Saturday, June 24, 2023

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வாடகை பாக்கி

சேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை பாக்கி ₹2081 கோடி! விஸ்வரூபம் எடுக்கும் சி.ஏ.ஜி அறிக்கை

  • LAST UPDATED : PUBLISHED BY :Vijay R

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் பணி தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. வருவாய்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறைச் செயலாளர் கிருஷ்ணன், நில நிர்வாக ஆணையர் என மூன்று நபர் குழுவினர் இதற்கான பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். 

1916-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானம் 17 ஏக்கர் நிலத்தில் லண்டன் நிறுவனத்தால் கட்டப்பட்டது. தற்போது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

1965-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் தமிழக அரசிடம் ஒப்பந்தம் போடப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் 1995-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மேலும் 20 வருடத்திற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது முதல் ஐந்து வருடத்திற்கு ஆண்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் குத்தகை தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அன்றைய மதிப்பு படி குத்தகை தொகை மாற்றியமைக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

குத்தகை தொகை நிர்ணயப்பதில் ஏற்பட்ட பிரச்சனையாலும், விதிமுறையை மீறி கட்டப்பட்ட ஐ, ஜே, கே கேலரிகள் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தாலும் 2000-ம் ஆண்டிலிருந்து 2015-ம் ஆண்டு வரை மைதானத்தின் குத்தகை தொகை வசூலிக்கப்படவில்லை.

பிறகு 1995-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் 2015-ல் முடிவிற்கு வந்த போது வாடகை பாக்கி தொடர்பாக சட்டமன்றத்தில் சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதாவது மைதானத்தின் குத்தகை பாக்கி 2081 கோடி ரூபாய் எனவும் இதை உடனடியாக தமிழக அரசு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மைதானத்தை நிர்வகிக்க கூடிய தரப்பிலிருந்து இது முற்றிலும் தவறான கணக்கு எனவும் இவ்வளவு ரூபாய் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனவும் கூறப்பட்டு வாடகை பாக்கி செலுத்த மறுக்கிறது.

அரசு தரப்பிலிருந்து குத்தகை தொகை நிலத்தின் சந்தை மதிப்பில் இரண்டு மடங்கிலிருந்து 10 சதவிகித்தை செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படுகிறது. இதற்கு செவிசாய்க்க மைதான நிர்வாகம் தொடர்ந்து மறுப்பதால் ஒப்பந்தம் செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் தான் அரசு மூன்று நபர் குழு நியமித்து மைதானத்தின் நிர்வாகத்தை ஆய்வு செய்யவும், ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் கடந்த மூன்று தினங்களுக்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அத்துடன் தலைமை செயலகத்தில் மைதானத்தை நிர்வகிக்கும் குழுவும் அரசு நியமித்த மூன்று நபர் குழுவும் ஒப்பந்தம் புதுப்பித்தல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

நமக்கு தெரிந்ததெல்லாம் சேப்பாக்கம் மைதானம் கிரிக்கெட் மைதானம் என்பது தான். ஆனால் அதையும் தாண்டி சேப்பாக்கம் மைதானத்தில் வேறு என்ன வசதிகள், ஆடுகளம் இருக்கிறது தெரியுமா?

நீச்சல் குளம், ஸ்குவாஷ் மைதானம், ஸ்னூக்கர் ஆடுகளம், இரண்டு மதுபான கூடம், நட்சத்திர வசதியுடன் கூடிய தங்கும் விடுதி, உடற்பயிற்சி கூடம், என ஐந்து நட்சத்திர விடுதியில் உள்ள அனைத்து வசதிகளையும் சேப்பாக்கம் மைதானம் உள்ளடக்கியுள்ளது.

2000-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை குத்தகை தொகை செலுத்தாமலும், 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் புதுப்பிக்கபடாமலும் சேப்பாக்கம் மைதானம் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

அ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு 

https://tamil.news18.com/news/sports/cricket-tnca-owes-government-rs-2081-crore-rent-for-chepauk-stadium-vjr-202385.html


 Edappadi government reducing Rs.2081 crore rent for Chepauk stadium to Rs.250 crore.
by எஸ். எம். கணபதி Nov 13, 2019, 22:49 PM IST
 தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இது அமைந்துள்ள மொத்தம் 7 லட்சத்து 52 ஆயிரம் சதுர அடி நிலத்தை தமிழக அரசிடம் இருந்து வாடகை அடிப்படையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் கிளப் இணைந்து குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகின்றன.

 இந்த மைதானத்தில் நடத்தும் கிரிக்கெட் போட்டிக்கான வருவாயை அவையே வைத்து கொள்கின்றன. கடந்த 1995ம் ஆண்டு குத்தகை ஒப்பந்தம் செய்த போது, முதல் 5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை என்றும் அதன்பிறகு வாடகை உயர்த்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. 

இந்த ஒப்பந்தப்படி 2000ம் ஆண்டு வரை வாடகை செலுத்தப்பட்டது. அதற்கு பிறகு வாடகையை எவ்வளவு உயர்த்துவது என்று முடிவு செய்யப்படவில்லை. 2015 ஆண்டு ஏப்ரலுடன் குத்தகை ஒப்பந்த காலமும் முடிந்து விட்டது. மீண்டும் மறு ஒப்பந்தமும் போடப்படவில்லை.
இந்த வகையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வாடகைப் பாக்கியாக ரூ.2081 கோடி வரை செலுத்த வேண்டியுள்ளது என்றும் தமிழக அரசு இத்தொகையை வசூலிக்காமல் அலட்சியமாக உள்ளது என்றும் தணிக்கை அறிக்கையில்(சி.ஏ.ஜி) தெரிவிக்கப்பட்டது. இந்த சி.ஏ.ஜி ரிப்போர்ட் கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் சட்டசபையில் கூட தாக்கல் செய்யப்பட்டது. 
ஆனாலும், அந்த வாடகைப் பாக்கியை வசூலிக்கவே இது வரை வசூலிக்கவே இல்லை. அதே சமயம், சாதாரண சலுான் கடைக்காரரோ, அயர்ன் கடைக்காரரோ ஐநூறு ரூபாய் மின்சார கட்டண பாக்கி வைத்திருந்தால், மின்சார வாரிய ஊழியர் வந்து கெட்டகெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டிவிட்டு பியூஸை பிடுங்கி விட்டு போவார். 
இந்த சூழ்நிலையில், தற்போது திடீரென ரூ.2081 வாடகைப் பாக்கியை தமிழக அமைச்சரவை கூடி வெறும் ரூ.250 கோடியாக குறைத்து நிர்ணயிக்க பேரம் பேசப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 


அதாவது, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெறுவது போல் அவரது குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து, ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் வருமாறு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2081 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளது என சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியும், அந்தப் பணத்தை வசூல் செய்யாமல், ரூ.250 கோடியாக குறைக்கும் 'பேரம்' நடப்பதாக செய்தி! 
அமைச்சரவை அப்படி முடிவு எடுத்திருந்தால், அதற்கான அரசாணை ஏதும் வெளியிடாமல் நிறுத்த வேண்டும். மக்கள் நலத் திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை எனும் நேரத்தில், இதுபோன்ற வாடகை பாக்கியை குறைக்கும் நடவடிக்கை யார் லாபத்திற்காக? 'கமிஷன், கரப்ஷன், கலக்‌ஷன், பேரம்' - இதுதவிர அதிமுக ஆட்சிக்கு வேறேதுமே தெரியாதா? இ்வ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. 
https://tamil.thesubeditor.com/news/chennai/17156-edappadi-government-reducing-rs-2081-crore-rent-for-chepauk-stadium-to-rs-250-crore









No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...