Tuesday, July 3, 2012

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?

ஏசு சீடருடன் இயங்கிய காலம் எத்தனை நாள்?

images?q=tbn:ANd9GcRWOFQ85jZCnvhRbLCp73-9UV1TzeAQrYjWmmfKjTo44GRmmVQkdg
மாற்கு1:4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.
images?q=tbn:ANd9GcS2IrQgWsLROFBrs_widsiiFrodJr8Y1d0cBWPxnNLymOie7BNqlA
16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்கு தரும் யோவான் யூதேயாவை ஒட்டிய எல்லை ஓர வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, வந்தார்.-//   அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெற்றார்//

மாற்கு சுவிசேஷம் கதைப்படி, ஞானஸ்நான யோவான் கைதான பிறகு, கலிலேயா சென்று அங்கே ஏசு இயக்கம் ஆரம்பிக்கிறார். பிறகு 

மாற்கு 10:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
32 அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். 
மாற்கு 11:1 இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி,2 ″ உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.3 யாராவது உங்களிடம், ' ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? ' என்று கேட்டால், ' இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார் ' எனச் சொல்லுங்கள் ″ என்றார்.
images?q=tbn:ANd9GcSEsfiEa-ECx3QiwkAm2QEoM_dc2tBHx1hSbjyheplu5vFQ7h1reQimages?q=tbn:ANd9GcSBHjQiGdewCTgHIfh9_OshPER0Lg4BjKYBsKpZ6UAi1n6qHJ6lvg
.9 முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், 'ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!footnote.jpg10 வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! ' என்று ஆர்ப்பரித்தனர்.11 அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மாற்கு14:1 பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. 
images?q=tbn:ANd9GcQ-UHLePqlFWsdqL3orcqHgT3TbA6elfbIyP02ubJFV2LE0VFLQRg
12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.13 அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: ' நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள்.14 அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ' நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே? ' என்று போதகர் கேட்கச் சொன்னார் ' எனக் கூறுங்கள்.15 அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள். ' 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
18 அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, '
                          ---------------------------------------------------------------

மாற்கு சுவியில் நாம் மேலே பார்த்த வாக்யங்கள்படியாக, ஞானஸ்நான யோவானிடம் சென்று, ஏசு பாவமன்னிப்பு-மனம்திரும்புதல் ஞானஸ்நானம் பெறுகிறார், உடனே ஞானஸ்நான யோவான் கைதாகிறார்.
ஏசு யூதேயாவை விட்டு கலிலேயா வந்து சீடர் சேர்த்து இயக்கம் தொடங்குகிறார்.
images?q=tbn:ANd9GcRsloqG10e0nxPPxYO83xpnusMedcAef-KLeAvPCM5BsXiyAM9f  
இஸ்ரேல் நாட்டின் புராணக்கதைப்படி எகிப்தில் பஞ்சம் போக்க சென்ற எபிரேயர்கள் அடிமைப்படுத்தப்பட, மோசே செய்த அதிசயங்கள் பார்த்து எகிப்து அரசன் அவர்கள் திருமிபிசெல்ல அனுமதித்தும், கர்த்தர் அரசன் மனதை மாற்றி, கடைசியில் எபிரேயர்கள் வீடுகளில் ஆட்டு ரத்தக் குறிபோட, எகிப்தியர்களின் முதல் குழந்தை, முதல் மிருகக் குழந்தைகளை கர்த்தர் கொலை செய்தார். எகிப்தியரின் அப்பாவி சிறுகுழந்தைகளை மட்டும் கொலை செததற்கு நன்றியாக ஒவ்வொரு வருடமும் கர்த்தரின் ஒரே இடமான ஜெருசலேம் யூத ஆலயத்தில் ஒவ்வொரு யூதரும் ஒரு ஆடு கொலை செய்து பலி தர வேண்டும்.
லூக்கா2 :41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப போவார்கள்  42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்

தீவீரமான யூதரான ஏசுவும் இயக்கம் தொடங்கியபின் வந்த முதல் பஸ்கா பண்டிகை ஆடு-கொலை-பலி செய்ய ஜெருசலேம் வந்தபோது கைதாகி மரணமானார்.

அப்படியென்றால் இயேசு சீடரோடு வாழ்ந்த காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு. 

இதே கதையை தான் மத்தேயும்- லூக்காவும் திரும்பி சொல்கிறார்கள்.


நான்காவது சுவியில் ஏசு 3 முறை ஜெர்சலேமிற்கு ஆடு கொலை பஸ்கா பண்டிகை செல்லுதல் வருகிறது.

யோவான் 2:13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 

யோவான் 6:4 அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது.

யோவான் 11:55 யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது, அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.

யோவான் 12:1 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.

யோவான் 13:1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

யோவான் 18:28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல்பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள்.

முதல் பண்டிகக் முடிந்து திரும்பும்போது பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்கு பெற்று, 

பின்னர் வந்த 2 வருடம் 
பஸ்காவிற்கு வந்து, அதன் கடைசியில் கைது எனில் ஏசு சீடருடன் இயஙிய காலம் 2 வருடம் + சில நாட்கள்.


 இரண்டில் எது உண்மை-எது பொய்? இரண்டுமே பொய்யா? ஏன் உண்மையை மாற்றி தந்தனர்?

புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய்ந்ததா?








10 comments:

  1. அழகாக விளக்கி உள்ளீர்கள்.

    நண்ரி, ஆனால் இதை நீங்கள் படித்து பதில் சொல்லவும்.
    http://www.bibleuncle.com/2009/09/blog-post.html

    ReplyDelete
  2. ஐயா,

    இவற்றை முன்பு யாரும் சொல்லவே இல்லை.

    ReplyDelete
  3. http://www.tamilbible.org/books/41.html
    இந்நூலிலும் ஆசிரியர் தன் பெயரை நேரடியாக குறிப்பிடாவிடினும், இந்நூலை எழுதியவர் யோவான் மாற்கு என்பதில் எப்பொழுதும் சந்தேகம் எழுந்ததில்லை.
    இவர் பேதுரு மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு (1 பேதுரு 5:13) பேதுருவோடு அதிகமாக இணைந்து ஊழியம் செய்தார். புதிய ஏற்பாட்டில் இவரைப்பற்றி எட்டு இட்களில் வாசிக்கின்றோம். பவுலின் முதலாவது மிஷினரி பயணத்தின்போது யோவான் மாற்கு அவரோடு இணைந்து புறப்பட்டார். இவர் பர்னபாவின் உறவினர் (கொலோசெயர் 4:10).

    எப்பொழுது எங்கிருந்து எழுதப்பட்டது?

    எழுதப்பட்ட காலத்தை நோக்கும்போது கி.பி.40 முதல் 70க்குள் எழுதப் பட்டிருக்க வேண்டும் எனினும் நற்செய்தி நூல்களில் இந்நூல் முதலாவதாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உண்மை எல்லா வேத ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பவுல், பேதுரு அகியோரது சிறையிருப்பின் காலத்தில் (கி.பி.64-67) மாற்கு அவர்களோடு அங்கு தங்கியிருந்ததை நாம் வாசிக்கின்றோம், (1 பேதுரு 5:13, கொலோ 4:10). இக்காலத்தில் மாற்கு இந்நூலை எழுதியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேற்கூறிய காலத்தில் மாற்கு தங்கியிருப்பாரானால் அவர் ரோமாபுரியிலிருந்து எழுதியிருக்கவேண்டும். மேலும் மாற்கு ரோமாபுரியோடு அதிகம் தொடர்பு கொண்டிருந்தார் என நாம் வேதத்தில் பார்க்கிறோம் (2 தீமோ 4:11).

    ReplyDelete
  4. மத்தேயு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார் என்பதை இப்புத்தக்தில் நேரடியாக காண முடியாவிடினும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்கள் (ஊhரசஉh குயவாநசள), குறிப்பாக பேப்பயஸ் (Pயியைள) (கி.பி. 100), வரலாற்று ஆசிரியர் எசுப்பியஸ் (நுரளரடிரைள) ஆகியோரது வரலாற்று குறிப்புப்படியும் சபை பாரம்பரியப் படியும் (ஊhரசஉh வுசயனவைழைn) மத்தேயு இந்நூலை எழுதினார் என்று தெளிவாக எடுத்துக்கூற முடியும். இந்நூலை கிரேக்க பதத்தில் மத்தேயுவின் கூற்று அல்லது வாக்குமூலம் என மொழி பெயர்க்கலாம். இவர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராவார். மத்தேயு என்பதற்கு ~ஆண்டவரின் அன்பளிப்பு| (புகைவ ழக வாந டுழசன) என்று பொருள். இவர் வரி வசூலிப்பவராக இருந்து இயேசுவை பின்பற்றியவர் (மத்தேயு 9: 9-13). மாற்கு, லூக்கா இருவரும் இவரை லேவி என்று அழைக்கின்றனர்.

    காலம், எழுதப்பட்ட இடம்;

    இந்நூலில் யூத சமய கருத்துக்கள், எபிரேய பெயர்கள், அதிகமாக காணப்படுவதால். இது பாலஸ்தீனா தேசத்திலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். எனினும் சிரியா அந்தியோகியாவிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது.

    எழுதப்பட்ட காலத்தைக் குறித்து அதிக கருந்து வேறுபாடுகள் இருப்பினும், இரண்டு கருத்துக்களே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. முதல் கருத்து கி.பி.50 இரண்டாம் கருத்து கி.பி.70.

    ReplyDelete
  5. அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தையும் லூக்கா நற்செய்தி நூலையும் எழுதியவர் மருத்துவராயிருந்த லூக்கா என்பது தெளிவாக புரிகிறது. இரண்டாம் நூற்றாண்டு திருச்சபைப் போதகர்கள் எழுதிவைத்துச்சென்றுள்ள குறிப்புகள் இதை வழிமொழிகின்றன. குறிப்பாக இரேனேயுஸ் (ஐசநயெநரள) மற்றும் முரட்டோரியன் (ஆரசயவழசயைn) ஆகியோரது குறிப்பும் இக்கருத்தை தெளிவுபடுத்துகின்றன.

    லூக்கா 1:1ன் படியும் அப்போ 1:1ன் படியும் மகா கனம்பொருந்திய தெயோப்பிலியு எனப்பட்ட தனிநபருக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். தெயோப்பிலியு ரோம அதிகாரியாகவோ அல்லது ரோம அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம்.

    தெயோப்பிலியு - தமிழ் மொழிபெயர்ப்பின்படி ~தேவனுடைய நண்பர்கள்| அல்லது ~தேவனை நேசிப்பவர்கள்| என்பது பொருள். ஏனவே இப்புத்தகம் தேவனை நேசிப்பவர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம்.

    காலம்

    லூக்கா நற்செய்திநூல், மாற்கு நற்செய்திநூலுக்கும் அப்போஸ்தலரின் நடபடிகளின் புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். எனினும் கி.பி. 59-63ல் எழுதப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    எழுதப்பட்ட இடம்

    அகாயா, செசரியா, எபேசு ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும் ரோமாபுரியிலிருந்து எழுதினார் என்னும் கருத்து சற்று மேலோங்கியுள்ளது. இருப்பினும் தேயோப்பிலு என்னும் ரோம அதிகாரி வாழ்ந்த இடமே இப்புத்தகம் எழுதப்பட்ட இடமாக இருக்கக்கூடும்.
    http://www.tamilbible.org/books/42.html

    ReplyDelete
  6. யோவான்- எழுதியவர் தன்னை 'இயேசுவிற்கு அன்பாய் இருந்தவர்" (யோவான் 21:20,24) என்று அறிமுகம் செய்கின்றார். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் 3 பேர் அவருடன் அதிக நெருக்கமாக இருந்தனர். அவர்கள் யோவான், யாக்கோபு, மற்றும் பேதுரு ஆவார்கள். 13:23,24ல் பேதுரு இந்நூலை எழுதியவர் இல்லை என்பது உறுதியாகிறது. யாக்கோபு கி.பி.44ல் (அப்போஸ்தலர் 12:2) ஏரோது மன்னரால் கொலை செய்யப்பட்டு விட்டார் எனவே யோவான் மட்டுமே இந்நூலை எழுதியிருக்க முடியும் மேலும் இந்நூல் முதலாம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அக்காலம் வரை உயிரோடிருந்த சீடர் யோவான் மட்டுமே.
    காலம்

    எழுதப்பட்ட காலத்தைப்பொருத்தவரை இரண்டு கருத்துக்கள் நிலவுகிறது.

    1. கி.பி.85ல் எழுதப்பட்டது. மற்ற மூன்று நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட பின்பு யோவான் இந்நூலை எழுதினார். எனவேதான் முதல் மூன்று நூல்களில் கூறப்பட்டிராத காரியங்களை தன்னுடைய நூலில் கூறியுள்ளார். மேலும் இவரது இறையியல் (வுhநழடழபல) சற்று வளர்ச்சியடைந்தது

    2. கி.பி.50க்குப்பின் 70க்கு முன் எழுதப்பட்டிருக்கவேண்டும் ஏனெனில் கி.பி.70ல்
    எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது. ஆனால் யோவான் 5:2ல் எருசலேம் தேவாலயம் நிகழ்கால வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற வசனங்கள் இக்கருத்துக்கு வழி மொழிகின்றன.

    நோக்கம்

    யோவான் 20:31ல், இந்நூலின் நோக்கம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    "இயேசு தேவனுடைய குமாரானாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும் படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும் படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது."
    http://www.tamilbible.org/books/43.html

    ReplyDelete
  7. நன்றி நண்பர் கருப்பையாவிற்கு.

    அடுத்த தலைப்பு- சுவிசேஷங்கள் எழுதியது யார்?

    ஆயினும் இங்கு காப்பி- பேஸ்ட் செய்த்மைக்கு பதில் நீங்களே கிழுள்ள வலதளத்தில் பார்க்கலாம்.

    http://www.arulvakku.com/biblecontent.php?book=Mat&Cn=1

    சுலைமான் உங்களுக்கும் பதில் அதிலேயே உள்ளது.

    ReplyDelete
  8. மாற்கு ஏன் இவ்வாறு மாற்றி எழுதினார்.

    மத்தேயு சீடர் எனில் மாற்கு செய்த தவறை ஏன் சரி செய்யவில்லை?

    யோவான் சுவிசேஷத்தின்படி 2 வருடம் ஏசு சீடருடன் இயங்கினார் எனில் - மாற்கு எந்த காலத்தைக் குறைத்தார்? -அல்லது நீக்கினார்? ஏன்?

    ReplyDelete
  9. ஆனந்தன் உங்கள் கேள்விகளுக்கு தனி பதிவில் காரணம் தேடப் படலாம்.

    ReplyDelete
  10. தாங்கள் சொன்ன வலைதளம் சென்றேன்.

    எந்த சுவிசேஷமும் கண்ணால் கண்டவரால் எழுதப்படவில்லை என்பதை தெளிவாக்கியது.

    http://arulvakku.com/biblecontent.php

    நன்றி.

    ReplyDelete

ஜாதி உணர்வை வளர்த்துள்ள 57 ஆண்டு திராவிடியார்-ஆட்சி - சோ.தர்மன் சாகித்திய அகடமி விருது எழுத்தாளர் பதிவு

  தமிழகததை 57 ஆண்டுகளாக ஆட்சி செய்வது ஈ.வெ.ராமசாமியார் வழி திராவிடியார்- ஜாதிய உணர்வு வளர்த்து உள்ளனர். சாகித்திய அகடமி விருது பெற்ற எழுத்தா...