Tuesday, July 10, 2018

பாவணரின் கிறிஸ்துவ வெறி- தமிழர் மெய்யியலை இழிவு செய்யும் தமிழ் மரபுரை

திருக்குறளை இழிவு செய்த தேவநேயப் பாவணரின் கிறிஸ்துவ வெறி  நச்சுப் பொய்யை பாவாணரின் கிறிஸ்துவ பன்றித்தனத்தை ஆங்காங்கே காணலாம்-//"என்பன ஆரியத்தைக் கண்டித்தனவாகும் பிறவற்றைக் கடிந்ததை ஆங்காங்கு நூலுட் காண்க."// (திருக்குறள் தமிழ் மரபுரை )
முழுவதும் பொய் பித்தலாட்டம் - அனைத்து குறளும் தமிழரில் தொல் குடியான அந்தணரைப் போற்றியும், வேதங்களை உயர்த்தி சொல்லப் பட்ட குறள்கள்.
பாசீச இனவெறி பரப்பும் கிறிஸ்துவ பைபிள் தொன்மக் கதைகளை பரப்பி மதம் மாற்றி சர்ச் அடிமையாக்குதலை தடுத்தது அந்தணர்கள் என்பதை 3000 கோவில்களை இடித்தது சர்ச் நீதிமன்றம் அமைத்து கொடுங்கோல் கொலைகளின் சூத்திரதாரி ப்ரான்சிஸ் சேவியர் எனும் சவேரியர்  & லயோலா கடிதம் சொல்கிறது. 


திருக்குறளில் உள்ள சொற்கள் சங்கத் தமிழ் இலக்கிய மரபில் உள்ள பொருள்படியும்,  பின்னரான சிலப்பதிகாரம்-மணிமேகலை படியும் தான்
திருக்குறள் எழுதி நூறு ஆண்டுக்குள் எழுந்த முதல் உரை மணக்குடவர் உரை - அது சமணருடையது
திருக்குறள் எழுதி நூறு ஆண்டுக்குள் எழுந்த முதல் உரை மணக்குடவர் உரை - அது சமணருடையது, அவர் மேலுள்ள குறள்பாக்களில் சிலவிற்கு கொடுத்த பொருள் பார்க்கலாம்




திருக்குறள் - 1330 குறட்பாக்களில் ஒரு முறை கூட வள்ளுவர் பயன்படுத்தாத சொல் தமிழ். மேலும் மொழியால், இனத்தால், மதத்தால் பிரிவினை தூண்டுவோரை நாட்டினை பாழ் செய்யும் உட்பகை என வள்ளுவர் சாடுவார்

ஒருவன் நிறைய அறம் செய்தால் உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின்,  இழிவாய் அறத்திற்கு மாறாய் செய்தால் பாவம் உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயேய் விடுவான்.
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.                                        ஒழுக்கமுடைமை குறள் 133:
மணக்குடவர் உரை:ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும். இது குலங்கெடுமென்றது.

இங்கு ஜாதியை இழுத்து - பிராமணனை தாக்குவது பாவாணரின் கிறிஸ்துவ மதவெறி நச்சு பொய்கள், பைத்தியக்கார உளறல்கள்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.                  ஒழுக்கமுடைமை  குறள் 134:
மணக்குடவர் உரை:  பிராமணன் வேததித்னை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
அன்றாடாம் ஓதும் வேதத்தை கூறுகையில் மறந்தாலும், மீண்டும் கற்கலாம், தன் பிறப்பு குடி ஒழுக்கத்தை விட்டால் இழிந்தவனாய் கெடுவான் என்கிறார் வள்ளுவர்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.   குறள் 543- செங்கோன்மை
மணக்குடவர் உரைஅந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.

ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில்  வேதம்  பிராமணர்ளை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை  - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை      இன்னா நாற்பது 21


ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.    குறள் 560:  கொடுங்கோன்மை
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.


பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.


 ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
 ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்”                      – பதிற்றுப்பத்து 24)
 கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்   (பதிற்றுப்பத்து  பாட்டு - 74
 அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம்  -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2

நல்ல அரசன் அந்தணர்களின் வேத அற நூல்களை உறுதுணையாய் ஆட்சி செய்ய வேண்டும், அரசன் மோசமான ஆட்சி செய்தால் அந்தணர் வேதம் மறப்பர் என வள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி கூறுகிறார்.
வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை   துறவி எனும் பொருளில் வள்ளுவர்  ஆண்டுள்ளதை,  அந்தணர் குல மரபை  ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லைகடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும், 
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

                ..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்  - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
 திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து  அதிகாரத்திலும், நீத்தார் பெருமை  துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்

திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும்.
வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப.   தொல்காப்பியம்-செய் 480

 மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,  திருமுருகாற்றுப்படை2.

 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.    தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல்  பொருள். கற்:5/29



1 comment:

  1. அருமையான விளக்கம். இன்று பலர் தமிழுக்கும், ஸமஸ்கிருதத்திற்கும் சம்பந்தம் இல்லை, பார்ப்பணர்கள் ஆரியர்கள், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று விதண்டாவாதம் செய்ய பாவாணருடைய எழுத்துக்கள் தான் முக்கிய காரணம். இவரின் பின்புலம் பலருக்கு தெரிவதில்லை. இவருடைய பின்புலத்தை ஆதாரத்துடன் நிரூபிப்பதே இவர்களுக்கு சரியான பதிலடியாக இருக்க முடியும்

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா