Wednesday, October 24, 2018

புதிய ஏற்பாடு – சுவிசேஷ ஏடுகள் – நம்பகத் தன்மை வாய்ந்ததா?இல்லையே!


இயேசு கதைகளை சொல்லும் சுவிசேஷங்களில் பேதுருவின்  மரணத்திற்கு பின் எனில் முதலில் புனையப்பட்ட மாற்கு 70 - 80 க்கு இடையே ஆகும் ஆவது பின்னால் வரையப்பட்டவை மத்தேயு லூக்கா; இரண்டாம் நூற்றாண்டில் ரோம் மன்னன் ட்ரோஜன் காலத்தில்(98 -117) புனையப்பட்டது யோவான் சுவிசேஷம்.

நம்மிடம் எவற்றுக்கும் மூலப்பிரதிகள் கிடையாது எனவே கிடைத்துள்ள ஏடுகளை பற்றிய சோதனைகளை பார்ப்போம்இதற்கு 3 சோதனை மூலம் அறியலாம், நாம் விரிவாகக் காணலாம்.
பைபிளோகிராபி (BIBILOGRAPHICAL) சோதனை.
புதிய ஏற்பாடு ஏடுகள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் உள்ளதாம் அதில் 19 ஆயிரம் லத்தீனிலும் மீதம் கிரேக்க மொழியிலும் எனப்படுகிறது  புதிய ஏற்பாட்டின் 27 சிறு புத்தகங்களின் ஒன்றின் முழுமையான ஏடு நான்காம் நூற்றாண்டுக்கு சென்றுவிடும். ஐந்தாம் நூற்றாண்டினது எனப்படும் சினாய்டிகஸ், வாடிகனெஸ், கோடெக்ஸ்-டீ ஏடுகள் மீது 12ம் நூற்றாண்டுவரை மேலே திருத்தம் செய்யப்பட்டுள்ளது, இந்த தொகுப்பில் புதிய ஏற்பாட்டில் இல்லாத நூல்களும் உள்ளது, உள்ளவை இல்லாமலும் உள்ளது. 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய எந்த கிரேக்க ஏட்டிலும் மாற்கு 16:9-20  இல்லை.
இவை தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டவையும் அல்ல திடீரென கிடைத்து அங்கே கிடைத்தது இங்கே கிடைத்தது என சொல்லப்பட்டவை; பல அறிஞர்கள் இவற்றின் நம்பகத் தன்மை சந்தேகிக்கின்றனர் இவற்றை புகைப்படம் எடுத்து முழுமையாய் இணையத்தில் போடவேண்டும் என்பதை சர்ச் ஏற்கவில்லை.
அறிஞர்கள்படி குறைந்த பட்சம் மூன்று லட்சம் மாற்றங்கள் உள்ளன. நம்மிடமுள்ள பைபிளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் மாற்றாக வேறு இரண்டு வார்த்தைகள் எனும்படியாக அத்தனை மாறுபாடு கிடைக்கும். இன்று வரை நடுநிலை அறிஞர்கள் ஏற்கும்படி பொது பிரதி இல்லை.
இன்னும் ஒன்று மற்ற வரலாற்று அரசர்கள் உள்ளது அல்லது பிரபலமானவர்கள் கதைகள் பிரதிகள் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டு பிற்காலத்தது; ஆனால் இயேசுவின் உடையது காலம் குறைந்து குறைவு பிரதிகள் அதிகம் என்பர். ஆனால் அப்படி மற்ற வரலாற்று அரசர்கள்  பிரதிகளிலும் அறிஞர்கள் நம்பகத்தன்மை இல்லாதவற்றை நீக்கிவிட்டு தான் வரலாற்று நூல்கள் வருகின்றன ஆனால் இயேசு கதை அப்படி இல்லை மேலும் மதத்தின் வளர்ச்சி மிகமிக மெதுவாய் பெரும்பாலும் ரோமன் ஆட்சி கத்தி பலத்தால் தான் என்கையில் சுவிசேஷ கதை ஏடுகள் நம்பிக்கை தரவில்லை
ஆனால் இரண்டாம்  நூற்றாண்டினது சிறு துண்டுகள் இருக்கிறதாம் இவை கீழே படங்கள் உள்ளது ஒன்று கூட ஒரு வசனத்திம் கூட முழுமையாய் இல்லை தொடர்ச்சியாக நான்கு சொற்கள் கூட கிடையாது குறுக்கே பிரிக்கப்பட்ட ஏடு இவை எவ்விதத்திலும் ஆதாரம் ஆகாது

   பழமையான ஏடுகள் 127:  நாம் புஏ- வின் பெரும்பாலன ஏடுகள் 127, மிக பழமையானவை, இவை எங்கே உள்ளது எனும் இணையப் பக்கத்தைத்[i] தருகிறோம் . இவை 2ம் நூற்றண்டின் இறுதியில் இருந்து 8ம் நூற்றாண்டு வரையிலானது எனப் பட்டியல் உள்ளது, இந்த ஏடுகளில், எந்த NT புத்தகத்தில் எந்த அதிகாரம் உள்ளது என உள்ளது.இவற்றில் ஒரு ஏடு கூட 27                      புத்தகங்களின் ஒரு புத்தகத்தின் முழு ஏடு கிடையாது.

  இதில் மிகப் பழமையானது ஏடு பி.52 ஜான் ரைலேண்ட் ஏடாம்- 125 ஆனது என்கிறது. இந்த ஏடின் படம் கீழே ; அது பற்றிய இணைப்பும் தருகிறோம்.
  
ஒரு கடன் அட்டையினை குறுக்கில் கிழித்த அளவு, முழுமையாக ஒரு வசனம்                                                                                                                         
  கூடக் கிடையாது. இந்த ஏட்டின் காலம் பற்றி கருத்து ஒற்றுமை இல்லையாம்,                       தற்போதைய எழுத்தியல் ஆய்வு 150 வரை தள்ளி செல்கிறதாம்

http://en.wikipedia.org/wiki/Rylands_Library_Papyrus_P52
 Although Rylands  is generally accepted as the earliest extant record of a canonical New Testament text, the dating of the papyrus is by no means the subject of consensus among scholars. The style of the script is Hadrianic,which would suggest a most probable date somewhere between 117 CE and 138 CE. But the difficulty of fixing the date of a fragment based solely onpaleographic evidence allows a much wider range, potentially extending from before 100 CE past 150 CE.//

 இதற்கு அடுத்தது ஆக்ஸ்ரைன்கஸ் ஏடு இதன் காலம் 150 – 200 எனப் படுகிறது.
 
  
http://en.wik ipedia.org/wiki/Papyrus_90     http://en.wikipedia.org/wiki/Papyrus_104

 இவை தான் 2ம் நூற்றாண்டின் மிக முக்கிய ஏடுகள்
இந்த ஏடுகள் பைபிளிற்கு என்பதால் இப்படி பிரபலமாகச் சொல்லப் படுகிறது, வேறு புத்தகமாக இருந்தால் இவை நிராகரிக்கப்பட்டு இருக்கும். இவை சுவியைப் பிரதி எடுக்கத் தான் என்பதற்கு ஆதாரம் கிடையாது, ஞாயிறு போதனைக்கு தயார் செய்த குறிப்பினதாகவும் இருக்கலாம். இந்த ஏடுகள் எந்த விதத்திலும் பைபிளிற்கு நம்பகத்தன்மை தரவில்லை.

சர்ச்சில் உள்ளோர்- மதம் மாற்றப் பட்டோர் பெரும்பாலும் கல்வி அறிவு- வசதி இல்லாதோர்  என பவுல்[ii] தெளிவாய் கூறுவார். 3- 5% மட்டுமே எழுதப் படிக்க தெரிந்த சமுதாயத்தில் - அதில் கீழ்நிலையில் உள்ளவர்கள் மட்டும் சேர்ந்த சர்ச்சில் இவை வெறுமனே வைத்திருக்கவே. 16ம் நுற்றாண்டுக்கு முன் பைபிளை மக்களிடம் தரக்கூடாது என்பது சர்ச் கொள்கை.  பாதிரி திண்டேல் பைபிளை ஆங்கிலத்தில் பதிப்பிட்ட பிரதிகளை அழித்து, திண்டேலை கிறிஸ்துவ சர்ச் உயிரோடு சிலுவையில் எரித்து கொன்றது.

நாம் இத்தனை பிரதிகள் என்பதைவிடவும் பார்க்க வேண்டியது சொல்லப்பட்ட விஷயங்களை உறுதிப் படுத்தும் தன்மை உள்ள ஏடுகள் என்பது  வாரலாற்று தன்மைகள் இல்லாமையை காணலாம்

300க்கும் மேற்பட்ட நடுநிலை அறிஞர்கள், மூல சுவிகள் காப்பாற்றப் படவில்லை, வேண்டும்படி மாற்றி உள்ளனர் எனத் தெளிவாய் ஏற்கின்றனர். ஹாவர்டு பல்கலைக் கழக கிறிஸ்துவ தெய்வீகப் பள்ளித் தலைவர் தன் நூலில் கூறுவது, உள்ள அனைத்தையும் கொண்டு பெரும்பாலானோர் ஏற்கும் திருத்தம் எல்லாம் செய்தாலும் இரண்டாம் நுற்றாண்டு இறுதிப் பிரதியைத் தான் நாம் அடையலாம், இம்மாதிரி கதைகள் ஆரம்ப காலத்தில் தான் மாற்றம் வேகமாகப் பெருகும் 3ம் நுற்றாண்டு அல்லது 10 அல்லது 16 என்பதில்னால் பயன் இல்லை, நாம் கீழே சில உதாரணம் கொண்டே பார்ப்போம்.

திருத்தங்கள் மாற்றங்கள் ஆரம்பத்திலே வேகமாய் நிகழும் என்பதை நாம்  சுவிசேஷக் கதைகள் அமைப்பிலே பார்க்கலாம், மாற்கு கதையைத் தழுவி மத்தேயு பல வரலாற்று குறிப்பை மாற்றினார், ஏசு யூத இனவெறியராய் கடவுளின் பிள்ளைகளை நாய் எனக் கீழ்த்தரமாய் பேசியதை லூக்க நீக்கிவிட்டு மாற்கின் ஏசுவின் தன்மைக்கு சற்றும் பொருத்தமில்லா நல்ல சமாரியன் என ஒரு கதையை நுழைத்துள்ளார்.
b.  
நூல் உள்ளே கதைகள் தன்மை (INTERNAL EVIDENCE TEST) சோதனை 
 ஆய்வுக்கு உள்ள பழைய புத்தகம் நேர்மையானது என்பதை ஏற்றே ஆக வேண்டும்- அந்த புத்தகத்தில் முரணான மாறுபாடுகளோ, தெரிந்தபடியான தவறுகள் இருக்கக் கூடாது[iii].
 ஏசு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாட்கள்-  தெரியாது.
மாற்கு சுவிசேஷக் கதை முதலில்  புனையப்பட்டது; அதன் அடிப்படையை வைத்து மற்ற சுவிசேஷங்களும் புனையப் பட்டது என அறிஞர்கள் ஆய்வு நிரூபித்துள்ளது.
மாற்கு கதை -இயேசு சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு பெரும்பாலும் 7-8 மாதங்கள்-முழுமையும் கலிலேயாவில் தான் என்கிறது; கலிலேயாவிலிருந்து யோவான் ஸ்நானகன் இடம் வந்து (கூடாரப் பண்டிகைக்காக யூதேயா வந்தார் எனில் செப்டம்பர் மாதம்) பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிட; ஸ்நானகன் கைதாகிட கலிலேயோ திரும்பி அங்கே சீடர்களை சேர்த்து இயங்குகிறார். அடுத்து வந்த பஸ்கா பண்டிகை பண்டிகையின்போது யூத மத நம்பிக்கைப்படி இஸ்ரேலிற்கான தெய்வம் யாவே-கர்த்தர் ஒரே இடமான உள்ள ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை பலி கொடுக்க வந்தபோது (கடைசி வாரம்) கைதாகி ரோமன் கிரிமினலாக மரணமானார் என்பது கதை முழு இயக்கமும் கலிலேயாவில் தான். மத்தேயு லூக்கா சுவிசேஷ கதைகளும் இதையே சொல்கின்றன.
நான்காவது சுவி என்னும் யோவான்  2ம்  நூற்றாண்டில்  வரைந்தது சொல்லும்  கதைப்படி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடமும் (மூன்று  முறை பஸ்கா பண்டிகைக்கு  ஜெருசலேம் வந்தமை உள்ளதால்) மேலும் சில நாட்களும் என்கிறது. , கடைசி வருடம் ஏசு யூதேயாவிலேயே தான் கூடாரப் பண்டிகை (செப்டம்பர்), மறு அர்ப்பணிப்பு பண்டிகை (டிசம்பர்) பின் பஸ்கா (ஏப்ரல்)  எனக் கடைசி எட்டு மாதங்கள் யூதேயாவில் கழிந்தது.ஏசு சீடரோடு இயங்கும் போது ஒரு முறை  யோவன் ஞானஸ்நானகர் வழியில் வருவதாக ஒரு சம்பவம். அதாவது ஏசு சீடர் சேர்த்து இயக்கம் ஆரம்பித்தபின்பு தான் யோவான் கைது ஆனார் என்கிறது.
இதை பைபிளியல் அறிஞர்[iv] ஹன்டர் தெளிவாக உறுதி செய்கிறார்.- மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுவதும் கலிலேயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலேயா யூதேயா என மாறிமாறி முதல் 6 அத்தியாயங்களும்; 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
மாற்கு சுவியின் 
பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் [v] என்ற தன் நூலில் – “ஒத்த கதை அமைப்பு சுவிசேஷங்கள் இயேசு இயங்கியது கலிலியோவின் என்கிறது யோவான் சுவி ஜெருசலேமை  ஒட்டியே என்கிறது என்கிறார்சொல்லுகிறார், 
கலிலேயாவை  ஆண்டது ஏரோது, யூதேயாவை ஆண்டது ரோமன் ஆட்சியில், எதற்காக மாற்கு மத்தேயூ லூக்கா மூன்று சுவிகளும் கடைசி 7 – 8 மாதங்கள் யூதேயவில் உள்ளதை சொல்லவில்லை. வேறு அரசியல் காரணம் உண்டா தெரியாது. ஆனால் ஏசு படி
லூக்கா 16:10 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனா யிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே   இருப்பான்.
யூதாசு மரணம் எவ்வாறு?
மத்தேயு சுவிசேஷக் கதையில்[vi] ஏசு கைதாகிட யூதாசு மனம் வருந்து தான் பெற்ற முப்பது வெள்ளிக் காசுகளை யூதப் பாதிரிகளிடம் திரிப்பித் தர முயன்று தூக்கி எறிந்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை மரணம் எனக் கதை.

லூக்கா சுவிசேஷக் கதாசிரியர் இரண்டாவது நூல் அப்போஸ்தலர் நடபடிகள்படி [vii]ஏசு மரணமடைந்த பின்னர் யூதப் பாதிரிகள் தந்த பணத்தில் ஒரு நிலைம் வாங்கி அந்த நிலத்தீல் உடல் பலூன் போலே ஊதி வெடித்தது எனக் கதை.
ஒருவர் ஒரு முறை தான் மரணம் அடைய முடியும்

ஏசு யார்?
மத்தேயுவின்படி ஏசுவின் தந்தை பெதெலஹேமை சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 40வது தலைமுறை)
லூக்காவின் சுவி கதைப்படி ஏசுவின் தந்தை நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் (ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறை)
மத்தேயுவின் ஏசு பெரிய ஏரோதின் மரணத்திற்கு 2 வருடம் முன்பு, அதாவது பொ.மு. 6ல் பிறந்திறக்கலாம்.
லூக்காவின் சுவி கதைப்படி ஏசு, ரோமன் ஆட்சியின் கீழாக சிரியா கவர்னர் கிரேனியூ கீழ் யூதேயா வந்த போது மக்கள் திகை கணக்கெடுப்பின்போது அதாவது, பொ.ஆ. 8ல் பிறந்திருக்கலாம்.
ஏசுவின் மரணம் முதல் சுவி மாற்கின்படி, பஸ்கா பலியை முதல் நாள் தந்திட பண்டிகை அன்று, 4வது சுவிபடி, பஸ்காவிற்கு முந்தைய நாள் அதாவது பலி தரும் நாள். இந்தக் குழப்பத்தால் இன்று வரை ஏசு இறந்த வருடம் எது, பிறந்த வருடம் எது எதிலும் தெளிவு கிடையாது. இது போலே மேலும் 50க்கும் அதிகமான முரண்பாடுகள், இவற்றை அடுத்தக் கட்டுரையில் (சுவிசேஷம் உருவான கதை) காணலாம்
3. நூல் கதைகள் வெளிப்புற(EXTERNAL EVIDENCE) ஆய்வின் சோதனை
மத்தேயு சுவியில் கண்டால்
மத்தேயு 2:21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் ஏரோது  அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.  23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ‘ நசரேயன் என அழைக்கப்படுவார் என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
இப்படி ஒரு வசனம் ஏன் நாசரேத் என்னும் சொல்லே பழைய ஏற்பாட்டில் [viii]கிடையாது. தீர்க்கம் நிறைவேறியதாம்.
யூதேயாவில் ஏரோது  அர்க்கெலா  ஆட்சி செய்தார் எனில் கலிலேயாவை[ix] ஆண்டதும் ஏரோது மகன் ஏரோது அந்திப்ப்பா தான்  காரணமும் பொருந்தவில்லை.
 இது இஸ்ரேலின் நாடு அமைப்பு, புதை பொருள் ஆய்வு முடிவுகள் இவை புதிய ஏற்பாட்டோடு பொருந்துகிறதா எனப் பார்ப்பதாம்.
நாசரேத்தில் இயேசு புறக்கணிக்கப்படுதல் (மத் 13:53 – 58; மாற் 6:1 – 6)
லூக்கா 4:16 16 தான் வளர்ந்த இடமாகிய நாசரேத்திற்கு இயேசு பயணம் செய்தார். யூதர்களின் ஓய்வு நாளில் அவர் வழக்கம் போல் ஜெப ஆலயத்திற்குச் சென்று வாசிப்பதற்காக எழுந்து நின்றார். 
28 ஜெப ஆலயத்தில் உள்ள அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகமிகக் கோபம் அடைந்தனர்.   29 அம்மக்கள் எழுந்து இயேசுவை நகரத்தில் இருந்து வெளியேறும்படியாகக் கட்டாயப்படுத்தினர். அவர்கள் நகரம் ஒரு மலையின்மேல் நிர்மாணிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இயேசுவை மலையின் விளிம்புக்குக் கொண்டு வந்தனர். விளிம்பிலிருந்து அவரைத் தள்ளிவிட அவர்கள் முனைந்தார்கள். 30 ஆனால் இயேசு அவர்களுக்கு நடுவே நடந்து, அங்கிருந்து சென்றுவிட்டார்.
லூக்காவின் சுவியில் நாசரேத்து மலைசரிவில் இருக்கும் நகரம். அங்கு யூத ஜெபக் கூடத்தில் ஏசுவை வைத்து ஒரு கதை சம்பவம் பற்றி கூறுகிறார். நாசரேத்து என இன்று காட்டப்படும் ஊர் மலை சரிவில் இல்லை, சற்று தள்ளி காட்டப்படும் ஊரில் அது ஒரு சிறு கிராமம் எனும் அளவில் 50-70 குடும்பம் கொண்டு இருந்திருக்கலாம் என வாடிகன் கட்டுப்பாட்டில் அவ்வூர் தொல்லியலை வைத்துக் கொண்டு ஆரவாரமாய் செய்திகள் பரப்பினர், கூறிய எவையும் அங்கு முதல் நூற்றாண்டினை சேர்ந்தது இல்லை. கார்பன் 14 முறையில் இன்று வரை எந்த பொருளும்[x] அந்த தள்ளி உள்ள ஊரிலும் இல்லை.
நாசரேத் கதை முழுதும் கட்டுக் கதை. நாசரேத்தி அகழ்வு ஆய்வ்களை சரியானபடி விஞ்ஞான ஆய்வு பற்றிய ஒரு வலை இதோ

 ஏசுவிற்கு குறைந்தபட்ச ஆதாரம் என முதல் நூற்றாண்டின் கடைசி காலத்தில் எழுதப்பட்டனதான யோசிபஸ் என்பவர் நூலாம், அதன்படி யோவான் ஞானஸ்நானகர் மரணம் பொ.கா.36ல் என்கிறது.
யோசிபஸ்  இணைய தளம் சொல்வது John the Baptist and Josephus - by G. J. Goldberg

He states that the quarrel with Aretas sprang up "about the time" (Ant. 18.5.1. 109) that Herod's brother Philip died in 34 CE (Ant. 18.4.6 106).      During this time Herod's brother Agrippa had gone to Rome "a year before the death of Tiberius" (Ant18.5.3 126), which places Agrippas's departure in 36 CE.     Soon after the battle, the Syrian commander Vitellius was ordered by Tiberius to attack Aretas, whereupon Vitellius marched through Judea with his army, pausing in Jerusalem to placate the Jews and to sacrifice at a festival (probably Passover). On the fourth day of his stay in Jerusalem he learned of the death of Tiberius, which had occurred on March 16 37 CE (and it could have taken up to a month for Jerusalem to get the news). This puts the battle in the winter of 36/37 CE.     Vitellius' action against Aretas must have occurred between his action against the Parthians, under Tiberius' orders, and the death of Tiberius. The Parthian war occurred in 35 and 36 CE, as indicated both by Josephus and by the Roman historians Tacitus and Suetonius. (Herod the Tetrarch assisted Vitellius in negotiations between Tiberius and the Parthian king.)

சீசருக்கு வரி செலுத்துதல்- ஏசு சொன்னதும் (மத் 22:15 – 22; லூக் 20:20 – 26) 
மாற்கு12:13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும் என்றார்.16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி,  சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
 தெனாரியம் காசு ஏசு காலத்தில் யூதேயாவில்  புழக்கத்தில்  வரவே இல்லை(இணைப்பு)
denarius featuring Tiberius. The inscription on a denarius of the period reads Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs (“Caesar Augustus Tiberius, son of the Divine Augustus“).
The coin   Main article: Tribute penny
The text identifies the coin as a δηνάριον dēnarion,[1] and it is usually thought that the coin was a Roman denarius with the head of Tiberius. The coin is also called the “tribute penny.” The inscription reads “Ti[berivs] Caesar Divi Avg[vsti] F[ilivs] Avgvstvs” (“Caesar Augustus Tiberius, son of the Divine Augustus”). The reverse shows a seated female, usually identified as Livia depicted as Pax.[2]
However, it has been suggested that denarii were not in common circulation in Judaea during Jesus’ lifetime and that the coin may have instead been an Antiochan tetradrachm bearing the head of Tiberius, with Augustus on the reverse.
 அ) சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு வரலாற்றுஞானம் இல்லை. 
ஆ) இயேசு வாழ்ந்த பகுதிகளைக் குறித்த ஞானம் சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு  இல்லை
நடு நிலையாக தேடுவோருக்கு பைபிளின் பழைய ஏடுகளோ, இருக்கும் முரண்பாடுகளும் வரலாற்று பிழைகளும் புதிய ஏற்பாடு சிறிதும் நம்பிக்கைக்கும் உரியது இல்லை எனபது தெளிவாகிறது.  

யோவான் மரணம் எப்போது?
ஏரோது இரண்டாவது மணமாக ஏரொதியாளை மாற்கு சுவிபடி பிலிப்பின் மனைவியை  மணம் செய்வதை கேலி பேசிட கைது செய்ததாய் கதை. ஏரொதியாள் உண்மையில் 2ம்-ஏரோது எனப்படும் மன்னன் மனைவி; பிலிப்பு மனைவி அல்ல.
சுவிசேஷக் கதைகள்படி யோவான் யூதேயாவில் தான் தன் இயக்கம் நடத்தினார், ஆனால் கலிலேயாவை ஆண்ட ஏரோது கைது செய்து மரண தண்டனையினால் கொன்றார் எனவும் கதை.
ஸ்நானகர் கைதிற்கு பிலிப்பு மனைவியை[xi] மணப்பதை எதிர்த்தார் எனப்து மட்டுமே என மாற்கு கதை சொல்ல, லூக்கா அத்தோடு ஏரோது செய்த பல தீய செயல்களையும்[xii] யோவான் கண்டித்தார் அதனால் எனச் சேர்க்கவும் செய்கிறார், பிலிப்பு எனும் பெயரையும் நீக்கி விட்டார்.
ஏரோது அந்திபாஸ் அண்மை நாடு நபாடிய மன்னன் மகள் பசெல்லிஸ் மணம் புரிந்தவர்; நபாட்டிய அரசன் தன் மகள் பசெல்லிஸை விவாகரத்து செய்தது கண்டு, அவர் போர் 36ல் தொடுக்க தோல்வி அடைந்தான். யோவான்ஸ்நானான் பற்றி முதல் நூற்றாண்டு இறுதியில் எழுதிய யூத ஆசிரியரின் யோசிபஸ்  யூதர்களின் தொன்மைநூலின் 18ம் பிரிவில் உள்ளது, அதை அப்படியே 3ம் நூற்றாண்டில் ஓரிகன் பாதிரி எடுத்து பயன்படுத்தியும் உள்ளார். இதன்படி அரேபிய  நபாட்டிய அரசன் அரெடஸ் தொடுத்த போரில் பொகா.36ல் ஏரோது தோல்வி அடைந்தார் சிறிது காலத்திற்கு (சிலமாதம் முன்பு) முன்பு தான் அனியாயமாய் யோவானைக் கைது செய்து மரணதண்டனையில் கொன்றாரே அதற்கு இது தணடனை என்பதாக மக்கள் பேசிக் கொண்டனர் என யோசிபஸ் கூறினர்.
ஸ்நானகர் மரணம் 35 அல்லது 36ல் இருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர். எப்படி கைதிற்கு அப்புறம் தான் துவக்கம் எனச் சொன்னது தவறோ அது போலே ஏசு இறந்து இரண்டு தலைமுறை பின்பு எழுதபட்ட  சுவிகதைகள் மிகவும் பிரபலமான யோவான் ஏசுவை ஸ்நானகர் ஏற்றார் என செய்தல் தங்கள் மதம் மாற்ற உதவியாய் இருக்கும் என்றிட சில தவறான புரிதலில் யோவான் மரணத்தை முன் தள்ளி இருக்கலாம் என்பது வரலாற்று அறிஞர் கருத்து.


[ii] 1 Corinthians 1:26
[iii] “One must to the claims of the document under analysis, and not assume fraud or error unless the author disqualified himself by contradictions or known factual inaccuracies”. John W. Montegomery
[iv] If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.
The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) 
Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
[v] “Where as Synoptic record most of Jesus ministry is located in Galilee,John place most of it in Jerusalem and its neighbourhood.” – Page-27 – THE REAL JESUS.
[vi] மத்தேயு 27:3 அதன்பின் யேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் முப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, 27.4″பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்என்றான். அதற்கு அவர்கள்,”அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே ¡ர்த்துக்கொள்என்றார்கள். 27.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். 27.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து,”ஆது ஆரத்தத்திற்கான விலையாதலால் ஆதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்லஎன்று சொல்லி, 27.7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். 27.8 ஆதனால்தான் அந்நிலம்ஆரத்த நிலம்என ஆன்றுவரை அழைக்கப்படுகிறது. 
[vii] அப்போஸ்தலர் நடபடிகள் (லூக்கா) 1:17யூதாசு நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான். 18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ வயிறு வெடித்து குடலெல்லாம் சிதறிப்போயின. ஆது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு ரத்தநிலம்என்பது பொருள்.
[viii] The nature of Matthew’s Pesher is best illustrated by 2:23, which states that Jesus settled down in Nazareth  “that what was spoken by the Prophets might be fulfilled, ” namely “HE” SHOULD BE CALLED A NAZARENE”; now here is the Old Testament we do not have such a statement.
Page -16; K.Luke; Companion to New Testament.
[ix] லூக்கா 3:1
 Nazareth is not mentioned in pre-Christian texts and appears in many different Greek forms in the New Testament. There is no consensus regarding the origin of the name.
James F. Strange, an American archaeologist, notes: “Nazareth is not mentioned in ancient Jewish sources earlier than the third century AD. This likely reflects its lack of prominence both in Galilee and in Judaea.  Strange originally calculated the population of Nazareth at the time of Christ to be “roughly 1,600 to 2,000 people” but, in a subsequent publication, revised this figure down to “a maximum of about 480.”[40] In 2009 Israeli archaeologist Yardenna Alexandre excavated archaeological remains in Nazareth that might date to the time of Jesus in the early Roman period. Alexandre told reporters, “The discovery is of the utmost importance since it reveals for the very first time a house from the Jewish village of Nazareth.”
From the following  verse in the Gospel of Luke:[And they led Jesus] to the brow of the hill on which their city was built, that they might throw him down headlong.[Lk. 4:29]
The Gospel of Luke suggests that ancient Nazareth was built on the hillside. Historic Nazareth was essentially constructed in the valley; the windy hilltops in the vicinity have only been occupied since the construction of Nazareth Illit in 1957. From the ninth century CE tradition associated Christ’s evasion of the attempt on his life to the ‘Hill of the Leap’ (Jabal al-Qafza) overlooking the Jezreel Plain, some 3 km (2 mi) south of Nazareth.

[xi] மாற்கு 6:17-20

[xii] லூக்கா 3:19 

No comments:

Post a Comment

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...