Sunday, July 22, 2018

தென்புலத்தார்- திருக்குறளை இழிவு செய்யும் தமிழர் பகைவர்கள் உரைகள்

 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை                   (இல்வாழ்க்கை குறள் எண்:43) 

மணக்குடவர் உரை: பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை.

பரிமேலழகர் உரை: தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.



தமிழர் மெய்யியலுரை உரை: இறந்து தென்திசையில் வாழ்பவர்களாகிய முன்னோர்கள் [தென்புலத்தார்/பித்ருகள் ] ,தெய்வம், விருந்தினர்கள் , சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது இல்லறத்தானின் தலையாய கடமைகளாகும்.

தென்புலத்தார் என்பது இறந்த முன்னோரைக் குறிக்கும் என்பதை புறநானூறு 9ம் பாடல் எளிதாய் விளக்கும்
"ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
 பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
 தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன்  இறுக்கும் 
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் . . எம்.
அம்பு கடிவிடுதும், நும்அரண சேர்மின் என, 5                               (புறம்-9)

வன்மை உடையரோடு எதிர்த்துப் போரிடுவதே ஆற்றல் உடையவரின் இயல்பு; எனவே இம் மன்னன், தான் முற்றுகையிடும் நகர்களில் உள்ள வன்மை அற்றாரைப் பாதுகாவலான இடஞ் சேருமாறு முதற்கண் எச்சரிப்பான் என்கிறார் புலவர். அவ்வாறு எச்சரிக்கப்படுவோர் பயன்தரும் ஆணினம், அவ்வியல்புடைய பார்ப்பன மக்கள். பெண்டிர், பிணி உடையவர், புதல்வர்ப் பெறாதோர் ஆவர். இவ்வாறு அறவழி நடக்கும் இயல்பும், துணிவும் உடையவனான எம் குடுமியே! நீ வாழ்க! கடல் தெய்வத்துக்கு முந்நீர் விழா எடுத்து, அதனுள் கூத்தர்க்குப் பசும்பொன் வழங்கிய நெடியோனால் ஆக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளி ஆற்று மணலிலும் பல ஆண்டுகள் நீ புகழுடன் வாழ்வாயாக! - .
சொற்பொருள் : தென்புலம் வாழ்நர் - தென் திசைக்கண் வாழும் பிதிரர்கள்; தம் குலத்தில் வாழ்ந்து இறந்து போன முன்னோர்கள். அருங்கடன் என்றது, அவர்க்குச் செய்யும் நினைவுக் கடன்களை, அக்கடனைப் பொன்போற் கருதிப் பாதுகாத்துச் செய்யும் இயல்புடைமை பற்றிப் பொன்போற் புதல்வர் என்றார். 6. பூட்கை மேற் கொள்ளுதலையுடையது. பூண்+கை: தொழிற்பெயர். வயிரியர் - கூத்தர். 10. முந்நீர் - கடல்.
தமிழர் மரபை மறைத்த கயமை உரைகள்- தமிழ் பகைவரா  

 சாலை இளந்திரையன் - தென்னிலப் பகுதிகளில் உள்ளவர்
 இலக்குவனார் -தென்னாட்டவர்
 இளங்குமரன் -தெளிந்த அறிவினர்
குழந்தை - தென்னாட்டவர்
வளன் அரசு (ஜோசப் ராஜ்) -வாழ்ந்து மறைந்தோர் 
க.ப.அறவாணன்- அரிய பெரிய வாழ்வு வாழ்ந்து மறைந்தோர்
தமிழர் மரபை ஏற்காது மிகவும் கேவலமாய், கிறிஸ்துவ காலனிய பன்றித்தன மதமாற்றத்தின் அடிமைகளாய் எழுதப்பட்ட உரைகள் சில.

No comments:

Post a Comment