Saturday, October 27, 2012

இயேசு ஒரு யூத தீவிரவாதி தானே?

புதிய ஏற்பாடு புராணக் கதைகளைத் தவிர இயேசு என ஒரு நபர் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடையாது.
 
புதிய ஏற்பாடு புராணக் கதைகளை நேர்மையாய் ஆராய்ந்தால் -எழுதியவர்களுக்கு உண்மையான ஏசு பற்றி அறியாது- செவிவழி கதையையே புனைந்தனர் என்பது அறிஞர்கள் ஏற்பது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.


சுவிசேஷங்களின் தன்மையை உணர்ந்து, உண்மையிலேயே ஏசு வாழ்க்கையின் நம்பிக்கைக்குறியது என ஏற்கலாம் எனில்- ரோம் ஆட்சியின் கீழ் இஸ்ரேல்-யூதர்கள் அடிமைப்பட்டு இருந்தபோது, ரோமன் கவர்னர் பொந்தியூஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆய்தக் கலகம் செய்யும் போராளிகளுக்கான மரண தண்டனையான தூக்கு மரத்தில் தொங்கும் தண்டனை பெற்றார், என்பது மட்டுமே.
 

இயேசுவின் கைது நிகழ்ச்சியின் போது


 
மாற்கு14:45 யூதாசு  வந்ததும் உடனடியாக இயேசுவைஅவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
இந்தக் காது வெட்டுபவர் இயேசுவின் நெருங்கிய சீடர் பேதுரு என மற்ற சுவிகள் சொல்கின்றன.அப்போஸ்தலர்கள் ஆயுதம் ஏந்தியவர்கள் என்பது  தெளிவாகும்.


இயேசுவைக் கைது செய்தது யார்?
 

யோவான்18:2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள்.



முதலில் புனைந்த மாற்கும் அவர் கதையையே தொடர்ந்த மத்தேடுயுவும் லூக்காவும்- ரோமன் படைவீரர்கள், ஆயிரம் வீரர் தலைவர் என்பதை மறைத்தனர்.

ரோமன் ஆயிரம் வீரர் தலைவர்-படைவீரர்கள் யூத மதத் தலைவர்கள் ஆனைக்கு உட்பட்டவர் அல்ல, ரோமன் கவர்னர் பிலாத்து ஆணையில் தான் கைது செய்திருக்க வேண்டும்.

விசாரணையின்போது கூறப்பட்ட குற்றம்

 
லூக்கா 23:1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.

விசாரணையின்போது கூறப்பட்ட குற்றம்- நிருபிக்கப் பட்ட குற்றம் - தூக்குமரத்தில் தொங்கும்போது மேலே தொங்கவிடப்படும், அதை எழுதியது யார்


 
யோவான் 19:19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ' ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ' யூதரின் அரசன் நான் ' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.


கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன், ராஜா தாவீது பரம்பரையில் வந்தவன், ரோமினரை வெளியேற்ற வேண்டும் என்பது மட்டுமே.

சுவிசேஷக் கதாசிரியர்கள் இறந்த யூதப் போர் வீர மேசியாவை தெய்வமாக்கியதைத் தொடர்வோம்




2 comments:

  1. மீண்டும் துடிப்புடன் புதிய கட்டுரைகளை வழங்கும் தேவப்ரியாஜிக்கு நன்றி!
    விரைவில் புத்தக வடிவில் அளியுங்கள். மர்டாக் எனும் அமெரிக்கப் பெண்மணியும்
    நிறைய ஆராய்ச்சி நூல்கள் எழுதியுள்ளார்
    ( ஆச்சர்யமாக ஆச்சார்யா என்ற பெயரில் ).
    குறிப்பாக எகிப்திய - கிறிஸ்தவ தாக்கம் குறித்த Christ in Egypt : Horus - Christ connection என்ற நூல்.
    http://TruthBeKnown.com
    http://StellarHousePublishing.com

    ReplyDelete
  2. தேவப்ரியாஜி ! தங்களுடைய இடுகைகள் குறைந்து விட்டன. ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். விரைவாக , வாரம் ஒன்றாவது வெளியிடுங்கள்.

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா