்லை, கோயிலுக்கு தான் சொந்தம் என்று தெரிந்த பிறகும், அந்த இடத்தில கொடி கட்டியிருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். சட்டப்படி கோயிலுக்கு சொந்தமான இடத்தில அத்துமீறி நுழைந்து இஸ்லாமிய விழாவுக்கான கொடியை கட்டுவது மதவாதம் இல்லையா? இங்கே வேண்டுமென்றே மதக்கலவரத்தை தூண்டுவது யார்? இஸ்லாமியர்கள் தானே. மதுரையில் அண்ணன் தம்பியாக பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய நினைப்பது எந்த விதத்தில் நியாயம். திமுகவின் தேர்தல் வெற்றிக்காக தேவையில்லாமல் இந்து முஸ்லீம் இடையே பிரச்சினையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இந்துக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
தங்களுக்கு சாதகமான அரசு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று திருப்பரங்குன்றத்தை பிரச்சினைக்குரிய பகுதியாக மாற்றிக் கொண்டிருப்பது இஸ்லாமியர்கள் தான். சிக்கந்தர் மலை என்று சொன்னது, மலை மேல் ஆடு, கோழி பலியிடுவோம் என்று சொன்னது, மலை மேல் அசைவம் சாப்பிட்டது, மலைக்கு அசைவம் எடுத்துச் செல்வோம் என்று பிரச்சனை செய்தது, கோயிலுக்கு சொந்தமான இடத்தில கொடி கட்டியது என வரிசையாக பிரச்சினைகளை உருவாக்கியது இஸ்லாமியர்கள் தானே. தீபத்தூண் இருக்குமிடம் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என நீதிமன்றத்தில் வாதாடியது, தீபதூணுக்கு செல்லும் வழி தர்காவுக்கு சொந்தம் என்பதால் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது என்று வாதாடியதும் இஸ்லாமிய தரப்பு தான்.
மேற்சொன்னவை அனைத்தும் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட பிரச்சினை என்பதை யாராவது மறுக்க முடியுமா? திமுகவின் தேர்தல் வெற்றிக்காக அமைதியாக இருந்த சமூகத்தில் பிளவு ஏற்படுத்தியது யார் என்பதை இன்று தமிழகமே உணர்ந்து கொண்டு விட்டது.
No comments:
Post a Comment