Sunday, July 22, 2018

அந்தணர் என்போர் அறவோர் குறளும் தமிழ் புலவர்களின் நச்சு உரைகளும்

 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்            ( குறள் :30 நீத்தார் பெருமை  )

தமிழர் மெய்யியல் மரபுரை:  துறவிகள் (நீத்தார்) என்போர்   எல்லா உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழிந்து ஒழுகுவாராய் இருக்க வேண்டும்.

இந்தக் குறளில் துறவி என்பதை தான் கூற வேண்டிய செய்தியை சொல்ல வெண்பா வழக்கு சீர்- தளையில் அமைக்க அந்தணர் எனப் பயன் -படுத்தினாலும் குறித்தது முனிவர்களை தான்
ஆனால் காலனி ஆதிக்க கிறிஸ்துவ மதமாற்ற‌ நச்சு தமிழர் விரோதக் கல்வியும், அந்தணர் வெறுப்பு எனும் விஷத்தை திணித்து தேவநேயன் போன்றோர் அராஜகத்தினால் நாம் பல தமிழ் புலவர் உரையில் சம்பந்தம் இல்லாதவற்றை காண்கிறோம்.
அந்தணர் தமிழரில் மூத்த தொல்குடியினர். தொல்காப்பியரும், திருவள்ளுவரும்  அந்தணர் தான்.
கிறிஸ்துவ நச்சு மதம் பரப்ப செய்த பொய்யின் அடிமைகளாய் உள்ளவர்கள் செய்யும் கேடு அளவு தாண்டி செல்கிறது. 



 
தமிழண்ணல்  
கா.சு.பிள்ளை

தமிழர் மரபின் அந்தணர் என்பது ஒரு தொழில் முறை பிரிவு (வர்ணம்), அந்தப் பொருளிலும், அந்தணர் என்பதற்கு சமமான பிற சொற்களாலும் வள்ளுவப் பெருந்தகை பயன் படுத்தி உள்ள குறட்பாக்கள்; இவை அனைத்திலும் வள்ளுவர் பிராமணர்களையும் வேதங்களையும் தான் போற்றுதலாய் குறிக்கிறார்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.           (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.         (134ஒழுக்கமுடைமை)
 பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.                    (560 கொடுங்கோன்மை)
நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

கல்வெட்டுகள், செப்பேடுகள் அரசர்கள் வள்ளுவர் காலம் முன்பே வடமொழி அற நூல்களை பின்பற்றினர் எனக் காட்டுகிறது.   சிலப்பதிகாரமும் உறுதி செய்கிறது.
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

இங்கு கடவுளை அந்தணர் என்பதை எந்த புலவரும் சொல்வதே இல்லை அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                 (8-கடவுள் வாழ்த்து)

நீத்தார் பெருமை என்பது முனிவர்கள் பெருமையைப் போற்றும் அதிகாரம், முனிவர்கள் இயற்கையின் ஓசைகளில் இருந்து பெற்று தந்தது தான் வேதங்கள் எனும் மறைகள், இவை இறைவனைப் புரிந்து துதிக்க உதவுவது. இதையே வள்ளுவரும்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.                            ( குறள் 28: நீத்தார் பெருமை)
 தமிழர் மெய்யியல் மரபுரை: தவவலிமை உள்ள துறவிகள் பெருமையைக  இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்1
மறைமொழி தானே மந்திரம் என்ப.           தொல்காப்பியம்-செய்யுளியல்480
நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமது  தாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு.

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்-
                                  -  திருமுருகாற்றுப்படை2. திருச்சீர் அலைவாய்

முற்றும் துறந்த முனிவர்கள் பெருமைகளை  போற்றி கூறுவதே சிறந்த நூல்களின் துணிவாகும். (நற்பனுவல் நால்வேதத்து என்பது சங்க இலக்கியம்)
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
                        ( குறள் 21: நீத்தார் பெருமை)

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                     குறள் 2:
தமிழர் மெய்யியல் மரபுரை:  உலகைப் படைத்த நிறைந்த அறிவினுடையவர் திருவடிகளை  தொழுது பணியவே கல்வி இல்லாவிடில் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.                             குறள் 4:
உலகைப் படைத்த இறைவன் என்பவர் விருப்பு வெறுப்பு அற்றவர், தேர்ந்தெடுக்கப் பட்டவர் எனும் கட்டுக் கதை, பெண்களுக்கு ஆத்மா கிடையாது எனும் மூட நம்பிக்கைகளை இங்கு உடைக்கிறார்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.                    குறள் 5:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.                             குறள் 7:

No comments:

Post a Comment

அஜ்மீர் தர்கா சுற்றிக் காட்ட லைசன்ஸ் பெறும் காதிம்கள் மட்டுமே

  Ajmer Dargah to introduce licensed Khadims for first time in 75 years; move sparks massive opposition The Khadims of Ajmer Sharif Dargah a...