Thursday, October 15, 2026

Zee தமிழ் வர்த்தக சூழச்சியும் - அரைபிய முஸ்லிம் மதவெறி கூவல்கள் - நயினார் கண்டிப்பு

 கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது!



Zee தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விடுப்பதை ஆளும்
அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ பக்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர். "கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம். அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது.


எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு.
அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Aphrodite’s Drape

We specialize in customizing wedding wardrobes, kids’ wear, maternity outfits, theme attire, and uniforms.Bringing designer elegance to ever...