Saturday, September 8, 2012

அப்போஸ்தலர்கள் யார் யார் ? தெரியாது?


 
மாற்கு3:7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். 
  மாற்கு3:13 அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.14 தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்;15 அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார்.16 அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்,17 செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் - இவ்விருவருக்கும் ' இடியைப் போன்றோர் ' எனப் பொருள்படும் பொவனேர்க்கேசு என்று அவர் பெயரிட்டார். -18அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன்,19 இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.  




 மாற்கு
 மத்தேயு
 லூக்கா 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன்
 பேதுரு என்னும் சீமோன் 
 பேதுரு என்று அவர் பெயரிட்ட  சீமோன் 
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 சீமோன் சகோதரர் அந்திரேயா
 யாக்கோபின் சகோதரரான யோவான்
 செபதேயுவின் மகன் யாக்கோபு
 யாக்கோபு,  ,  
 அந்திரேயா 
 யாக்கோபுசகோதரர் யோவான்
 யோவான்
 பிலிப்பு 
 பிலிப்பு
 பிலிப்பு
 பர்த்தலமேயு 
 பர்த்தலமேயு
 பர்த்தலமேயு
 மத்தேயு 
 தோமா
 மத்தேயு
 தோமா
  வரி தண்டினவராகிய மத்தேயு
 தோமா
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு
 அல்பேயுவின் மகன் யாக்கோபு,
 ததேயு
 ததேயு
  தீவிரவாதி எனப்பட்ட சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 தீவிரவாதியாய் இருந்த சீமோன்
 யாக்கோபின் மகன் யூதா
  இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து
 துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து 





லூக்கா 5: 1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர்.2 அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

யோவான்1: 28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்'என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.

முதல்- முக்கியமான சீடரான பேதுரு


லூக்கா -கலிலேயா ஏரிக்கரையில் மீன் பிடித்த பேதுருவிற்கு நிறைய மீன் கிடைக்கும் மாஜிக் செய்ததால் சேர்ந்தார் எனக் கதை. 
யோவான் சுவியோ யோர்தான் ஆற்றங்கரையில் ஞானஸ்நானி யோவான் சொன்னதால் சேர்ந்ததாகக் கதை.
பேதுரு இயேசுவிடம் சேர்ந்தவிதமே தெரியாது. இரண்டில் ஒன்று பொய்? அல்லது இரண்டுமே பொய்? ஏன் மாற்றினார் எதோ ஒரு சுவிசேஷக்-கதாசிரியர்?


யோவான் 21:  இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், ' நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.


ஏரிக்கரையில் மீன் பிடித்த பேதுருவிற்கு நிறைய மீன் கிடைக்கும் மாஜிக் இயேசு செய்தல்  யோவான் சுவிசேஷத்தில் இயேசு உயிர்த்து எழுந்தபின்னர் எனப் புனையப் படுகின்றது
யோவான் சுவிசேஷத்தில் நத்தனியேல் என ஒரு சீஷர்.
வரிவசுலிக்கும் மத்தேயு என மாற்கு - லுக்கா சுவிசேஷங்களில் கிடையாது. 
மத்தேயு9:9 இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், ' என்னைப் பின்பற்றி வா ' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.

நத்தனியேல் யார் தெரியாது? பர்த்தலமேயு  அவர் தான் என்பதற்கு ஆதாரமே கிடையாது
லூக்கா -யாக்கோபின் மகன் யூதா- யார் தெரியாது?
மாற்கு-மத்தேயுவின் ததேயு- லூக்காவின் யாக்கோபின் மகன் யூதா என்பதற்கு ஆதாரமே கிடையாது

பிற்பாடு உள்ள கடிதங்கள் இரண்டு
 யாக்கோபு பெயரில் ஒரு கடிதம்
http://arulvakku.com/biblecontent.php?book=Jas&Cn=1
 பின் யூதா பெயரில் ஒரு கடிதம்
http://arulvakku.com/biblecontent.php?book=Jude&Cn=1
யூதா1:1 இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:

இரண்டு கடிதத்தையும் இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் (கிழே) எழுதியது என்பது சர்ச் 
மாற்கு6:3  3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
மத்தேயு 13:55 54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ' எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானேயாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? ' என்றார்கள்

சிடர்களாக இயேசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் இருக்க முடியுமா?
யோவான்7:2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3 இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை

 யூதா என்னும் பெயரில் மூவர் உள்ளனர்.
1.யூதாசு இஸ்காரியோத்து
http://www.answering-christianity.com/abdullah_smith/crucifixion_of_judas.htm
இஸ்லாமியர்படி யூதாசு இஸ்காரியோத்து இயேசு போல தோற்றம் உள்ளவர். இவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இல்லை.
2. யூதா என்னும்  ததேயு
http://en.wikipedia.org/wiki/Jude_the_Apostle
sometimes identified with Jude, "brother of Jesus"
http://www.catholiccompany.com/blog/saint-jude-thaddeus-surprisingly-popular-saint
As you know Saint Jude Thaddeus, according to tradition, looked like Jesus Christ! 
3.மூன்றாவது நபர் தோமா என்பவர்- இவர் முழுப்பெயர்  யூதா தோமா, ஏசுவோடு ஒரே பிரவசத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்கிறது,  தோமா நடபடிகள் கதை, இக்கதைப்படி உயிர்த்த ஏசு அடிமை வியாபாரியாக மாறி கோந்தபோரஸ் என்ற மன்னனின் ஆளிடம் 30 வெள்ளிக் காசிற்கு விற்றார். யூதா தோமா அவர் பக்கத்து நாடான மன்னன் மசடாய் பாலைவன நாட்டில் அரச வீரர்களால் கொல்லப்பட்டார்.
   
//..The Very name of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramic Teoma whose Greek Translation is Didymus, meaning – “Twin”, most probably his original name was Judas, and the Parentheses and the version variants could have been scribal clarification.How could an Apostle be known by an Epithet or adjective such as “Twin”-// ”PERSON AND FAITH OF Apostle Thomas in the Gospels, Fr.George Kaniarakath,CMI
Many Theolgians say Judas Thomas -Jude -Judas Iscariot could all be one and the same person a Twin brother by birth for Mary along with Jesus. As Thomas of Acts was look alike of Jesus and Jude is so, and as per tradition of Arabia – Judas Iscariout look alike of Jesus was actually the person Crucified.

ஏசு சீடரோடு இருந்த காலம் ஒரு வருடமோ சற்று அதிகமோ, அதனால் 
புதிய ஏற்பாடு எழுதிய கதாசிரியர்களுக்கு இயேசுவைத் தெரியாது.அதனால் தான் கதை இவ்வாறு உள்ளது
 மத்தேயு   விருப்பப்படியான         சுவிசேஷம்     லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்- ஆபிரஹாமிலிருந்து 40வது தலைமுறை  ; தாய் மனைவி  மேரி தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்- ஆபிரஹாமிலிருந்து 56வது தலைமுறை  ;. தாய் மனைவி  மேரி

சீடர்கள் 30 -  40 வருடம் சேர்ந்து இருந்து மதம் பரப்பியதாகக் கதை. ஆனால்  12 பேரில் முதல் சீடர் பேதுரு வரை ஒருவர் பற்றியும் சர்ச்சிற்குத் தெரியாது.
பின் எப்படி புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு சம்ப்வத்தையும் நம்ப இயலும். வெறும் கட்டுக்கதை.

10 comments:

  1. பல்வேறு கட்டுக்கதைகளில் அப்போஸ்தலர்களும் இடம்பிடித்துள்ளனர். ஒரு சீடர் கூட யேசுவிடம் விசுவாசமாக இல்லாமல் கடைசி நேரத்தில் தப்பி ஓடி விட்டனர். அனைவருமே படுகொலைதான் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆதிசங்கரர் காபாலிகள் எனப்படும் மனித பலி கொடுப்போரிடம் மாட்டி, நரபலி கொடுக்கக் கொண்டுசெல்லப்படுகையில் பத்மபாதர் என்ற சீடரின் ப்ரார்த்தனையால் காப்பாற்றப்படுகிறார்.

    ராமானுஜரை சோழ மன்னன் கைது செய்ய ஆணையிடுகிறான். அவருடைய சீடர் , ராமானுஜரை தப்பிக்கச் செய்து, தானே ராமானுஜர் போன்று அவ்வரசனிடம் செல்கிறார். அவருடைய கண்கள் தோண்டப்படுகின்றன. குரு-சிஷ்ய உறவு நம் நாட்டில் அவ்வளவு மேன்மையானது. குருவுக்காகத் தன்னுயிரைக் கொடுத்தவர்கள் இங்கு ஏராளம்.

    ReplyDelete
  2. இன்றுதான் தங்களின் இடுக்கைகளை பாரக்கமுடிந்தது. நல்ல முயற்சி. வாழ்துக்ள். கட்டுரையை, தாங்கள் என்ன சொல்ல வருகிறீ3ர்கள் என்பதை எழுதி இடையிடையே தகுந்த சான்றுகளை எடுத்தெழுதினால் பைபிளுக்கு அறிமிகமில்லாதவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாகும்.

    எழுத்து நடையும் பைபிளிலிருந்து மாறுபட்டால் தமிழ் வாசகர்களுக்கு எளிதாக இருக்கும். எடுத்துக்காட்டாக "நத்தனியேல் யார் தெரியாது?" என்ற சொற்றொடர் "நத்தேனியல் யார் என்பது தெரியாதா?" என்று இருந்தால் நன்றாக இருக்கும்.

    கட்டுரையின் இறுதியில் தங்களின் எண்ணங்களை சில வாக்கியங்களிலாவது நிறைவு செய்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

    பைபிளின் முரண்பாடுகள் மற்றும் அறிவியலுக்கு புறம்பானது அனைத்தையும் அம்பலப்படுத்துங்கள்.

    ReplyDelete
  3. அய்யா அபைச்சரன், இந்துமத புராணங்கள் குருக்களாக பார்பனர்களையும், சீடர்களாக சூத்திரர்களையும் உருவாக்கி, இந்த சூத்திரர்கள் பார்ப்னர்களுக்காக அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கும் புராணங்கள். அதனால் சீடர்கள் தங்களை பலியிட்டுக்கொண்டதை தியாகமாகத்தான் போற்றும். இங்கு குருவானவர்கள் தப்பி ஓடிவிடுவர்.

    ReplyDelete
    Replies
    1. ramanujam seedan kuran oru brahamin .First mind that

      Delete
    2. kuranth azwan lost his eyes by kolthunga cholan

      Delete
  4. அபய் சரண்,
    வருகைக்கு நன்றி. பைபிளை வரலாற்று ஒளியில் பொருத்திப் பார்ப்பது நம் வேலை.

    நந்தன் அவர்களே முடித்துள்ளேன். மின் தடைக்குமுன் சேமிப்பு பதில் பதித்துவிட்டேன்.

    பிறப்பினால் தொழில் பிரிவு என்பது பைபிளிலும் உண்டு. லேவியர் மட்டும் பாதிரி- யூத தேவாலயப் பணி. யூதா மட்டுமே அரசன் என்பதாக.

    பைபிளின் முரண்பாடுகள் மற்றும் அறிவியலுக்கு புறம்பானது-என்பதைவிட அதில் வரலாற்று ரீதியில் உண்மை உள்ளதா என்பதே நம் ஆய்வு. வந்து தங்கள் கருத்தைச் சொல்லவும்.

    ReplyDelete
  5. அப்போஸ்தலர்கள் அனைவரும் கிறிஸ்துவ மதம் பரப்ப உயிர் தந்ததாகத் தான் சர்ச்சில் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோ,

    வரலாற்றுத் திரிபுகளை களைய பகுத்தறிவோடு எழுதும் தங்களின் ஆக்கங்கள் பாராட்டுக்குறியது. ஒரு சிறு வேண்டுகோள் தங்களின் கருத்தை தனி நிறத்திலும் மற்றும் தனி பத்தியாக இறுதியிலும் பதிவிட்டால் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இடையிடையே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கும் போது சிந்தனைச் சிதறல் ஏற்படுகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க தங்களின் மறுப்புக் கருத்தை தனி பத்தியாக தனி நிறத்தில் பதிவிடவும்.

    நன்றி!!!!!

    இனியவன்....

    ReplyDelete
  7. அருமை
    பைபிளின் முரண்பாடுகளையும், அபத்தங்களையும், ஆபாசங்களையும் கிறிஸ்தவர்கள் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை என்று புரியவில்லை. அவற்றை அனைவரும் அறியச் செய்யும் உங்கள் பணி பாராட்டுக்குரியது. பைபிளில் மாற்கு, மத்தேயு, யோவான், பேதுரு போன்ற சிலரின் சுவிசேஷங்களே வெளியிடப்பட்டுள்ளது. மற்ற சீடர்கள் ஏதும் எழுதவில்லையா? அவர்களின் வரலாறு ஏதாவது உள்ளதா? ஒன்றும் புரியவில்லை.

    ReplyDelete
  8. அப்போஸ்தலர்கள் சொல்லித் தானே சுவிசேஷங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்

    ReplyDelete

திருக்குறளை இழிவு படுத்தும் மு.கருணாந்தி உரை

வள்ளுவத்திற்கு உரை எழுதுவர் மூல வெண்பாவிற்கு பொருள் தராமா தான் ஏற்ற நாத்தீக மூட நம்பிக்கைக்கு ஏற்ப பிதற்றுவது பைத்தியக்காரத்தனம் இதோ ஓர் உத...