Saturday, August 26, 2023

விஞ்ஞானி நம்பிநாராயணன் 'தேசத்துரோகி',எனசீரழிக்கப்பட்ட வரலாறு 'ராக்கெட்ரி-நம்பி விளைவு!'திரைப்படம்.

 தேசப்பற்றாளரை, 'தேசத்துரோகி',என பட்டம் சூட்டப்பட்டு அவருடைய வாழ்க்கையை சீரழிக்கப்பட்ட வரலாற்று ஆவணம்தான்,'ராக்கெட்ரி-நம்பி

https://www.facebook.com/groups/897137793992554/?multi_permalinks=1909857709387219&hoisted_section_header_type=recently_seen&__cft__[0]=AZWMokUx8mm4jwNVKYGUGBKD0Ly5ikV_a_8GY4y82LGqAyrJAITM_Lqmi23GZ9x0OmVi61Tp-U3h0kW1Ky7K_PzKWQT56Mo9Du4qug-qVrw9vAilEEEnFWq6XKtJsYk0eKvQ48wcsGX1TZA6xn1weKIe9dgjUwrKdqIOcdgPOPUyhw-D82hLViIiROigZrXcFTw&__tn__=%2CO%2CP-R

விளைவு!'திரைப்படம்.தன்னுடைய முதல் படத்தையே தமிழ்சினிமாவில் முத்திரை பதிக்கும் விதமாக எடுத்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனர்,தயாரிப்பாளர்,நடிகர்-R.மாதவனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்தப் படத்தை எடுக்கும் பொழுதே, அவருக்கு நன்றாகத் தெரியும் படம் வணிகரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்காது என்று.இருந்தும்,அவர் துணிந்து எடுக்கக் காரணம் சினிமாவின் மீது அவர் வைத்த காதலும், தேசப்பற்றும்,அப்பழுக்கற்ற தலைசிறந்த ஒரு விஞ்ஞானியின் மீது தேசத்துரோகம் பட்டம் சூட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை சாமான்ய மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே ஆகும்.

நம்பி நாராயணன் அவர்கள் நாகர்கோவிலில் பிறந்தவர்.படித்தது,மதுரை தியாகராயர் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்பை முடித்தவர்.

இங்கு,படிப்பை முடித்தப் பிறகு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் சீட் கிடைக்க, அங்கு தனது படிப்பை தொடர்ந்தார்.அங்கு சீட்கிடைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இவருடைய தேசப்பற்றுக்கு ஒரே ஒரு சம்பவம் மட்டும் போதுமென நினைக்கிறேன்.படிப்பு முடித்தவுடன், அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது.அதே நேரத்தில்,இஸ்ரோவின் அன்றைய இயக்குனரும் இவரின் குருவும் ஆன விக்ரம்சாராபாய் அவர்கள் இஸ்ரோ விண்வெளி மையத்தில் இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.அவர் நம்பிநாராயணனிடம்,'உன்னுடைய திறமை நம் நாட்டிற்கு பயன்படவேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.ஆனால்,நாசா கொடுக்கும் சம்பளம் எல்லாம் இங்கே கிடைக்காது என்பதும் ஒனக்குத் தெரியும்.முடிவு செய்ய வேண்டியது நீதான்',என்கிறார்.அதேநேரத்தில் நாசாவிலும் இவரை பணியிலிருந்து விடுவிக்க மனமில்லை.ஆனால்,விஞ்ஞானி நம்பி நாராயணன் பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு, தாய்நாட்டிற்காக இஸ்ரோவிற்கு பணியாற்ற வருகிறார். இப்படியாப் பட்டவரைத்தான் தேசத்துரோகி என பட்டம் கொடுத்து ,இவரையும் இவருடைய குடும்பத்தையும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் 50 நாட்கள் வரை சித்ரவதை செய்திருக்கிறது கேரள உளவுத்துறை போலீஸ்.

இவருடைய சிறப்புகளைப் பற்றி முதலில் சொல்ல வேண்டியுள்ளது.

இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ இன்று விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் படைப்பதற்கு தலைசிறந்த விஞ்ஞானியான நம்பிநாராயணனின் உழைப்பும் அடங்கியிருக்கு.

விண்வெளித்துறையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்து,விண்வெளித் துறையின் எதிர்காலம் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை நோக்கித்தான் போகும் என்பதை 1970-களில் உணர்ந்து அதற்கான முயற்சிகளில் இறங்கி திரவ எரிபொருள் விண்வெளி என்ஜினைக் கண்டுபிடித்தார் நம்பி நாராயணன்.

இன்றைய ராக்கெட் தொழில் நுட்பத்தில் அதிகமாக பயன்படும் கிரையோஜெனிக் இன்ஜின் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.

விக்ரம் சாராபாய் இறந்த பிறகு,ராக்கெட்டுக்கான கருவி ஒன்றை கண்டு பிடிக்கிறார். அதற்கு,'விகாஸ்',என தனது குருவின் நினைவாக பெயர் வைக்கிறார்.

நம்பி நாராயணனாக மாதவன்!

விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தம் நடிகர் மாதவன்.நம்பிநாராயணன் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை ,நம் மனதை ஆக்கிரமிக்கும் வகையில் மிக சிறப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மாதவன் அவர்கள்.

நம்பிநாராயணன் எழுதிய சுயசரிதை நூல்,'ஓர் மகனூட ப்ரமந பதம்'.அந் நூலை அடிப்படையாக வைத்தே திரைக்கதை அமைத்திருக்கிறார்,மாதவன்.

திரைக்கதை அமைத்தப்பிறகும், அவர் அருகிலேயே இருந்து பல ஆலோசனைகளை எல்லாம் கேட்டு ராக்கெட்டின் தொழில்நுட்பங்களை எல்லாம் துல்லியமாக எழுதிய பிறகே படப்பிடிப்புக்கே சென்றிருக்கிறார்.அதனால்தான்,படத்தின் முதல்பாதியில் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பற்றி விலாவாரியாக எடுத்துரைக்கிறார்கள்.கதை ராக்கெட் சம்மந்தப்பட்டது எனும் பொழுது அதைப்பற்றிய விளக்கமும் தேவைதானே!

காட்சிகளில் எந்த ஜோடனைகளும் இல்லை.அதுவும் உடல்ரீதியாக அவருக்கு கொடுக்கப்பட்ட சித்ரவதைகளைப் பார்க்கும் பொழுது,அவருடைய மன உறுதியைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போனேன்.

ஒருவேளை,சித்ரவதை தாங்கமாட்டாமல் அவர்கள் கூறும் பழியெல்லாம் ஒத்துக்கொண்டிருந்தால், ஒரு அப்பழுக்கற்ற தேசப்பற்றாளர் நிரந்தரமாகவே தேசத்துரோகி பட்டத்தை சுமந்திருப்பார்.அதை நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் கலங்கி விடுகிறது.

அவர் சித்ரவதை செய்யப்பட்டு விசாரணைக் கைதியாக 50 நாட்கள் சிறையில் இருந்த பொழுது,இப்படிக் கூட அவருடைய எண்ண ஓட்டம் ஓடியிருக்கும்,'நான்,நாசா விண்வெளி மையத்திலேயே வேலை செய்திருந்தால் இப்படியொரு நிலை எனக்கு ஏற்பட்டிருக்காதே',என்று உறுதியாக நினைத்திருப்பார்.அப்படி நினைப்பதுதான் நியாயமானதும் கூட.

இவர்,பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை சொன்னதாக நாளிதழில் வந்ததை படித்து விட்டு, இவரையும் இவருடைய குடும்பாத்தாரையும் ,சொந்தபந்தங்கள் எல்லாம் அவமதிக்கும் நிகழ்வை எல்லாம் காட்சிவழியாக பார்க்கும் பொழுது எப்படித்தான் இவ்வளவு கொடுமைகளை எல்லாம் இந்தக் குடும்பம் தாங்கோச்சோன்னு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

ஒரு காட்சியில் விசாரணை(50நாட்கள்)எல்லாம் முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது மகன்களும் மகளும் கண்ணீரோடு நிற்க,மாதவன்(நம்பி நாராயணன்),'அம்மா எங்கே',ன்னு கேட்க ,'அம்மா ரொம்பவும் ஒடைஞ்சிட்டாங்கப்பா',ன்னு சொல்லி வெடித்து அழ ஆரம்பிக்க ,படம் பார்க்கும் நாம் என்ன ஏதுன்னு அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்போம்.

மாதவன்(நம்பி நாராயணன்)பதறியபடியே மனைவியின் அறையைத் தேடி ஓடுவார்...அங்கு அவரின் மனைவியின் நிலையைக் கண்டு நம் மனம் அலறித் துடிக்கும்.இக்காட்சியில் சிம்ரன் போன்ற திறமை வாய்ந்த நடிகர்களால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும்.அதனால்தான்,மாதவன் இக்கதாபாத்திரத்திற்கு சிம்ரனை மிக சரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இவரை தேசத்துரோகி என எல்லா ஊடகங்களும் போட்டிப் போட்டு கத்தியது மாதிரி ,உச்சநீதிமன்றம் இவரை நிரபராதி என விடுவித்தபோது, ஏன் பெரிய அளவில் Focus பண்ணவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

எப்பொழுதுமே ஊடகங்கள் எதிர்மறை சம்பவங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ,நேர்மறை சம்பவங்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இவரை நிரபராதி என உச்சநீதிமன்றம் விடுவித்தப் பிறகு ,இந்தச் சிக்கலில் இவரை மாட்டியது யார் ?பின்னணி என்ன?இந்தக்கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது வரையில் விடையே இல்லை.

காட்சிப்படி,மாலத்தீவில் இரண்டு பெண்களை இவர் சந்தித்தாகவும் அவர்கள் மூலமாகவே இவர் ராக்கெட் ரகசியங்களை விற்றதாகவும் சொல்லப்படுகிறது.அப்பெண்கள் இவரை பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார்கள்.பின் ஏன் கேரள உளவுத்துறை போலீஸ் நம்பிநாராயணனை இப்படியொரு கேஸில் மாட்டவைத்தார்கள் என்றுதான் தெரியவில்லை.

இவருக்கு நஷ்டஈடாக வெறும் 50 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டும் ,இவரும் இவர் குடும்பம் அடைந்த மன உளைச்சலை எல்லாம் நேர்செய்து விட முடியுமா?

படத்தின் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்று.விசாரணைக் கைதியாக நம்பி நாராயணன் சிறையில் இருக்கிறார்.இவருடன் பணியாற்றிய, இக்கட்டான சூழ்நிலையால் நம்பிநாராயணனை தன்னுடைய எதிரியாக நினைத்துக் கொண்டிருக்கும், அவர் மேல் அடங்காத கோபத்தில் இருக்கும் சக விஞ்ஞானி ஒருவர் மாதவனை (நம்பிநாராயணன்) சந்திக்க வருகிறார்.அப்பொழுது அவர் சொல்லும் டயலாக் காட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கும்."ஒன்னையை இந்தக் கோலத்துல பாக்க எனக்கு சந்தோஷமாத் தான்யா இருக்கு...அதற்காகத்தான் ஒன்னையை பாக்கவும் வந்தேன்...அதே நேரத்துல ஒன் கூட வேலை செஞ்சவங்க யாருமே பாக்க வரலேன்கிறதை நினைச்சும் ஆச்சர்யப் படறேன்....என்னோட தனிப்பட்ட வாழ்க்கையில எனக்கு ஒன் மேல கோவம் இருந்தாலும் ஒன்னையை நாட்டைக் காட்டிக் கொடுக்கற தேசத்துரோகியா ஒருக்காலும் என்னால ஏத்துக்கவே முடியாது",ன்னு சொல்வார்.இதற்கான reaction-ஐ அற்புதமா வெளிப்படுத்துவார் நடிகர் மாதவன்.இக்காட்சிக்கான பின்னணிக் காட்சியானது படத்தின் மிக முக்கியமான காட்சியாகும்.நம்பிநாராயணன் அவர்களின் Character-ஐ ஆணித்தரமாக சொல்லும் அழுத்தமான காட்சியும் கூட.

நம்பிநாராயணன் அவர்களின் சக விஞ்ஞானியாக பணியாற்றியவர்களில் அப்துல்கலாமும் ஒருவர் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

நடிகர் மாதவன் நம்பிநாராயணன் கதாபாத்திரத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார். தொப்பை எல்லாம் இயற்கையாகவே வளர்த்திருக்கிறார்.எவ்வித செயற்கையும் கிடையாது.இதற்கான வீடியோவும் தனியா இருக்கு.Old getup-ஐ அப்படியே தன்னுடைய மேக்கப் மூலம் அழகாக கொண்டு வந்திருக்கிறார்.நடிகர் சூர்யா படப்பிடிப்புத்தளத்தில் 'யார் உண்மையான நம்பிநாராயாணன் ',என கண்டுபிடிக்க முடியாமல் சற்று நேரம் திணறியிருக்கிறார்.

விஞ்ஞானி நம்பிநாராயணனுக்கு கொடுத்த மன உளைச்சலுக்கு ஈடு செய்யும் விதமாக, இந்தப் படத்திற்கு இந்தியா முழுக்கவே வரிவிலக்கு கூட கொடுத்திருக்கலாம்.

இன்றைய மாணவச்செல்வங்கள் எல்லாம் விஞ்ஞானி நம்பிநாராயணனின் வாழ்க்கையையும் அறிந்து கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

நடிகர் சூர்யா நம்பிநாராயணனை நேர்காணல் எடுப்பதிலிருந்து படம் விரிகிறது.

நேர்காணல் முடியும்பொழுது,சூர்யா Emotional ஆகி நம்பிநாராயணன் காலில் விழுந்து ,'இந்த நாட்டின் சார்பா நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சார்',என சொல்லும் பொழுது நம்மாலும் கண்ணீரை அடக்க முடியாது.

அந்தக்காட்சியில் மாதவனை dissolve ஆக்கி நிஜ நம்பி நாராயணனை காண்பித்து காட்சியை அழகுபடுத்தியிருப்பார்கள்.தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிய பிறகு,அவர் கண்ணீர் சிந்தி அழும் காட்சியில் திரையரங்கமே ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கி விடும்.

இசையமைப்பாளர் சாம் C.S.,ஒளிப்பதிவாளர் சிரிஷாராய் -போன்றவர்களின் அர்ப்பணிப்பை காட்சிகளின் வழியே கண்டு அவர்களின் மீது பெருமதிப்பும் கொண்டேன்.

இதுதான்,இப்படத்திற்கான வெற்றி.தேசிய விருதுகள் பல கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

சந்திராயன் 3 வெற்றியை கொண்டாடும் அதே வேளையில் தேசப்பற்றாளரை தேசத்துரோகி என குத்தப்பட்ட கொடுமையான காலத்தையும் மீண்டும் நினைவு படுத்தவே இப்பதிவு!

சே மணிசேகரன்

No comments:

Post a Comment