Sunday, June 4, 2023

போதைப் பொருள் கடத்திய மத போதகர் ஆரோக்கிய பெர்லிங்டன்

 

3 கிலோ போதைப் பொருள் இலங்கையில் பறிமுதல்: 8 பேர் கைது

ராமேசுவரம்: இலங்கை கல்பிட்டி பகுதியிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்நாட்டு போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பேருந்தை சோதனையிட்டதில் பையில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரிந்தது.

கடத்தி வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் போதைப் பொருள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய 6 பேர் காரில் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும் அந்த நபர் கூறினார். இதையடுத்து காரில் வந்த 6 பேர், தலைமன்னாரில் ஒருவர் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 7 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய பெர்லிங்டன் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பறிமுதலான போதைப் பொருள் தொடர்பாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் தமிழக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் இருந்து கடத்திய ரூ.1.70 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ரஷ்யா - இந்தியா ஒப்பந்தங்கள்: 2025 சம்மிட்டில் புதிய உடன்பாடுகள் & வரலாற்று பின்னணி

ரஷ்யா - இந்தியா ஒப்பந்தங்கள்: 2025 சம்மிட்டில் புதிய உடன்பாடுகள் மற்றும் வரலாற்று பின்னணி டெல்லி, டிசம்பர் 5, 2025: ரஷ்ய அதிபர் விளாதிமிர்...