Friday, March 18, 2016

Love Marriage with Muslim Nisha, brothers Muhammad Rafiqe & Syed Ali killed Ramesh -Honour Killing

அண்ணனின் மதவெறியால் விதவையான தங்கை எனும் தலைப்பில் 30-6-2012 நக்கீரன் இதழில் வந்த கட்டுரை.


''இந்த வருஷம் காதல் திருமண நாளன்று ஒரு சூப்பர் பரிசு தரப்போறோம்'' என்று சஸ்பென்ஸாக சொன்னார்கள் நிஷாவின் அண்ணன்களான செய்யது அலியும், முகமது ரபிக்கும். ஆனால் தனது காதல் கணவன் ரமேஷின் உயிர் தான் அந்த பரிசு என நிஷா அப்போது அறிந்திருக்கவில்லை. 20 வயது நிரம்பிய நிஷா இந்த இளம் வயதில் விதவையாவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கிராமத்தில் வசிக்கும் நிஷா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமலே நடந்ததை விவரிக்கிறார்.

''இடலாக்குடியை சேர்ந்த நான் தையல் கற்று கொள்வதற்காக பறக்கைக்கு வந்து சென்றேன். அப்போது தான் பறக்கை வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் எனக்கு அறிமுகமானார். ரமேஷ் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டிகிட்டிருந்தார். ஆரம்பத்தில் சாதாரண ஒரு நண்பனை போல தான் பழகினார். நானும் நட்பாக தான் பழகினேன். இந்த நிலையில் நானும் ரமேஷூம் பழகுவது என் அண்ணன்களின் காதுகளுக்கு எட்டியது. இஸ்லாமிய இயக்கம் ஒன்றில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதனால் என்னை கூப்பிட்டு ''இங்க பாரு நீ யார்கிட்ட பழகினாலும் ஒரு இந்துவோட மட்டும் பழகக்கூடாது. எங்களோட விடிவெள்ளி இயக்கம் இதை தான் வலியுறுத்துது. மதம் மாறி காதலிச்ச எத்தனையோ காதலர்களை நாங்க பிரிச்சிருக்கோம். ''

அண்ணன்களின் எதிர்ப்பை மீறி ரமேஷை மணந்து கொண்டார் நிஷா. இறுதியாக ரமேஷ், நிஷாவின் அண்ணன்களால் கொல்லப்பட்டார். சாதிகளின் இடையே நிகழும் கௌரவ கொலைகளை மட்டுமே பேசும் சமூக நீதி போராளிகள் நிறைந்த ஈவெராமசாமி மண்ணில் மதங்களுக்கு இடையே நிகழ்ந்த கௌரவ கொலை மறக்கடிக்கப்பட்டே விட்டது.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...