Tuesday, March 15, 2016

Namakkal AG Church Pastor Samuel Aaron arrested for Rape

வேலைக்காரியிடம் பாலியல் பலாத்கார முயற்சி: கைதான மதபோதகர் நாமக்கல் கிளை சிறையில் அடைப்பு
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, மார்ச் 16, 10:01 AM IST
நாமக்கல், மார்ச். 16–
நாமக்கல்–திருச்சி சாலை குப்பம்பாளையத்தில் ‘செக்கினா அசெம்பிளி’ என்ற பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் சாமுவேல் ஆரோன் (வயது40) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதபோதகராக வேலைப்பார்த்து வந்தார்.
இவரது வீட்டில் நிர்மலா (வயது 31) என்ற பெண் வீட்டு வேலைகளை செய்து வந்தார். அப்போது, மதபோதகர் சாமுவேல் ஆரோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நிர்மலா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் செங்கல் சூளையில் வேலை செய்கிறார். எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடந்த 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாமுவேல் ஆரோனின் வீட்டிற்கு வேலை செய்ய சென்றேன். 2 ஆண்டுகள் நான் அவர் வீட்டில் வேலை பார்த்தேன்.
கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் 14–ந் தேதி காலை வேலைக்கு சென்றேன். அவரது வீட்டில் அன்று அவரது மனைவி, மாமனார் மற்றும் குழந்தைகள் வெளியே சென்று விட்டனர். அந்த தனிமையை பயன்படுத்தி கொண்டு சாமுவேல் ஆரோன், என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். நான் அவரை தள்ளிவிட்டு அன்றைய தினமே எனது வீட்டுக்கு வந்து விட்டேன்.
அதன்பிறகு, நான் அவரது வீட்டிற்கு வேலைக்கு செல்லவில்லை. ஆனால் அவர் போனில் தொடர்பு கொண்டு என்னை மீண்டும் வேலைக்கு வா என்றும், இல்லை எனில் உன் மீது வீண் குற்றச்சாட்டுகளை சொல்லி, உன்னை ஜெயிலில் தள்ளி மானத்தை வாங்குவேன் எனவும் மிரட்டினார். மேலும் அவ்வப்போது போனில் தொடர்பு கொண்டு, செக்ஸ் தொந்தரவு செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவிட்டார். இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட மதபோதகர் சாமுவேல் ஆரோன், அவர் மீது புகார் தெரிவித்த பெண் ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், வேறு ஏதேனும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாரா?, தேவாலய நிர்வாகத்தில் ஊழல் செய்தாரா? என்பன போன்ற கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் தான் செய்த தவறை மதபோதகர் சாமுவேல் ஆரோன் ஒப்புக் கொண்டார். அதனைத்தொடர்ந்து, பெண்ணை மானபங்கம் செய்தல், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மதபோதகர் சாமுவேல் ஆரோனை கைது செய்தனர்.
இதையடுத்து நாமக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மதபோதகர் சாமுவேல் ஆரோன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மதபோதகர் சாமுவேல் ஆரோனை வேனில் ஏற்றி அழைத்து வந்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மதபோதகர் மீது மேலும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் மதபோதகர் சாமுவேல் ஆரோன் மீது கோவையை சேர்ந்த மற்றொரு மதபோதகர் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார். இதனால் மதபோதகருக்கும், அங்கு வழிபாடு நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதபோதகர் தேவாலயத்தை பூட்டிவிட்டு சென்று விட்டதாக கூறியும், தேவாலயத்தை திறக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment