Tuesday, October 9, 2012

இறுதித் தூதர் - கிறிஸ்து வந்து விட்டாரா?


 

யூதப் புராணக் கதைப்படியாக மேசியா- கிறிஸ்து என ஒருவர் பற்றி நேரடியான குறிப்பு ஏதுமே கிடையாது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு என்னும் கதையை அதீதமாக நம்பிய சிலபல மூட நம்பிக்கை யூதப் பிரிவினர், கிரேக்கரிடம் அடிமைப்பட்ட போது எதிர்பாரா திடீர் வெற்றி போன்றவையை - மெக்கபெயர் புத்தகம் வைத்து ரோமன் ஆட்சி இஸ்ரேலை அடிமைப் படுத்தியதை- உலக முடிவில் கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டை விரோதிகள் பிடிக்க கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை மீட்க ராஜா தாவிது பரம்பரையின் ஒரு வீரன் பிறந்து ரோமானியரை மீட்டு யூதர்களை சொர்கத்திற்கு அழைத்து செல்வார். இது தான் கிறிஸ்து- -இறுதி தூதர்.

இறந்த ஏசு ஞானஸ்நான யோவானை வரவேண்டிய எலியா என்றார்- வரவேண்டிய எலியா எப்போது வரவேண்டும்?

மத்தேயு 17:10 அப்பொழுது சீடர்கள் அவரிடம், ' எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி? ' என்று கேட்டார்கள்.11 அவர் மறுமொழியாக, ' எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ″ எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிட மகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள் 'என்றார்.13 திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.

  

1பேதுரு  1: .5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
1பேதுரு  1.20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.
1பேதுரு  4: 7எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

மலாக்கி4: .4ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர்எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.



இயேசு சீடர்களை முதலில் அனுப்பியபோது சொன்னதில் உள்ளவை
  

 மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள்மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 10: 27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் ' என்றார்.

  
இயேசு மக்களிடம் சொன்னவை, பவுலும் தன் வாழ்நாளில் உலக அழிவை கடிதங்களில் சொல்கிறார்.
மத்தேயு11:  12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசுவன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
உலக அழியும்போது மனுஷ குமாரன் என்னும் கிறிஸ்து வருகைக்கு முன் நடக்க வேண்டியவை, அவை அப்பொது வாழ்பவர் உள்ளபோதே நடக்கும்
  

 மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.
மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
கடைசி இறுதி இரவு விருந்தில் இயேசு
 
 மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.
கைதான பின் விசாரணையில் இயேசு
  
மாற்கு 14: 62 அதற்கு இயேசு,  நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
இயேசு இறந்து பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு காட்சி தந்த போது
  
யோவான்21: 0 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
சரி இறந்த ஏசுவைக் கடவுள் - கடவுள் மகன் என்கின்றனர், அவரே சொன்னது
யோவான்ன்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘ 
கிறிஸ்து வந்தால் அவரை ஏற்பவர் மரணம் அடைவது இல்லை, நேராக சொர்கம் செல்வர்.

1 comment:

  1. தேவப்ரியாஜி! இரு வாரங்களாக எந்த புதிய வெளியீடும் வரவில்லை. என்னவாயிற்று?

    ReplyDelete

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...