சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: திண்டுக்கல் ரவுடிக்கு 8 ஆண்டு சிறை https://www.hindutamil.in/news/crime/1257011-dindigul-rowdy-gets-8-years-in-jail.html
திண்டுக்கல்லில் கடந்த 2023-ம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோயில் தெருவைட் சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல் ஆஷிக் (31) என்பவரை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணைகள் முடிவடைந்தநிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சரண், குற்றம்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதால் குற்றம்சாட்டப்பட்ட அல்ஆசிக்கிற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அல்ஆசிக் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment