பருவமழை வருது - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு - உண்டியல், தேர், கோபுரம் பத்திரம் - அறநிலையத்துறை ஆணையர் போட்ட 17 அதிரடி கட்டளைகள் என்ன?! https://x.com/sureshkalipandi/status/2112505403854709210
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்கள் மற்றும் திருக்கோயில் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 17 முக்கிய உத்தரவுகள் என்ன? 1. கோயில் வளாகம் பளிச்: திருக்கோயில்களின் மேற்கூரைகள், திருக்கோபுரங்களில் வடிகால்கள், மழைநீர் வடிகால்கள் போன்றவற்றை அடைப்புகள் ஏதுமில்லாமல் அவ்வப்போது சரிபார்த்து மழைநீர் எளிதில் வடியும் வகையில் சரி செய்ய வேண்டும். 2. மின்சாரத்திற்கு ஆப்பு இல்லை: மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் மழைநீரை வெளியேற்றும் வகையில் மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 3. வெளிச்சம் முக்கியம்: திருக்கோயில் மூலஸ்தானம், பிரகாரங்கள் மற்றும் வளாகங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனுக்குடன் மின் மோட்டார் கொண்டு அப்புறப்படுத்தி திருக்கோயிலை தூய்மையாக பராமரிக்க வேண்டும். 4. ஷாக் அடிக்காமல் பார்த்துக்கோங்க: மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் என்பதால் மின்கசிவு ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 5-6. ஆவணங்கள் பத்திரம்: கோயிலின் கோரங்கள் மற்றும் உபமான கட்டிடங்களின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இடிதாங்கிகள் சரியாக செயல்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும். அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள் மழைநீரில் சேதமடையாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். 7-8. சாமி சிலைகளுக்கு பாதுகாப்பு: திருத்தேர், வாகனங்கள் போன்றவைகள் மழையினால் பாதிக்காத வகையில் உரிய மேற்கூரையின் கீழ் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தேர் கொட்டகையில் போதுமான தடுப்புகள் பிரிந்து விழாத வகையில் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். 9-10. மரம் விழுந்தா?: மழை, அதிகமான காற்றினால் மரங்கள் முறிந்து விழும் நிலையில் அதை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோசாலைகளில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் போதுமான அளவில் இருப்பை வைத்துக்கொள்ள வேண்டும். 11-13. தண்ணீர், உண்டியல் பாதுகாப்பு: மழைக்காலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது மின்தடை ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தேவையான அளவு குடிநீரை கையிருப்பு வைத்தல் வேண்டும். உண்டியல்கள் மழைநீரால் பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வெளிப்பிரகாரத்தில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டு இருப்பின் அவற்றை பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்க வேண்டும். 14-15. பிரசாதம், கட்டுமான பணி: அன்னதானம் மற்றும் பிரசாதம் தயார் செய்திட தேவையான உணவுப்பொருட்களை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும். மழைக்காலத்தில் திருப்பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் திருக்கோயில்களில் மண் தோண்டும் (Earthwork) பணிகள் நடைபெறும் இடங்கள், திருக்கோயில் மதில்சுவர்கள் மற்றும் இதர கட்டுமானங்கள் பழுதடைந்து இடியக்கூடிய அபாயம் இருக்கும். பகுதிகள் அருகில் பத்தக்கோள், பணியாளர்களோ செல்லாமல் தவிர்க்க அறிவிப்பு பலகைகளும், தடுப்புகளையும் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும். 16-17. நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல்: திருக்குளத்திற்கு நீர் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்பினை சரிசெய்து மழை நீர் எளிதில் வெளியேறும் வகையில் நீர்ப்பாதைகள் சரிசெய்யப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் வானிலை மையத்தினால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..(Historical & Theological view based on International University researches)
Subscribe to:
Post Comments (Atom)
பருவமழை வருது - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் HRCE ஆணையர் போட்ட 17 அதிரடி உத்தரவு
பருவமழை வருது - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு - உண்டியல், தேர், கோபுரம் பத்திரம் - அறநிலையத்துறை ஆணையர் ...
No comments:
Post a Comment