Friday, October 23, 2026

பார்த்தசாரதி கோவிலில் TN-HRCE சட்டவிரோத செயல்கள்



சென்னையில்

அருகில் உள்ள இரு முக்கிய கோயில்கள் ஊழலில் திளைக்கின்றன. மோசடியாக அங்கு பணி புரியும் செயல் அலுவலர்களால் கோயிலுக்கு வரவேண்டிய வருமானத்தில் 5% சதவிகிதம் கூட வருவதில்லை. அதில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பெயர் அளவிற்காவது அறங்காவலர்கள் உள்ளனர். ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் மோசடி செயல் அலுவலரே தக்காராக, 60 வருடங்களாக இருந்து வரும் அவலக் காட்சி. இதனால் தான் இந்த அறம் இல்லாத துறையை வெட்கம், மானம் இல்லாத துறை என்று சொல்கிறேன். அறநிலையத்துறைச் சட்டப்படி மாவட்ட நீதிபதி நிலையில் ஒரு நீதிபதிதான் ஆணையராக இருக்க வேண்டும். அமைச்சருக்கும் முதல்வருக்கும் ஜால்ரா அடிக்கும் IAS அதிகாரிகள் தாம் ஆணையர்களாக 40 வருடங்களுக்கு மேலாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த IAS அதிகாரிகளுக்கு அமைச்சர் சொல்வது தான் வேத வாக்கு. கோயில்கள் சொத்துக்களை அரசு கேட்கும் போதெல்லாம் தாரை வார்ப்பது. அமைச்சர்கள் லஞ்சம் பெற்று செய்யும் நியமங்களுக்குத் துணை போவது. அமைச்சர் காட்டும் கட்சிக்காரன்களை அறங்காவலர்களாக நியமனம் செய்வது. எப்படி உருப்படும் கோயில் நிர்வாகம்? ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் கடந்த 5 வருடங்களாக ஊழலில் திளைத்த கோயில் நிர்வாகம். இது குறித்து இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் சிறப்பான கட்டுரை. ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் கொள்ளலாம் - எந்த கோயில் நிர்வாகம் RTI விண்ணப்பங்களை பதில் அளிக்க மறுக்கிறார்களோ, அந்தக் கோயிலில் ஊழல் மிக அதிக அளவில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். எந்தச் செயல் அலுவலர் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட விவரங்களைச் சட்ட விரோதமாகத் தர மறுக்கின்றாரோ அவர் பெரிய கேடி, கோயில் திருடன்/திருடி என்று தெரிந்து கொள்ளலாம். இதில் ஆணையர் அலுவலக தகவல் அதிகாரியும் அடக்கம் - தகவல் தருவது என்றாலே ஆணையர் அலுவலகத்திற்கு வேப்பங்காய். அவ்வளவு ஊழல்/கொள்ளைகள் கடந்த 5 வருடங்களில் நடைபெற்றுள்ளன. இதற்கு முன்பும் நடந்தது. ஆனால் சேகர் பாபு அமைச்சராக இருந்த காலத்தில் தான் ரூ. 5000 கோடிக்கு மேல் கோயில் பணம் மோசம் போனது. இவற்றையெல்லாம் அமைச்சர்

கையில் எடுக்க வேண்டும். சிறந்த பட்டயக் கணக்காளர்களை வைத்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீ பார்த்தசாரதி கோயில், திருச்செந்தூர் கோயில், திருவண்ணாமலை கோயில், ஸ்ரீரங்கம் கோயில், முதலிய முக்கிய கோயில்களில் நுண்ணியல் தணிக்கை செய்ய வேண்டும் செய்வாரா அமைச்சர்
 

No comments:

Post a Comment

தேர்தல் வேட்பாளர் சொத்தை மறைப்பது வெளியினால் வெற்றி செல்லாது

  Yes, a disqualification due to improper or false assets declaration can stop a candidate from contesting future elections, but its enforc...