Sunday, November 18, 2012

இயேசு கதை வளர்ந்த விதம்-1

சுவிசேஷங்கள் இயேசு மரணத்திற்கு 40 - 70 வருடம் பின்பு இறந்த மனிதரை - இறை மனிதன்  தெய்வீகராகக் காட்ட புனையப் பட்டவை.
  
மாற்கு1:4 திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

  
பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற இயேசுவை சாத்தான் சோதித்தார் எனக் கதை.

மத்தேயு4:1 அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.2 அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.
இந்தக் கதை பழைய ஏற்பாட்டில் மோசே - எலியா வாழ்க்கையில் நடந்ததாக உள்ளதில் இருந்து சுட்டவை.
 
யாத்திராகமம்34:28 மோசே அங்கே நாற்பது பகலும் நாற்பது இரவும் ஆண்டவருடன் இருந்தார். அப்போது அவர் அப்பம் உண்ணவும் இல்லை: தண்ணீர் பருகவும் இல்லை. உடன்படிக்கையின் வார்த்தைகளான பத்துக் கட்டளைகளை அவர் பலகையின் மேல் எழுதினார்.
 1இராஜாக்கள்19:8அப்பொழுது எலியா  எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா,  நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.  

 
     
மொட்டை தலையர் என்ற குழந்தைகளை கொன்ற எலியா


முன்பு பழைய ஏற்பாட்டில் உள்ள பல கதைகளை ஏசு என்னும் கதை நாயகன் மேல் திணிக்கப் பட்டுள்ளது தொடர்ந்து காண்போம்.

யோவனிடம் ஞானஸ்நானம் பெற்றபின் பரிசுத்த ஆவி ஏசு மீது வர, வானிலிருந்து குரல் ஏசு- தேவகுமாரன் என்றது. இதை விட்டு விட்டீர்.

சாத்தான் தூக்கி செல்ல 40 நால் உணவு நீர் இல்லாது உபவாசம் இருந்தார். 
ஏசு தெய்வீகர் என்னும் இந்நிகழ்ச்சிகள் போல பழைய ஏற்பாட்டில் இருந்தால் தவறா? இதை சொல்ல நீர் யார்?



நண்பர் ரிச்சர்ட் நன்றி,  -விளக்கம் சேர்க்கப்பட்டது
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

சிறையில்  அடைக்கப்பட்ட யோவான் ஞானஸ்நானி தன் சீடர்களை அனுப்பி ஏசுவை- 
மத்தேயு 11:2 யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்

வரவேண்டிய யூதர்களின் அரசர் - ரோம் ஆட்சியை விரட்டி தாவீது நாற்காலியை மீட்பவர் தானா? என்றால் - முதலில் அதிசயங்கள் கதை சொல்லப்பட்ட அதிசயங்கள் பொய் என்பது தெளிவான உண்மையாகும். 
மேலும் மாற்கு யோவான் கைதிற்குப் பிறகு தான் ஏசு இயக்கம் என்பார். ஆனால் நான்காவது சுவியில் ஏசு சீடர்களுடன் செல்லும் போது யோவன் ஞானஸ்நானர் அங்கே இருப்பதாகக் கதை.
இயேசுவும் யோவானும்
யோவான்3:22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.
மாற்கு தெளிவாகப் பொய் சொன்னர் என்பதும் தெளிவு.
  
மத்தேயு 4:8 மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி,9 அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.

இப்படி ஒரு மலை- உலகில் உள்ள அனைத்து அரசுகள் பார்க்கும்படி இல்லவே இல்லையே?

மேலும் யூதேயாவில் 800 அடி உயர 3 மலைகளை இது தான் சாத்தான் கூட்டிச் சென்ற மலை எனப் புனைகின்றனார்.

இவையெல்லம் புனையப் பட்டவை என்பதற்கு வேறு காரணமே இல்லை. மேலும் வானத்தில் இருந்து வந்த குரல் ஒரு சுவியில் - ஏசுவிடம் நேரடியாக் பேசும் வேறு சுவியில் மக்களிடம் சொல்லும் அறிவிப்பாகா உள்ளது.
ஏசு இயக்கம் ஆரம்பித்து சீடர்கள் சேர்த்தார், இந்தக் கதைக்கு சாட்சிகளே கிடையாது. அனைத்தும் கற்பனை புனையல்கள்.

6 comments:

  1. ரோமன் ஆட்சியை எதிர்த்து உலகம் அழியப்போகிறது என நம்பியபடி வேண்டுமானல் ஏசு என ஒருவர் வாழ்ந்திருக்கலாம், நாம் உண்மையைத் தேடுவோம்.

    அர்விந்த் கோஷ், அபய் சரண், சிவனடியார்- வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
    பணிச்சுமையினால் சற்றே ஒதுங்கினேன். இனி உண்மை தேடும்பணி தொடரும்.

    ReplyDelete
  2. ஜெயன் நண்பரே- எலியா என்பவர் ஒரு தீர்க்கதரிசி பழைய ஏற்பாட்டில். அவர் ச்ய்த பல அதிசயங்கள் போன்றவை ஏசுவும் செய்ததாய் புனையப் பட்டுள்ளது இங்கே காணலாம்.

    //எலோ எலோ என ஏசு கதறுவது// எபிரேய மூல மொழியில் கடவுல் பெயர் எல்லோஹிம் அதனை யே எலோய் என்னை ஏன் கைவிட்டீர்? என நம்ப்பிக்கை இழந்து கடைசியாய் ஏசு சிலுவையில் புலம்பியதே

    ReplyDelete
  3. யோவனிடம் ஞானஸ்நானம் பெற்றபின் பரிசுத்த ஆவி ஏசு மீது வர, வானிலிருந்து குரல் ஏசு- தேவகுமாரன் என்றது. இதை விட்டு விட்டீர்.

    சாத்தான் தூக்கி செல்ல 40 நால் உணவு நீர் இல்லது உபவாசம் இர்ந்தார்.

    ஏசு தெய்வீகர் என்னும் இந்நிகழ்ச்சிகள் போல பழைய ஏற்பாட்டில் இருந்தால் தவறா? இதை சொல்ல நீர் யார்?

    ReplyDelete
  4. தேவப்ரியாஜி
    உங்கள் அளவுக்கு ஆழமாக என்னால் ஆராய முடியவில்லை. மேலோட்டமாகவே மனதில் படுவதை பதிகிறேன். தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. அபய்சரண்November 20, 2012 at 5:32 AM

    மீண்டும் சுறுசுறுப்புடன் களமிறங்கியுள்ள தேவப்ரியாஜிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ராஜா, அபய் - ஊக்கத்திற்கு நன்றி.
    ரிச்சர்ட் அவர்களே- யோவன் ஸ்நானர் ஏசுவை ஏற்கவே இல்லை என்பது அடுத்த தலைப்பு.
    உங்களுக்கு பதிலும் தரப்பட்டுள்ளது.

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...