Thursday, July 17, 2014

இயேசு தப்பா? மாற்கு தப் பா சுவிசேஷங்கள் ஆவியால் புனையப்பட்டதா?

இயேசு என்பவர் கிறிஸ்துவ மத புராணக் கதைப் புத்தகங்களின் நாயகர். கிறிஸ்துவ பைபிள் தவிர நடுநிலை அறிஞர்கள்(இங்கே) ஏற்கும்ப்டியான எந்தவிதமான ஆதரங்களோ சான்றுகளோ ஏசு என்னும் இந்தப் புராணக் கதை நபர் பற்றி இல்லை.
இயேசு கதையில் ஒரு சம்பவம்
ஓய்வு நாளில் கதிர் கொய்தல்-(மத் 12:1 - 8; லூக் 6:1 - 5)
 
மாற்கு2:23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர்.25 அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ' என்றார்.

பழைய 
(இங்கே)ஏற்பாட்டில் தலைமைப் பாதிரி அபியத்தார் தாவீது(இங்கே) ராஜா கதையைப் பார்ப்போம்.
சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல்
1சாமுவேல்21:1 பின்பு தாவீது நோபில் இருந்த தலைமைப் பாதிரி அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலங்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையே? என்றார்.2 அதற்கு தாவீது தலைமைப் பாதிரி அமெலக்கிடம் அரசர் எனக்கு ஒரு பணியைக்கட்டளையிட்டுள்ளார். நான் உனக்கு அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையiயும் ஒருவரும் அறியக்கூடாது என்று அரசர் கட்டளையிட்டுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோற்றியுள்ளார். எனவே ஒரு குறிப்பி3உண்பதற்கு இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது.? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் என்றார்.4 தலைமைப் பாதிரி தாவீதை நோக்கி, தூய அப்பம் உன்னிடம் உள்ளது: சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம், என்றார்.5 தாவீது தலைமைப் பாதிரியை   நோக்கி, சாதாரண பயணத்தின் போதே இந்த இளைஞர்கள் உறவுக் கொள்ளவில்லை:இன்றோ சிறப்புப் பணியை மேற்கொள்வதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மைக் காத்துள்ளார் என்றனர்.6 ஆதலால் தலைமைப் பாதிரி அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்: ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலையில் அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அங்கு சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.

1சாமுவேல்22:17 சவுல் அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், நீங்கள் சென்று ஆண்டவரின் தலைமைப் பாதிரியை கொன்று விடுங்கள்: ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு அறிவிக்கவில்லை.18 அப்போ து சவுல்அரசர் தோயோகிடம், நீ சென்ற தாவீதுக்கு உடன்பட்ட கதலைமைப் பாதிரியை வீழ்த்து , என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று தலைமைப் பாதிரியை வெட்டி வீழ்த்தினார். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.19 மேலும் அவன் தலைமைப் பாதிரிகள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றை வாளுக்கு இரையாக்கினார்.20 ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.21 ஆண்டவரின் தலைமைப் பாதிரி சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.
1சாமுவேல்23:6 அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.

பழைய (இங்கே)ஏற்பாட்டில் தாவீது(இங்கே) ராஜா கதையில் தலைமைப் பாதிரி அகிமெலங்கு தான்    அபியத்தார் இல்லை. 

இயேசு (இங்கே)எனப்படும் கதை நாயகர் ஒரு ரோம் எதிர்ப்பு யூதத் தீவீரவாதியாய் காணலாம். இயேசு ஒரு பழமைவாத (இங்கே)யூத இனவெறியராய் காணலாம். 

ஆனால் பழைய ஏற்பாட்டை (இங்கே)ஏசு தப்பாகச் சொன்னாரா? (இங்கே)மாற்கு தவறாகச் சொன்னரா?

No comments:

Post a Comment