இளையராஜா அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர் டேவிட் ராஜா மற்றும் ஞானதேசிகன் என்ற பெயர் கொடுக்கப்பட்டவர்.
இறைவனை உணர்ந்து உணர்ந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டு அவர் ஜனனி ஜனனி என பாடிய பாடலைக் கேட்டால் இன்று மனம் உருகாதோர் மிகவும் குறைவு. இறையருளைப் பெற்ற இளையராஜாவை வணங்குவோம் அவர்தான் பிறந்த தன்னுடைய சொந்த ஊரில் வேதபாட சாலை அமைக்க வேண்டும் எனும் முயற்சியில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி அருளால் நிறைவேற்றுகிறார்.
· இளையராஜா வெகு காலமாக தனது சொந்த மண்ணில் வேதபாடசாலை அமைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.அதற்கு அனுமதி கேட்டிருக்கிறார் சங்கரமடத்திடம்..அதே போல ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் அனுமதி வழங்கப்பட்டு அதை நிர்மாணித்திருக்கிறார்.
இதில் திரு.இளையராஜா பேசுவதை கவனியுங்கள்..அந்த பகுதியில் வேத ஒலி கேட்டே பல காலமாகிவிட்டது.அந்த மக்களும்,ஊரும் சிறப்பாக இருக்க வேதஒலி அங்கே கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை செய்ய ஆசை கொண்டேன் என்கிறார்..
பல்லாயிரம் நாவால் ஒருங்கே விவரிக்க முடியாத ஒன்றிணை மிக எளிமையாக சொல்லிவிட்டார் இசைஞானி..நாம் அழிக்க நிற்பது இந்த நாட்டின் நன்மங்கலத்தை என்பதை இனியாவது உணருங்கள்..
No comments:
Post a Comment