பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை
நாடு போருக்கு செல்ல, போரில் ஈடுபடாதவன் மனைவி பெத்சபாளை போகித்து பின்னர் அந்த வீரன் உரியாவைக் கொன்றவர் தாவீது 2சாமுவேல்11:1 -17
உபாகமம் 22:22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.
|
தாவீது - வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன். தாவீது - தன் காரியங்களுக்கு கர்த்தரிடம் மன்னிப்பு பெற நடுத்தெருவில் பிற பெண்கள் முன் நிர்வாணமாக நடனமாடி கர்த்தரை மகிழ்வித்தார்.தன் சட்டத்தை நிறைவேற்ற முடியாத கர்த்தர்-பெரும் அறிவாளியை இந்த தம்பதிக்கு மகனாய் தந்தார்.
மத்தேயுவின் இயேசு, பெத்லகேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப், இந்த சாலமன் வரிசை. மத்தேயுவின் ஏசு, தாவீது சாலமன் வரிசையில்- ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை.
லூக்காவின் இயேசு, நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப், வேறு நாத்தன் வரிசை. லூக்காவின் ஏசு, தாவீது நாத்தன் வரிசையில்- ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறை.
1இராஜாக்கள்4:29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார்.
|
பைபிளே முரண்பாட்டின் முழு உருவம்
சவுலின் மரணம்
1சாமுவேல்31:பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்: பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்: பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தினார்.2 பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.3 சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது: வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.4 அப்பொழுது சவுல் தம் படைவீரர்களை தாங்குவோனை நோக்கி, இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு, என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாக்குவோன் மிகவும் அஞ்சியாதால் அதற்கு அவன் இசையவில்லை.எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். 5 சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்கு வோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.6 இவ்வாறு சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லோரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.7 இஸ்ரயேல் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்கு அருகே யோனத்தானும் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடினார். அதனால் பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.
|
சவுல் மரணத்தை மீண்டும் இதே கதாசிரியரின் இரண்டாவது புத்தகத்தில்
சவுல் மரணத்தை தாவீது அறிதல்-2சாமுவேல்1:சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்து திரும்புகையில் தாவீது சிக்லாவில் இரண்டு நாள் தங்கினார். 2 மூன்றாம் நாள், சவுலின் பாசறையிலிருந்து கிழிந்த ஆடைகளோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.3 நீ எங்கிருந்து வருகிறாய்? என்று தாவீது அவனை வினவ, நான் இஸ்ரயேல் பாசறையிலிருந்து தப்பி வந்துவிட்டேன் என்று அவன் பதில் கூறினான்.4 என்ன நடந்தது? என்னிடம் சொல், என்று தாவீது கேட்க, அவன் வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்: அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்: சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துமடிந்துவிட்டனர் என்று கூறினான்.5 சவுலும் அவனுடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்? என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.6 அதற்கு அந்த அளைஞன் நான், தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின் மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.7 அவர் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்து கூப்பிட்டார், இதோ இருக்கிறேன் என்று நான் கூறினேன்.8 யார் நீ? என்று அவர் என்னை வினவ, நான் ஓர் அமலேக்கியன் என்று பதிலளித்தான்.9 என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் நான் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டுயிருக்கிறது என்று அவர் என்னிடம் கூறினார்.10 நான் அவர் மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்த பின்பு அவர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவர் தலையிலிருந்த மகுடத்தையும் பையிலிருந்த காப்பையும் எடுத்துக் கொண்டு, உம்மிடம் வந்துள்ளேன் என்று கூறினார்.11தாவீது தம் ஆடைகளை பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர்.12 சவுலுக்காகவும் அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்லயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்க்ள.
அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை
13 தாவீது தமக்கு செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், நீ எங்கிருந்து வருகிறாய்? என்று மீண்டும் வினவ, நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன் என்று மறுமொழிக் கூறினான்.14 ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.15 பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.16 இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.
|
நாட்டில் பஞ்சம் வருகிறதாம் அதற்கு தீர்வு கர்த்தருக்கு சவுல் பேரன்கள் கொலையாம்
சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது.
2சாமுவேல்21:தாவீதின் வழிமரபினர் கொலை செய்யப்படல்
1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரின் திருவுள்ளத்தை நாடினார். கிபாயோனியரைச் சவுல் கொலை செய்ததன் காரணத்திற்காக அவன் மீதும் அவன் வீட்டார் மீதும் இரத்தப்பழி உள்ளது என்றார் ஆண்டவர்.2 அரசர் கிபயோனியரை அழைத்துப் பேசினார். கிபயோனியர் இஸ்ரயேலரை சார்ந்தவர் அல்ல: அவர்கள் எமோரியருள் எஞ்சியவர். இஸ்ரயேலர் அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தும், இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் தாம் கொண்டிருந்த பேரார்வத்தின் காரணமாகச் சவுல் அவரை அழிக்க முயன்றார்.3 தாவீது கிபயோனியரிடம் உங்களுக்காக நான் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவரின் உரிமைச் சொத்துக்கு ஆசிவழங்குமாறு நான் என்ன கழுவாய் செய்ய வேண்டும்? என்று கேட்டார்.4 கிபயோனிர் தாவீதிடம், சவுலிடமிருந்தோ அவன் வீட்டாரிடமிருந்தோ நாங்கள் பொன்னையோ வெள்ளியையோ எதிர்பாக்கவில்லை: இஸ்ரயேலருள் ஒருவனைக் கொல்ல வேண்டும் என்று நாங்கள் விருப்பவில்லை என்று கூறினார். தாவீது, நீங்கள் வீம்புவதை நான் செய்வேன் என்றார்.5கிபயோனியர் அரசரிடம், நாங்கள் இஸ்ரயேல் எல்லையில் எங்குமே ஒழிந்து போகச் சதிசெய்தவன், எங்களை அழித்தவன் ஒருவன் உண்டு.6 அவன் புதல்வருள் ஏழு பேர் எங்களிடம் ஒப்புவிக்கப்பட்டும் ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுலின் நகரான கிபயோனில் அவர்களை ஆண்டவருக்காகக் கழுவிலேற்றுவோம் என்று கூறினர். அரசரும் அவர்களை ஒப்புவிக்கிறேன் என்றார்.7 ஆனால் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டு சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த பெரிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.8 அய்யாவின் மகள் இரிசபா சவுலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்களான அர்மோனி, மெபிபொசேத்து ஆகிய இருவரையும் சவுலின் மகள் மேராபு மெகொலாத்தியன் பர்சில்லாயின் மகன் அத்ரியேலுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள் ஐவரையும் பிடித்து,9 கிபயோனியர் கையில் அரசர் ஒப்படைத்தார். இவர்களை ஆண்டவர் முன்னிலையில் மலையில் கழுவேற்றினர். அந்த ஏழுபேரும் ஒன்றாக மடிந்தார்கள். அவர்கள் வாற்கோதுமை அறுவடை தொடங்கிய முதல் நாள்களிலே கொலையுண்டார்கள்.10 அப்போழுது அய்யாவின் மகன் ரிஸ்பா சாக்குத் துணியை எடுத்துக் கொண்டுபோய் அதைப் பாறைமீது தனக்காக விரித்துக் கொண்டு, அறுவடை தொடங்கிய நாள் முதல் வானத்தினின்று அவர்கள் மீது மழை பொழியும்மட்டும் இருந்தாள்: பகலில் வானத்துப் பறவைகளையோ, இரவில் காட்டு விலங்குகளையோ அவர்களைத் தொட அனும11 சவுலின் வைப்பாட்டியான அய்யாவின் மகள் இரிசபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.12 எனவே, தாவீது சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் யாபேசு கிவயாதின் மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்தார். பெலிஸ்தியர் அவர்களை கில்போவாவில் வெட்டி வீழ்த்தி, பெத்சான் நகர முற்றத்தில் கழுவிலேற்றினர். அந்த முற்றத்திலிருந்துதான் யாபேசு கியாதின் ஆள்கள் எலும்பு13 சவுலின் எலும்புகளையும் யோனத்தானின் எலுக்புகளையும் அங்கிருந்து கழுவிலேற்றப்பட்ட இவர்களின் எலும்புகளையும் ஒன்று சேர்த்தனர்.14 சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தானின் எலும்புகளையும் பென்யமின் நிலப்பகுதியான செலாவில் அவர்தம் தந்தை கீசின் கல்லறையில் அடக்கம் செய்தனர். அரசர் கட்டளையிட்டவாறே அனைத்தையும் செய்தனர். அதன் பின் நாட்டுக்காகச் செய்யப்பபட்ட வேண்டுதலைக் கடவுள் கேட்டார்.
|
சவுல் செய்த தவறிற்கு அவர் பேரன்களை நரபலியாய் தந்த உடன் கர்த்தர் பஞ்சத்தைப் போக்கினாராம்.
உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.
|
//14 ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்? என்று தாவீது அவனைக் கேட்டார்.15 பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டுபோ, அவனை வெட்டு என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.16 இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன் என்ற உன் வாயே எனக்கு சான்று சொல்லிவிட்டது என்று தாவீது அவனை நோக்கி கூறினார்.// இது தான் ஆட்சியாளர்களின் தந்திரம் என்பது.. என்ன தான் தன் எதிரியானும் சவுல் ஒரு ராஜா. தாவிது ராஜாவாக முயல்பவன். சவுலை கொன்றன்வனை விட்டு வைத்தால் நாளை அவன் தாவிதையும் கொல்லகூடும்.
ReplyDeleteஅவனை கொன்றுவிட்டால் , என்னதான் ராஜா தவறு செய்தாலும் ராஜாவை கொன்றால் கொல்லப்படுவோம் என்ற பயம் மக்களிடம் இருக்கும்...
இதேல்லாம் அரசியல்ல சகஜமையா.
Vinoth Kumar-1சாமுவேல்31:4-5முதலில் வீரன் மறுக்க சவுலே கத்தியைக் குத்தி இறந்தார். வீரனும் தற்கொலை செய்து கொண்டார்.
ReplyDelete2சாமுவேல்1:6-பின்னால் எப்படி ஐயா அதே வீரன் தாவீதிடம் போய் சொல்ல முடியும்.
தாவீது சவுல் பேரனைக் கொன்றார் எனில் அது அரசியல். ஆனால் கர்த்தர் சவுல் பேரன்களை பலிகேட்டு பஞ்சம் என்றால் - அது பைத்தியக்காரக் கதையாக உள்ளது.
கர்த்தர் ஒரு ரத்த வெறியர்.
எல்லாம் கடவுள் கதை என ரீல் உடறதினாலே தான் இப்படி பார்க்கிறாங்கோ