Thursday, June 19, 2014

கர்த்தர் நாபலை கொலை செய்தார் - மனைவி அபிகாயில் தாவீதுக்கு

பழைய ஏற்பாடு எனும் எபிரேயப் புராணத்தின் மிக முக்கிய கதைப் பாத்திரம் தாவீது ராஜா.

 பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை 
தாவீது முதலில் நாட்டை பெஞ்சமின் ஜாதியைச் சேர்ந்த சவுல் ராஜா ஆண்டபோது, ஒரு எதிர் கும்பல் தலைவனாய் எழுந்து போராடியதாய் கதை. 

  

அந்த காலகட்டத்தில் மாகோன் என்னும் ஊரில் உள்ள கர்மேலில் நாபால் எனும் பணக்காரர் வாழ்ந்து வந்தார்.

தாவீதும் அபிகாயிலும்

1சாமுவேல்25:1...தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.3 அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்,வன் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலோபியன்.4 நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்ததிப்பதற்காகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.5 தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து. நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்து கூறுங்கள்.6 அவனை நோக்கி, உமக்கும், எம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!7 ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்றேன்! உம் இடையர்க்ள எம்மோடு இருந்தார்கள்: நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை: கர்மேலில் அவர்கள் இருந்த காலம் மெல்லாம் எதையும் இழக்கவில்லை.8 உம் பணியாளர்களை கேளும்: அவர்கள் உமக்கு சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கு உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க! எனக் கூறுங்கள் என்று சொல்லியனுப்பின9 தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றiயும் கூறிக் காத்திருந்தனர்.

ஒரு ரௌடியாக மாமூல் கேட்டு தாவீது ஆள் அனுப்புதலைக் காண்கிறோம்.

1சாமுவேல்25:10 நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.11 என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா? என்று பதிலளித்தான்.12 ஆதலால் தாவீதின் இளைஞர்கள் அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.

நாபால் பதில், மிகத் தெளிவாக என் தொழிலாளிக்கு நான் தருவேன், எங்கிருந்தோ வந்தவர்க்கு எதற்கு?

தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.

ஆனால் கதாசிரியர், தாவீது அங்கே நாபாலின் பண்ணைக்கு தாவீது  வீரர்கள் பாதுகாப்பு தந்ததாக ஒரு கதை இப்போது வருகிறது- நாபால் மனைவி அபிகாயிலிடம் சொல்லப்படுவதாக

1சாமுவேல்25:13 தாவீது தம் ஆள்களை நோக்கி, நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள், என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளை கட்டிக்கொண்டான்: தாவீதும் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்தனர்.14நாபாலுடைய பணியாள்களின் ஒருவன் அவன் மனைவி அபிகாலிடம், இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவம்மானப்படுத்தினார்.15 இருப்பினும் அந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தார்: எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளியில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.16 நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்நத நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தார்.17 எனவே இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்: ஏனெனில் நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்கு தீய குணமுடையவராய் இருக்கிறார் என்றான். 18 இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவ்றறை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.19 அவர் தம் பணியாளர்களை நோக்கி, நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன், என்றார்.20 அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீது அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களை சந்தித்தார்.21அப்பொழுது தாவீது, இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் தீமையே செய்தான்.22 அவனுக்குச் சொந்த மாணவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக என்று சொல்லிக் கொண்டிருந்தார்.23அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.24 அவர் தாவீதின் காலில் விழுந்து, என் தலைவரே பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் நீ சொல்லப் போவதை நீர் செவிக் கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.
இக்கதை உண்மை என்றே இருந்தாலும், கருமியாய் இருந்த நாபால் தவறை, மனைவி, அபிகாயில் தாவீதிற்கு மாமுல் தந்து சரி செய்கிறாள் எனப் பார்க்கலாம்.

 நாபால் தன் பண்ணைத் தொழிலாளருக்கு அறுவடைக்கு சம்பளம் தந்து மதுவோடு கொண்டாடினார். இதில் தவறே இல்லை.

1சாமுவேல்25:36 அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.37 காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.38 ஆண்டவர் கர்த்தர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.39 நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அதைத் திருப்பிவிட்டார். பின்பு அபிகாயிலை மணந்து40 தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.41 அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ! உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக! என்றாள்.42 உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார்.43 இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்: அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.44 சவுல் தம் புதல்வியையும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.

 தாவீதிற்காக ஒருவன் மனைவியை கைப்பற்ற, கர்த்தர் நாபாலைக் கொலை செய்தாராம்.

கர்த்தர் செயல் கேவலமாய் உள்ளது.

2 comments:

  1. கர்த்தர் ஒரு நரபலிப் பிரியர்.
    ஆனால் தாவிது அபிகாயிலை மணக்க கொலை செய்வார்.
    இவை கடவுளை இழிவு படுத்தும் கதைகள்-விவிலியமா?

    ReplyDelete
  2. வேதப்புத்தகத்தில் தாவீதின் முழுச் சரித்திரத்தையும் பதிவிடுங்கள் ஐயா.தாவீதை கர்த்தர் பின்னிப்பெடலெடுத்த சம்பவத்தையும் பதிவிடுங்கள்.

    ReplyDelete