Thursday, October 15, 2026

குலசை பள்ளி மாணவர்கள் நவராத்திரி காப்பு கயிறை அறுத்த கிறிஸ்துவ மதவெறி தலைமை ஆசிரியர் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் உள்ள சண்முகசுந்தரம் நாடம் மேல்நிலைப் பள்ளியில், குலசை முத்தாரம்மன் கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து, காப்புக் கயிறு அணிந்திருந்த மாணவர்களின் கயிற்றைத் தலைமை ஆசிரியர் பிலிப் எமர்சன் ரஞ்சித் சிங் அறுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் பள்ளி முன்பு திரண்டனர். தலைமை ஆசிரியருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அம்மன் பாடல்களைப் பாடியபடி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த ஆத்தூர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையே, தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, 500-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் ஆத்தூர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தின்போது, போலீசார் போராட்டக்காரர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமை ஆசிரியரைச் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்க அறிவுறுத்துவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தலைமை ஆசிரியர் ரஞ்சித் சிங் சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இருப்பினும், தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் எமர்சன் ரஞ்சித் சிங் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவரின் மாலை கழற்றப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Aphrodite’s Drape

We specialize in customizing wedding wardrobes, kids’ wear, maternity outfits, theme attire, and uniforms.Bringing designer elegance to ever...