அவதூறு பேச்சால் பாதிரியாருடன் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் மீது பாலியல் வழக்கு: திமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 7 பேர் தலைமறைவு
By செய்திப்பிரிவு Published: 10 Aug, 21 03:16 am
பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் உள்ளிட்டோரை அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் மீது பெண் அளித்த புகாரின் பேரில்பாலியல் வன்கொடுமை உட்பட மேலும் 6 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ் வழக்கில் திமுக ஒன்றிய செலாளர் உட்பட 7 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் ஜூலை 18-ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இந்து மதம் குறித்தும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏ பற்றி அவதூறாகவும், சர்ச்சைக்குரிய விதமாகவும் பேசியது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தஅருமனை கிறிஸ்தவ இயக்கச்செயலாளர் ஸ்டீபன் ஆகியோர்மீது 7 பிரிவுகளில் அருமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து,இருவரையும் கைது செய்துசிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஸ்டீபன் உட்பட8 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருவட்டாறு அருகே உள்ள வீயன்னூர்பகுதியைச் சேர்ந்த 36 வயதுபெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில், ‘‘கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் திருமணத் தகவல் நிலையம் ஒன்றில் வேலை பார்த்தேன். அதை நடத்தி வந்த புத்தன்சந்தையைச் சேர்ந்த ஜெபர்சன் வினிஷ்லால் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். மயக்க நிலையில் இருந்தஎன்னை வீடியோ எடுத்து அடிக்கடி மிரட்டி வந்தார்.
இந்த சம்பவம் நடந்து வெகுநாட்களுக்கு பின்னர் அருமனை ஸ்டீபன் உட்பட 8 பேர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.இதுதொடர்பாக. கடந்த ஏப்ரல் 22-ம்தேதி நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தேன். விசாரணைக்கு பயந்து ஜெபர்சன் வினிஷ்லால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் எனது புகார் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மிரட்டலுக்கு பயந்து தொடர்ந்து புகார் அளிக்காமல் இருந்தேன்.
என்னை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆபாசமாக எடுத்த வீடியோக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
6 பிரிவுகளில் வழக்கு
இதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன், செட்டிசார்விளையைச் சேர்ந்த திருவட்டாறு ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட், காட்டாத்துறையைச் சேர்ந்த ஹென்சிலின் ஜோசப் உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் மார்த்தாண்டம் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்டீபனை தவிர தலைமறைவான மற்றவர்களைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
https://www.seithipunal.com/politics/george-ponnaiya-case-issue
No comments:
Post a Comment