Friday, July 29, 2016

Dalits are not given due share in Pastor Committes


https://www.facebook.com/permalink.php?story_fbid=494371657439917&id=100006012619006
தமிழக ஆயர் பட்டியலின பணிக்குழுவில் பட்டியலின அல்லாதோர் பணிக்குழு தலைவராக நியமித்தததை கண்டித்து தமிழக அளவில் உள்ள அணைத்து தலித் கிருத்தவ இயக்கங்கள் சார்பில் விழுப்புரம் சாந்தி நிலையத்தில் தலித் கிருத்தவ இயக்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் 27-07-2016 அன்று கூட்டம் நடத்தப்பட்டது .

தலித் அல்லாதோர் பணிக்குழு தலைவராக தமிழக சாதி ஆயர் பேரவை எடுத்த முடிவினை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறை வேற்றபட்டது .
65 % சதவிகிதம் உள்ள பெரும்பான்மை தலித் மக்கள் அங்கம் வகிக்கும் திருஅவையில விகிதாரச்சாரம் அடிப்படையில் ஆயர் நியமனம் நடைபெறவில்லை ...முன்பு நான்கு ஆயர் பிறகு பிறகு மூன்று ஆயர் தற்போது இரண்டு ஆயராக குறைந்தபிறகும் தலித் ஆயர் நியமனம் செய்யப்படாமல் போனதற்கு சாதிய திருச்சபை ஆயர் பேரவை முழு பொறுப்பேற்று உடனடியாக தலித் ஆயர்களை நியமனம் செய்யவும் அதுவரை தலித் பணிக்குழு விற்கு தற்போதய தமிழக ஆயர் பேரவை தலைவராக நீதி நாதன் அவர்கள் தொடரவும் முடியாமல் போனால் தலித் முதன்மை குரூக்கள் இடைப்பட்ட காலம் வரை பணிசெய்ய ஆவணம் செய்யவேண்டுகின்றோம் 

திண்டுக்கல் ஆயர் வலுக்கட்டாயமாக திட்டமிட்டு திணிக்க பார்த்தால் அவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமல் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆயர் பேரவை தலைவர் சாதி வன்னியர் பாப்புசாமி மதுரை பேராய இல்லத்தை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .


இது குறித்து அணைத்து இயக்கங்களின் பிரதிநிதிகள் சாதிய ஆயர் பேரவை சாதி சங்க தலைவர் ..வன்னிய குருமார்கள் நிர்பந்தம் காரணமாக ஆயர் நீதிநாதன் அவர்களை மாற்றி பட்டியலின பணிக்குழுவிற்கு தலித் அல்லாதோர் நியமித்த பேராயர் பாப்புசாமியை சந்திக்க திட்டமிடப்பட்டது
----பே .பெலிக்ஸ் தலித் கிருத்துவ மக்கள் கூட்டமைப்பு.

John Britto 
அன்புக்குரிய சகோதர உறவுகளே!!
 தமிழக ஆயர் பேரவை Sc/St பணிக்குழுத் தலைவர் பொறுப்பினை மாற்றி தலித் இல்லாத ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டதை சாதி கிறிஸ்தவர்கள் ஆயர்கள் குருக்கள் நியாயப்படுத்தியும் அதற்கு விஞ்ஞான ரீதியில் பல போலியான விளக்கங்களை பரப்பிடும் வேலையை மிக நேர்த்தியாக செய்து கொண்டிருக்கிறார்கள். 
நாம் அதை எதிர்பார்த்ததுதான்.காரணம் அவர்கள் வேலையை சாதீத்துவ ஆணவத்தோடும் வஞ்சனையோடும் கூட்டு முயற்சியில் தங்களின் செயல் திட்டத்தை கச்சிதமாக முடித்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு இதில் வியப்பில்லை. ஆனால் நம் தலித் கிறிஸ்துவ போராளிகள் கொடுக்கும் விளக்கங்களும் சாமாதானங்களையும் பார்க்கும் போது இப்படிப்பட்ட பயிற்சிகளை எங்கிருந்து பெற்றார்கள் என்றுதான் வியப்படைகிறேன். 
ஆயர் நீதீயாருக்கு பணிப்பளுவும் நீண்ட ஆண்டுகள் ஒரே பொறுப்பில் இருக்கிறார் என்றும் அதனால் மாற்றப்பட்டார் என்று சாதீயஆயர்பேரவை செய்த சதிக்கு இன்னும் நாமும் அவர்ளுக்காக லாலி பாடுவதற்கு எப்படி மனம் கல்லாகிறது என்பது ஆயிரம் கேள்விக்கணைகள் என்னை துளைக்கிறது.

 கபாலி படத்தின் வசனங்களை ஆய்வு செய்து Ph.D பட்டம் வாங்கும் அளவுக்கு ஆளுமை படைத்த நம்மால் ஏன் இந்த வஞ்சகத்தை புரிந்தும் புரியாதது போல் அப்பாவியாக பதிவிடுவது எதற்காக?? 
தோழர்களே முன்பைவிட இப்போது திருச்சபையில் பல பொறுப்புகள் உருவாக்கப்பட்டும் போதுமான தலித் ஆயர் நியமனம் இல்லை என்றாலும் 4 எண்ணிக்கையில் இருந்த தலித் ஆயரின் எண்ணிக்கை 2 குறைந்தும் அடுத்த தலித் ஆயர் நியமனத்தை நாம் வலியுறுத்தாமல் இருந்ததே நம்மை கருவருக்கும் திட்டத்தில் 50% வெற்றியை அவர்கள் அடைந்து விட்டார்கள். 
நமது போராட்டக்குணம் வலுவிழுந்தவுடன் நமக்கான Commission யையே பிடிங்கிகொண்டார்கள். 

இந்த திட்டத்தின் அடுத்த முயற்சி இனி தலித் ஆயரின் நியமனம் இல்லை என்பதை இந்த சாதீத்துவ ஆயர்பேரவை தீர்க்கமான முடிவு எடுக்கும். 


அதன்பின்பு Sc/st commission ஆயர் பேரவையால் முற்றிலுமாக மூடப்படும். இந்த நீண்டகால திட்டத்தை நிறைவேற்ற நாமும் துணைநிற்க வேண்டுமா?? சிந்தியுங்கள் நம் மக்களின் நிலையை எண்ணிபாருங்கள் நம்மில் இருக்கும் தூண்டிலை பிடிங்கி கொண்டு 2 மீனை கொடுப்பதால் மயங்கிட வேண்டாம். தலித் ஆயரை மீண்டும் Sc/st commission க்கு நியமனம் செய்யவும் போதிய அளவு தலித் ஆயரை புதிதாக நியமனம் செய்ய வலியுறுத்தி போராடுவோம். அன்போடும்.. உறவின் உரிமையோடும்..சி.ஜான்பிரிட்டோ கடலூர்.

No comments:

Post a Comment