Thursday, August 24, 2023

ராக்கெட் ஏவுதளம் தமிழகம் வராமல் கெடுத்த அண்ணாதுரை & அமைச்சர் - ஸ்ரீஹரிகோட்டா சென்றது எவ்வாறு?

 ராக்கெட் ஏவுதளம் தமிழகம் வராமல் கெடுத்த அண்ணாதுரை & அமைச்சர் - ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டா சென்றது எவ்வாறு? 

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். 

 

விண்வெளியில் ராக்கெட் ஏவ ஆகும் எரிபொருள் செலவு பூமத்திய ரேகை அருகில் செல்ல செல்ல குறையும்.  மேலும் நேரடியாக கடலின் மேல் பறக்கும். இந்த காரணங்கள் தவிர புயல் பாதிப்பு அதிகம் இல்லாத காரணத்தால் ஆந்திராவை விட தென் தமிழ் நாடு ராக்கெட் ஏவுவதற்கு இந்தியாவில் சிறந்த இடம்.                                         

இந்திய விண்வெளித்துறையை அழிக்க நடந்த அமெரிக்கச் சதியில் பங்கேற்று, மாலத்தீவைச் சேர்ந்த முன்னாள் பெண் உளவாளிகள் மூலம் இஸ்ரோவின் ஈடு இல்லாத விஞ்ஞானிகள் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வை விவரிப்பதே ‘‘Ready to fire" என்னும் நூல். எழுதியவர் நம்பி நாராயணன் என்னும் ஏவுகணை விஞ்ஞானி; அந்த நூல் கூறும் வரலாறு

அன்றைய தமிழக முதல்வர் அண்ணாதுரை உடல்நிலை காரண கூறி விக்ரம் சாராபாயை  சந்திக்க தன்  மூத்த அமைச்சர் மதியழகன் அனுப்பினார். விக்ரம் சாராபாயை சந்தித்து பேச மது அருந்திய தெளிவற்ற நிலையில் இருந்த தி.மு.க அமைச்சரை 'கைத்தாங்கலாக' அழைத்து வருகின்றனர். வந்ததும் மிகவும் தாமதமாக. வந்ததும் வாய்குழறல் மற்றும் ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான எதிர்பார்ப்புகளை(லஞ்சம்) முன்வைக்கிறார் அந்த தி.மு.க அமைச்சர்.




 தலைசிறந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தி.மு.க அமைச்சரின் செயல்பாடுகளை கண்டு வெறுத்துத் திரும்புகிறார். பிறகு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைந்தது 

Thanks - https://valamonline.in/2018/09/blog-post_73.html

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...