Saturday, November 10, 2012

இயேசு கிறிஸ்து பிறந்த வருடம் எது- தெரியாதே?

இயேசு எனப்படும் கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆயினும் சுவிசேஷங்கள் புனையும் கதைகளினைக் கொண்டு ஏசு பிறந்த வருடம் அறியப் பார்ப்போம்.
   
பொ.மு. முதல் நூற்றாண்டில் பெரிய ஏரோது இஸ்ரேலை ரோமிற்கு கீழாக ஆண்டு வந்தான். மரணம் பொ.மு. 4 இல்.
   

மத்தேயு 2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' 
மத்தேயு 2:16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

மத்தேயூ சுவி புனையும் கதைப்படி பெரிய ஏரோது காலத்தில் ஏசு பிறந்தார். ஏசு ஜோதிடர்கள் பெத்லஹெம் சென்று திரும்பாததால் 2 வயதுக் குழந்தைகளை கொன்றார் எனக் கதை. அதாவது ஏசு பொ.மு. 6 இல் பிறந்திருக்க வேண்டும்.
   
மத்தேயு 2: 19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலாயு தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. 
 மத்தேயுவின் ஜோசப் பெத்லகேமில் வாழ்ந்தவர், எகிப்து சென்று, பின் நாசரேத்து வந்ததாகக் கதை. நாசரேத்து எனும் ஊர் முதல் நூற்றாண்டில் இருந்தது இல்லை, மேசியா - நசரேயன் என்னும்படி ஒரு வாசகம் பழைய ஏற்பாட்டில் கிடையவே கிடையாது. மேலும் கலிலேயாவை ஆண்டது ஏரோது மகன் தான்.

பெரிய ஏரோது  மரணத்திற்குப் பின் நாடு பிரிக்கப்பட்டு மகன்கள் அர்க்கெலாயு  யூதேயா பகுதிக்கும், ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.

சரி லூக்கா புனையும் கதைக்கு வருவோம்.
    
லூக்கா 2:1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.
2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். 
6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
 

அர்க்கெலேயு கீழ் பெரும் புரட்சி ரோமிற்கு எதிராக கிழம்ப ரோம் யூதேயாவை தன் நேரடி கவர்னர் கீழ் பொ.கா. 6 இல் கொணர்ந்தது. சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராயும் யூதேயாவையும் ஆண்டான். அதன் பிறகு சென்சஸ் என்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கலிலேயாவின் ஜோசப் பெத்லஹெம் வந்து மாட்டுத்தொழுவத்தில் பிறப்பு. மக்கள் தொகை கணக்கெடுப்பு பொ.கா. 7 அல்லது 8 இல் நடந்தது.


மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜொசப் மகனாக ஏசு பொ.மு. 6இல் பிறந்தார்.

 லூக்கா கதைப்படி நாசரேத்தில் ஆழ்ந்த ஏலி மகன் ஜொசப் மகனாக ஏசு பொ.கா. 6இல் பிறந்தார்.


மத்தேயுவின் ஏசுவிற்கு 13- 14 வருடம் பின்பு லூக்காவின் இயேசு பிறந்தாராம்.

கதை நாயகர் இயேசுவை, தாவீது பரம்பரையினர் எனக் காட்ட மத்தேயு 1:1-144லிலும்லூக்கா 3:23-38லும் புனைந்து தரப் பட்டுள்ளது.

மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் மகனாக ஏசு பொ.மு. 6இல் பிறந்தார்.

இவர் ஆப்ராகாமிலிருந்து 41ஆவது தலைமுறை

 லூக்கா கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகனாக ஏசு பொ.கா. 6இல் பிறந்தார்.

இவர் ஆப்ராகாமிலிருந்து 57ஆவது தலைமுறை



  
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் மத்தேயுவின் 41ஆவது தலைமுறை யாக்கோபு மகன் பெத்லஹேமின்  ஜோசப் மகனான இயேசுவிற்கு 400 ஆண்டுகள் பின்பு லூக்காவின்  ஏலி மகன்  நாசரேத்தில் வாழ்ந்த ஜோசப்  மகனான ஏசு பிறந்து வாழ்ந்திருக்க வேண்டும்.



3 comments:

  1. குழப்பத்தின் மொத்த வடிவம் பைபிள் என்பது புரிகிறது. பைபிளில் தீர்க்க தரிசனங்கள், வாக்குத்தத்தங்கள் என்று கிறிஸ்தவர்கள் அடிக்கடி புல்லரிக்கின்றனர். அது குறித்தும் தங்கள் பாணியில் ஒரு பதிவு வெளியிடுங்களேன்.

    ReplyDelete
  2. வரலாற்றையே கி.பி. - கி.மு. எனப் பிரித்தவரை விமர்சிக்கும் இந்துத்வா வெறியனே? பரிசுத்த ஆவி உன்னை சும்மா விடாது

    ReplyDelete
  3. Pope Says Jesus Was Born Years Earlier Than Believed

    By Anugrah Kumar , Christian Post Contributor
    November 24, 2012|9:59 am
    The Christian calendar is based on a miscalculation, and Jesus was born several years earlier than commonly believed, Pope Benedict XVI argues in his new book, Jesus of Nazareth: The Infancy Narratives.
    "The calculation of the beginning of our calendar – based on the birth of Jesus – was made by Dionysius Exiguus, who made a mistake in his calculations by several years," says the 85-year-old pontiff in the book that was published Wednesday, weeks before Christmas.
    "The actual date of Jesus's birth was several years before," the pope argues in the book that has a print run of 1 million copies.
    Dionysius Exiguus, or Dennis the Small, was a 6th-century monk from Eastern Europe who is best known as the inventor of the Anno Domini (AD) era, which is used to number the years of both the Gregorian calendar and the Julian calendar.
    Several academics have made similar claims, but this is the first time that the pope has raised doubts over the date of the birth of Jesus.
    John Barton, Professor of the Interpretation of the Holy Scripture at Oriel College, Oxford University, said most academics believe that Jesus was born probably between 6BC and 4BC. "There is no reference to when he was born in the Bible – all we know is that he was born in the reign of Herod the Great, who died before 1AD," The Daily Telegraph quoted him as saying. "It's been surmised for a very long time that Jesus was born before 1AD – no one knows for sure."
    Follow us
    Benedict also claims in the book – which is being published in various languages spoken in Catholic countries including Italian, German, Croatian, French, English, Polish, Portuguese and Spanish – that while the traditional nativity scene always involve animals, there were no oxen, donkeys or other animals at Jesus' birth.
    With his latest book, which explores the Gospels of Matthew and Luke, Benedict completed his triology. His first book was about the public ministry of Jesus, and the second about his death. All three are published under his real name, Joseph Ratzinger.
    In the new book, the pope decries that many see God as limiting their freedom. "God himself is constantly regarded as a limitation placed on our freedom, that must be set aside if man is ever to be completely himself," he writes, adding, "God, with his truth, stands in opposition to man's manifold lies, his self-seeking and his pride. God is love."
    Benedict stresses on the uniqueness of Mary's "virgin birth" of Jesus. "Perhaps one could say that humanity's silent and confused dreams of a new beginning came true in this event – in a reality such that only God could create."
    Monsignor Philip Whitmore, the English translator, said the pope intends to bring out the "inner meaning" of the Gospel descriptions of Jesus' birth and childhood.
    "The pope helps us to understand the world where Jesus was born. Caesar brought peace to the Roman Empire, but this tiny child brought something much more wonderful: God's peace, eternal life, an end to sin and death," CNN quoted Whitmore as saying. "Anyone who's wondering why Christmas came to be such a great celebration in the West can find the answer right here. The pope explains how the birth of Jesus changed history forever."

    Read more at http://www.christianpost.com/news/pope-says-jesus-was-born-years-earlier-than-believed-85491/#r7ElTAK6Y1OHKhyT.99

    ReplyDelete

பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம்

  சர்ச்சு பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம் ப...