Monday, October 8, 2012

இயேசு கிறிஸ்து ஒரு பொய்யரே?

ஞானஸ்நானி யோவான் பிரபலாமானவர், அவரைப் பற்றி ஒரு சம்பவம்
 

இயேசுவின் அதிகாரத்திற்குச் சவால்
(மத் 21:23 - 27; லூக் 20:1 - 8)
மாற்கு11:27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,28 ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டனர்.29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.30 திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் ' என்றார்.31அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார். எனவே ' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள்.32 ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.33 எனவே, அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ' என்றார்.

    
 மத்தேயு 17:10 அப்பொழுது சீடர்கள் அவரிடம், ' எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி? ' என்று கேட்டார்கள்.11 அவர் மறுமொழியாக, ' எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ″ எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள் 'என்றார்.13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.



  
யோவான் 1:19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் திருமுழுக்கு யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார்.' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார். 

  
ஏசு பாவமன்னிப்பு அதிசயம் பெற்ற போது ஆவி புறா வடிவில் வந்தது பார்த்து யோவான் தெரிந்து கொண்டதாக இங்கே உள்ளது.
யோவான்1:28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
ஆனால் மத்தேயுவோ ஏசுவைப் பார்த்த உடனே யோவான் கண்டு கொண்டதாகக் கதை.
மத்தேயு 3: 13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

ஆவி புறா வடிவில் வந்தது பார்த்து யோவான் தெரிந்து கொண்டாரா- ஏசுவைப் பார்த்த உடனே யோவான் கண்டு கொண்டரா இரண்டும் பொய் தானோ?

ஏன் எனில் சிறையில் இருந்து சீடர்களை அனுப்பிக் கேட்டதாகக் கதை.

மத்தேயு 11: 2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.


   


சரி யோவான் தான் எலியா என்று சொல்லியிருந்தால், எலியா வரவேண்டியது உலக முடிவில் தான்.

மலாக்கி4: .4ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.
 ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார். பவுல் அதை சற்றே மாற்றி - இரண்டாவது வருகை தன் வாழ்நாளில் என்றார். 
இரண்டுமே நடக்கவில்லை எல்லாமே பொய்கள்.

3 comments:

  1. எலியா என்பது என்ன மொழி? எலோ எலோ என ஏசு கதறுவது யாரைக் குறித்து? அந்த சொல்தான் எலியாவா? ஏசு உலகம் அழியும் என எதிர்பார்த்தற்கான வசனம் உள்ளதா?

    ReplyDelete
  2. ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார். பவுல் அதை சற்றே மாற்றி - இரண்டாவது வருகை தன் வாழ்நாளில் என்றார்.
    இரண்டுமே நடக்கவில்லை எல்லாமே பொய்கள்.
    மிக அருமை.
    ஒவ்வொரு சுவிசேஷங்களையும் ஒப்பிட்டு முரண்பாடுகளை அருமையாக விளக்குகிறீர்கள். தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டுக் கொண்டே இருங்கள்.
    கிறிஸ்தவர்கள் 2000ல் உலகம் அழியும் என்றார்கள். அழியவில்லை. இப்போது உமாசங்கர் 2012 டிசம்பரில் அழியும் என்று பிரசங்கம் செய்வதாக கேள்வி. ஏசு இதோ வருகிறார் அதோ வருகிறார் என்கிறார்கள். ஆனால் ஏசு வரும் நாட்களில் பால் கொடுக்கிறவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஆபத்து ஏற்படுமாம். இங்குள்ள கிறிஸ்தவர்கள் சிந்திக்க ஆரம்பித்திருப்பதாக கருதுகிறென்.

    ReplyDelete
  3. சிவனடியார் ஊக்கத்திற்கு நன்றி.

    ஜெயன் - இஙே உங்களுக்கு பதில்
    http://pagadhu.blogspot.in/2012/11/1.html

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...