Saturday, January 9, 2016

மதம் மாறி திருமணம் செய்த பெண் கணவரின் ஜாதி தகுதியைக் கோர முடியாது: சென்னை ஹைகோர்ட்

http://tamil.oneindia.com/news/2013/02/08/tamilnadu-muslim-convert-can-t-get-backward-class-status-169410.html
மதம் மாறி திருமணம் செய்த பெண் கணவரின் ஜாதி தகுதியைக் கோர முடியாது: சென்னை ஹைகோர்ட் Posted by: Mathi Published: Friday, February 8, 2013, 
சென்னை: மதம் மாறி திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் தமது கணவரின் ஜாதிக்குரிய தகுதியை தமக்கும் வழங்க கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 ஏ. பாத்திமா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், செங்குந்தர் ஜாதியை சேர்ந்த தாம் இஸ்லாம் மதத்துக்கு மாறி அந்த மதத்தைச் சேர்ந்த ஆசாத் என்பவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்தேன். பிரேமாவதி என்ற பெயரையும் பாத்திமா என மாற்றினேன். 

இதனால் னது கணவரின் 'லப்பை' ஜாதி சான்றிதழை எனக்கும் வழங்கக் கோரினேன். காஞ்சிபுரம் துணை வட்டாட்சியரும் இதற்கான சான்றிதழை அளித்திருக்கிறார். ஆனால் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நான் கலந்து கொண்டேன். 

ஆனால் பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) பிரிவில் என்னை சேர்க்காமல், பெண்கள் - இதரர் என்ற பிரிவில் டி.என்.பி.எஸ்.சி. சேர்த்துள்ளது. இதனால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். , பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) என்ற பிரிவில் என்னை சேர்த்து, எனக்கு பணி வாய்ப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரியிருந்தார். 

இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. சந்துரு அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். திருமணம் காரணமாக ஒருவர் தனது ஜாதியை மாற்றுமாறு கோர முடியாது. உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மனுதாரருக்கு லப்பை என்று அளிக்கப்பட்ட ஜாதி சான்றிதழ் செல்லாது என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு

பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு https://ta.wikipedia.org/s/9ihx மொழிகளைச் சேர் பாத்தூர் நடராசர் சிலை பாத்தூர் நடராசர் சிலை மீட்பு வழக்கு...