Sunday, November 25, 2012

இயேசுவின் ரத்தம் பாவமே தரும்

1யோவான்1:6 நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்: உண்மைக்கேற்ப வாழாதவராவோம்.7 மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.


  
ஆண்டவரின் திருவிருந்து
(மாற் 14:22 - 26; லூக் 22:15 - 20; 1கொரி 11:23 - 25)
மத்தேயு26:26 அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, ' இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல் என்றார்.27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ' இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் '
அவரவர் பாவங்களே ஒருவருக்கு வரும்.  இதைப் பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுன்கின்றன.
உபாகமம்: 24: 16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப்  பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.
jesus_feet
எரேமியா: 31:29 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். 30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.
004834
எசேக்கியேல்: 18:1.கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.
எசேக்கியேல்: 18:20.பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்
ஏசாயா: 3:10உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.
JesusSleighHellஇயேசு தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.
பவுல் தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.
பவுல் மரணத்திற்கு 50 ஆண்டு பின்னரான 4 வது சுவி கதாசிரியரும் அப்படியே.
யோவான் 21:22. அதற்கு இயேசு, நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப்பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும்,அவன் மரிப்பதில்லையன்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச்சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
raphael64இயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.
யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.
இயேசு, பவுல், 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் மரணமடைந்தார்கள்.
இயேசு உளறினாரா?
தன்னை மிகையாக எண்ணி கூறீனாரா?
4வது சுவி கதாசிரியர் புனைந்தாரா?
அவரும் இறந்தார். அவரவர் பாவத்திற்கு அவரவர் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்

இயேசுவின் கையினால் அவர் அப்பம் தர சாத்தான் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடருள் நுழைந்தாராம். 

      
யோவான்13:  
26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்.
எனவே ஏசுவை ஏற்றால் அனைத்து பாவங்களும் வரும்.

8 comments:

  1. நீங்கள் அங்கே இங்கே ஒரு பைபிள் தொடர்பிலா வசனம் எடுத்து போட்டு கதை கட்டுகிறீர்கள்.

    கிறிஸ்துவ மதம் 200 கோடி மக்கள் உலகம் எங்கும் ஏற்றுள்ளது, தினமும் வளர்வது கர்த்தர் கிருபையுடன்

    ReplyDelete
    Replies
    1. உலகைப் படைத்த ஏக இறைவனின் ஒரே மார்க்கம் அல்லாவுடையது, இறுதி தூதர் முகம்மது(சல்) அவர்களது தான்

      யோவான்16: 7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.
      13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
      14. அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
      15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

      இயேசுவும் தெளிவாக அவர் வருவதை சொல்லி உள்ளார்.
      முபாரக்

      Delete
    2. இங்கே இயேசு பரிசுத்த ஆவியானவரை பற்றி பேசுகிறார். நீங்கள் சொல்வது போல் எந்த மனிதனையும் குறித்து பேசவில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளே இருக்கும் பொழுது பாவத்தை குறித்து உங்களுக்கு கண்டித்து உணர்த்துவார். சத்திய வழியில் நடக்க உதவி செய்வார்

      அதுமட்டுமில்லை , நீங்கள் கூறும் நபிகள் எங்கே பாவாத்தை பற்றி பேசினார் அல்லது அதிலிருந்து விடுபடுவது பற்றி எங்கேயாவது சொல்லி இருக்கிறரா ? கொஞ்சம் விளக்குங்களேன்.

      எனுடைய ஈமெயில் முகவரி : dineshpaul@outlook.com

      Delete
  2. வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
    ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

    ReplyDelete
  3. Loosuthanamana viyakiyaanam.........

    ReplyDelete
  4. இயேசுவால் அன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை
    - அப்போஸ்தலர் 4:12

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே,

      இயேசு ஒரு பழைய ஏற்பாடுப் புராணக் கதைகள் அடிஅப்படையில் ஒரு பழமைவாத யூதர். இனவெறி கொண்டு, யூதர் அல்லாதவரை நாய் என கேவலமாக அருவருப்பாக சொல்லி தான் வெறுக்கத் தக்கவன் என நிருபித்தார்.

      உலகம் தன் வாழ் நாளில் அழியும் எனப் பார்த்து கடைசியில் என் கடவுளே! என்னை ஏன் கைவிட்டீர் என நம்பிக்கை இழ்ந்து புலம்பலில் இறந்தார்.

      விளக்கை ஏற்றுபவன் யாரும், கட்டில் அடியில் வைக்க மாட்டான், எனவே உயிர்த்து எழுந்தார் என்னும் கதையில் நடுநிலையாளர்/ எதிர்ப்பாளார் யாருக்கும் காட்சி தரவில்லை என்பதே இது முழு கட்டுக் கதை என்பதை நிருபிக்கும்.

      மேலும் என்னை உண்டால் மன்னாவை சாப்பிட்டவர் போல மரணம் அடைய மாட்டார்கள் என ஏசு சொன்னார் எனில், எப்படி மன்னா சாப்பிட்டவர் யாரும் இல்லையோ, ஏசுவை சாப்பிட்டவர் யாரும் இல்லை

      எனவே பைபிள்படியே ஏசு கதை வெற்று மூட நம்பிக்கை, பொய் கதை.

      Delete
    2. யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.

      பவுல், பேதுரு உட்பட யாருமே உயிரோடு இல்லையே.

      சற்றெனும் உண்மையாக யோசியுங்கள்.

      Delete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா